30.12.11

மதம் பிடித்த மதனியின் வெறி பிடித்த விமர்சினம்

அபூ ஸஹ்த் - கொழும்பு.

(உ. உதயம் மாத இதழில் M.J.M. ரிஸ்வான் மதனியினால் எழுதப்பட்ட, "பிறர் குறைகளை மறைப்பீர்" என்ற ஹதீஸ் தெளிவுரைக்கு மறுப்பாக இக்கட்டுரை இடம்பெறுகிறது)

எவர் ஒருவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ, அவரது குறையை அல்லாஹ் மறுமையில் மறைப்பான் என நபி   அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

ஒரு முஸ்லிம்ன மானம், மரியாதை என்பன எந்தளவு பெறுமானம் மிக்கதென்பதையும், இம்மையில் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பது, மறுமையில் எவ்வளவு மகத்தான நற்கூலியை பெற்றுத் தரும் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.


மேற்கண்ட ஹதீஸுக்கு ஜனவரி 2007 உண்மை உதய மாத இதழில், M.J.M. ரிஸ்வான் (மதனி) என்பவர் தெளிவுரை (?) வழங்கியிருந்தார;. எனினும், தெளிவுரை என்ற போர;வையில், தரக்குறைவான சொற்பிரயோகங்களை சகட்டுமேனிக்குப் பயன்படுத்தி, ஓர் அறிஞரை தூசிக்கப் புறப்பட்ட இந்த மதனி,  அதுவும் தமிழ் பேசும் உலகுக்கு, எந்த நிறுவனத்திடமும் சம்பளம் பெறாது, இத்தகைய கூலிப்பிபடைகளை விட தவ்ஹீதை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் இஸ்லாத்தின் மற்ற அனைத்து விடயங்களையும் ஆய்வு ரீதியாகவும் அதில் ஊருக்குப் பயந்து உண்மைகளை மறைக்காமல் துணிவாகவும் எடுத்துச் சொல்வதில் முன் நின்று உழைகை;கும் ஒரு அறிஞரைக் குறி வைத்து, வெறி பிடித்து, எழுதியிருந்தது வருத்தத்திற்குரிய விடயமே.

 ஹதீஸ் தெளிவுரை என்ற பெயரில், உலக சாதனை படைக்க நினைத்து, தோற்றுப் போன, மன நிலையின் சமநிலை பாதிக்கப்பட்ட ஒரு உள நோயாளியின் உளறல்களே உ. உதயத்தின் 5 பக்கங்களை ஊதாரித் தனமாக வீணடித்திருந்தது. அதில் உளரிக் கொட்டியது ஒரு மன நல வளர;ச்சி குண்றிய உள நோயாளி எனினும், எப்படி விமர;சனம் அமைய வேண்டும் என்ற குறைந்த பட்ச நாகரிக தர;மம் கூட பேணப்படாத அதேவேளை, தெளிவுரைக்கும் விமர;சனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் கிறுக்கப்பட்ட அக்கட்டுரையைப் பிரசுரித்த சஞ்சிகைக் குழு தம்மையும் தரம் தாழ்த்திக் கொண்டது. எனவே,   அதனைப் பிரசுரித்தவர;களுக்கும் அதற்குப் பின்னணியிலுள்ளவர;களுக்கும் எமது மறுப்பையும் பொது மக்களுக்குச் சொல்லவேண்டிய அதனோடு தொடர;புபட்ட மேலும் சில  விளக்கங்களையும் ஒழிவு, மறைவின்றி எடுத்துச் சொல்ல நாம் இவர;களால் நிர்பந்திக்கப்பட்டுவிட்டோம்.

ஒருவரை அநியாயமாக விரல் நீட்டிக் குற்றம் சாட்டும் போது, மூன்று விரல்கள் நம்மை நோக்கித்தான் திரும்புகின்றன என்று ஒருவர; சொல்லிச் சென்றார;. அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக இவா;களுக்குப் பொருந்திப் போகிறது.

பிரஸ்தாப கட்டுரையாளர், சாடை மொழியில் சாடியிருப்பது தமிழ் பேசும் உலகில் தலை சிறந்த தாஈயாக திகழும் சகோதரர்  P. ஜைனுல் ஆப்தீன் அவர்களைத்தான் என்பது பகிரங்க இரகசியமாகும். உ.உதயத்தில் சொல்வதை நேரடியாகவும் தெளிவாகவும் சொல்லத் திராணியற்ற, துணிவற்ற போக்கு, அவர்களை இப்படி ஒழிவு, மறைவாக வெறிபிடித்து, கோழைத்தனமாக எழுதவும் துhசிக்கவும் வைத்துள்ளது.

சந்திரனின் ஒளியின் நிழலில் நின்று கொண்டு, அதைப் பார;த்து நாய்கள் குரைப்பதால், அதன் ஒளிக்கு எந்த சேதமும் வந்துவிடுவதில்லை. அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும். பரிதாபம்! “ஈயத்தைப் பாh;த்து பல் இழிக்கிறது பித்தளை.” மனசு மரித்துப் போன சிலர;, Pது மீது வசை பாடுவதையே தமது முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர;. எனினும், ஊலையிடும் ஓநாய்களின் ஓசைகளால், உறுதியாக தனது வேர;களை ஆழப்பதித்திருக்கும் மலைக்கு எதுவும் ஆகிவிடுவதில்லை.

கடந்த 2005ஆம் ஆண்டு P.து. அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட தஃவா சுற்றுப் பயணம் இந்த நாட்டிலே குர்ஆன், ஸுன்னா போதனையில் எவ்வளவு மகத்தான மாற்றத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது என்பதை மனசாட்சி உள்ள யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. P.து. அவர்கள் இதற்கு முன் பல தடவைகள் இலங்கைக்கு வந்திருந்தாலும், அவரது பிரசார மேடைகளை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அமைத்துக் கொடுத்த ஏற்பாட்டாளர்களின் செயல்களால், அன்று சத்தியப் பணியில் மகத்தான மாற்றத்தை காண முடியாமல் போனது. ஆனால், P.து.யின் கடந்த வருட இலங்கை வருகையின் போதுதான், அவர; மக்கள் மத்தியில் அழைத்துச் செல்லப்பட்டார். கொழும்பு, காலி, மாவனல்லை, அக்குரணை, காத்தான்குடி, புத்தளம் என்று பல இடங்களில் பகிரங்க சொற்பொழிவுகள், இடத்திற்கேற்ப பொருத்தமான தலைப்பிடப்பட்டு பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டன. குர்ஆன், ஹதீஸ் நிழலில் மிகத்தெளிவாக, அனைவரும் புரியும் வகையில் அவர; ஆற்றிய  ஆணித்தரமான சொற்பொழிவைக் கேட்க, இதுவரை இலங்கை தஃவா  வரலாறு காணாத மக்கள் வௌ;ளம் அலை மோதியது. அதன் விளைவாக எமது நாட்டில் கொள்கைப் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இதைக் கண்டு கொதித்தெழுந்த அசத்தியக் கும்பல் P.து.வுடைய ‘விஸா’வைக் ‘கேன்ஸல்’ பண்ணும்; அளவுக்குக் கங்கணம் கட்டிச் செயல்பட்டது. P.து.யின் இலங்கை வருகை சத்தியப் போதனையில் ஏற்படுத்திய இந்த அசுர வளர்ச்சியையும் ஆர;வ மேலீட்டையும் கண்டு ‘கப்று’ வணங்கிகள், ‘பித்அத்’வாதிகள் போன்ற வயிறு வளர;ப்போர; சஞ்சலப்பட்டதொன்றும் அலட்டிக் கொள்ள வேண்டிய விடயமல்ல. ஏனெனில், உண்மையை ஊரறிய உரத்துச் சொன்னால், இவையெல்லாம் வரத்தான் செய்யும் என்பது வரலாற்றுப் பாடங்கள்.

 எனினும், துரதிஷ்டவசமாக குர்ஆன் - ஸுன்னா போதகர்கள் என்று தம்மைத் தாமே அடையாளப்படுத்திக் கொண்டு, பித்அத்திற்கும் ஷிர;க்கான கவிதைகளுக்கும் உதவி செய்து, பொதுப் பணத்தினால் வயிறு வளர;க்கும் ஒரு கூட்டமும் P.து.யின் வருகையால் சஞ்சலப்பட்டதே ஆச்சரியமான விடயமாகும். பள்ளிவாசல் கட்டுவதையும், கிணறு வெட்டுவதையும் தவிர வேறெதையுமே சாதிக்காத இந்த வெற்றுக் கும்பல், P.து.யின் தஃவாவினால் அடி அசைந்து போனது.

 கடுகதி ரயிலைப் பார்த்து வெற்று வயலில் நின்று கத்தும் எருமைகளைப் போல், வேகமாகவும் விவேகமாகவும், ஒரே நேரத்தில் மாற்றாருக்கும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்தின் அனைத்துப் பகுதிகளையும் பற்றி தஃவா செய்யும் ஒரு தாயியைப் பார்த்து, இவர்கள் காரணமின்றி வெறிக் கூச்சல் போடுவது ஏன்!?

இதுகாலவரைக்கும் தஃவா என்கின்ற போர்வையில் அரபு நாட்டு அடிவருடிகளாகவும், ஷேக்குகளின் கூஜா தூக்கிகளாகவும் செயல்பட்டு, பணம் போட்டால் பேசும் Pசந-Pயனை தாஈகளாகவே இவர்களில் பெரும்பாலானவர;கள் இந்த நாட்டில், சுயநலச் சுகண்டியில் சுழன்றடித்து, வலம் வந்தனர். கொள்கைவாதிகள் பத்து பேர் கூட இல்லாத ஊர்களில், பல கோடி ரூபா பெறுமதியான பள்ளிவாசல்களைக் கட்டுவதும், அதன் திறப்பு விழாக்களில், தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத் என்பன கொள்கையில் ஒன்றுபட்டுள்ளன. ஜம்இயத்துல் உலமா மூன்று ஜமாஅத்தையும் அங்கீகரித்துள்ளது என்று முழங்கி, குத்பா ஓதிவிட்டு, கண்முன்னால் கூட்டு துஆவுக்கு ஆசிர;வாதம் வழங்கி, அன்றே பள்ளிவாசல்களை சுநளவயரசயவெ  ஆகப் பயன்படுத்தும், ஜூப்பாவுக்குள் பகுத்தறிவைப் பத்திரப்படுத்திய ‘பித்அத்’வாதிகளுக்கு தாரை வார்ப்பதும், கிணறுகளை வெட்டி கல்வெட்டுக்களில் அரபு நாட்டுக்கு விளம்பரம் தேடிக் கொடுப்பதும், அதன் மூலம் கிடைக்கும் முல்லை சூப்பிக்கொண்டு, ஒட்டகங்களுக்கு விசுவாசமாக இருப்பதும், தவ்ஹீதை வளர;ப்பதை விட, தவ்ஹீத்வாதிகளைப் பகிரங்கமாக எதிர;க்கும் கயவர;களுக்கு உதவுவதும் இவர்களின் தலையாய கடமையாகவும் தஃவா வழிமுறையாகவும் இருந்து வருகிறது. இவர;கள் பற்றி “…உதவி கேட்டு சமூக சேவை நிறுவனங்களிடம் போனால் அவர;கள் நாங்கள் மாடு தருவோம், பள்ளி கட்டுவோம், கிணறு தோண்டுவோம் என்ற பாலை வனப் பிரச்சினைகளுக்குத் தீh;வு தேடிக் கொண்டிருக்கின்றார;கள். ஆனால், வட்டி முறை வங்கிகளிடம் வீட்டுக் கடன் திட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றின் வட்டி வீதமும் குறைவானதுதான்.” (மீள்பார;வை பெப்ரவாp 2006-இதழ்-114 ப-16) “சமூக தேவைகளில் காpசனை காட்டாத பிடிவாதத் தனம். (பள்ளிவாசல்கள் மட்டும்தான் கட்டித் தருவேன், குh;பானிக்கு மட்டும்தான் காசு தருவேன் போன் பிடிவாதங்கள்)” (மீள்பார;வை ஜனவாp 2006-இதழ்-113 ப-06)  என்றெல்லாம் முரப்பி, காலித் புத்ரன் எழுதும் அளவுக்கு நிலைமை சீரழிந்துள்ளது.

மேலும், பள்ளி வேண்டுமா? என்று ஊர; ஊராய் அலையும் உங்கள் தொழில் அவலத்தைப் பற்றிய முரப்பியின் வக்கிர வரிகளைப் படியுங்கள். “…சமூகக் கட்டுக்கோப்பை கவனமாய் சீர்குலைக்கும் ஒரு செயல்வடிவம். அண்மைக்காலமாய் அதிகரித்து வரும் ஒரு செயல் வடிவம். அதுதான் கிராமங்களில் சில இளைஞர்கள் தூண்டப்பட்டு, அவர்கள் தமக்கென தனியான பள்ளி வாயல்கள் அமைத்துக் கொண்டு செல்வது. ஆரம்ப நாட்களில் வெறும் ஐந்து நேரத் தொழுகைக்காக மட்டுமே அந்தத் பள்ளி வாயல்கள் பயன்பட்டன. ஆனால் தற்போது, ஜும்ஆத் தொழுகைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. கிராமங்களில் கட்டுக்கோப்பை மீறி விளைவுகள் பற்றி சிறிதும் கவலைப்படாமல், பேச வந்த சமாதானப் பேச்சுக்களையும் எட்டிக் காலால் உதைத்து விட்டு ஆரம்பிக்கப்பட்டன அந்த ஜும்ஆத் தொழுகைகள். பித்அத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்வது இஸ்லாத்தில் கூடுமா கூடாதா என்ற வாதவிவாதத்திற்கப்பால், இதில் இருக்கிற ஒரு அபாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம்களின் பிரதான தேவை ஒன்றுபடுவதுதான்; பிரிவது அல்ல. உலகெங்கும் முஸ்லிம்களைப் பீடித்துள்ள பெரிய நோய் பிரிவினைதான். உண்மையில் இது திட்டமிட்டு நுழைவிக்கப்பட்ட நோய். எதிரிகளின் முன்னால் முஸ்லிம்களது பலத்தைக் குறைப்பதற்கான ஒரு முயற்சி இது. அந்த எதிரிகளின் முயற்சிக்குப் பலம் சேர்க்கக் கூடாது. கிராமங்களில் நடைபெறும் இத்தகைய பிரிவினைகள் முஸ்லிம்களின் கட்டுக்கோப்பை குலைத்து, எதிர்கால இருப்பைப் பலவீனப்படுத்துகிறது. அதுதான் எதிரிகளின் நோக்கம், அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இடமளிக்கக் கூடாது…”(மீள்பார;வை இதழ் 97 ப 17)

  தவ்ஹீத்வாதிகள் அழைப்புப் பணியில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர;வு பெற்றுத் தரக் கூட, மக்களோடு கலந்துறவாடும், நிதானமாக, அறிவுவழியில் செயற்படும் ஒரு நல்ல தலைமைத்துவம் இல்லாத, அநாதரவான அழைப்புப் பணியே இந்த நாட்டில் இரண்டு தசாப்தங்களாக நடைபெற்று வந்தது. திடீh; திடீரென பல பண நிறுவனங்கள் முளைத்து, அவற்றிற்கிடையே பணப் பகிh;வுப் பனிப் போர; உக்கிரமமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை,   P.து.யின் இலங்கை வருகை தஃவா களத்தில் அத்திபாரம் தொடக்கம் ஓர் அதிரடி மாற்றத்தின் அவசியத்தை உணர்த்தி, தேசிய தலைமைத்துவத்தின் தேவையை எடுத்துக் கூறியது. அதற்கான முதல் முயற்சியும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எனும் பெயிரில் முடுக்கிவிடப்பட்டது. இதைக் கண்டு கொதித்து எழுந்தவர்கள் பித்அத்வாதிகள் அல்லர;. கிணறு வெட்டும் தவ்ஹீத்வாதிகளே ! குழி வெட்டும் பணியையும்  சேர;த்து சதித் திட்டங்களை ஆரம்பித்தனர்.

 அரபு நாட்டு கூஜா தூக்கிகள் எல்லாம் அவர்களுக்கு மத்தியிலிருந்த வேற்றுமையிலும் ஒற்றுமையைக் கண்டனர். P.து. எதிர்ப்புப் படலம் அவர்களை ஒற்றுமைப் படுத்தியது. அதன் விளைவாக ஒரு போட்டித் தலைமைத்துவம் உருவாயிற்று. (இது போட்டிக்கு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என்பதால், அதற்குள் தற்போது தலைமைத்துவப் போட்டி நிலவி, சில பழுத்த தாஈகள் பழைய அமைப்புக்குள் ஒதுங்கிப் போய் விட்டதாக அறிகிறோம்.)

 சுயமாக உழைத்து, பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அல்லது உடலமைப்பு ரீதியில் ஒருவர் தன்னை விட அழகானவனைக் காணும் போது, ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இதுபோன்ற நிகழ்வுகளை நாம் சர்வசாதரணமாகக் காண்கின்றோம். ஆனால், என்னை விட ஒருவர; அதிகமாகவும் அழகாகவும் ஆழமாகவும் ஆய்வு ரீதியாகவும் அழைப்புப் பணி செய்கிறாh; என்று பொறாமை கொள்ளும் கீழ்த்தரமான உணர;வுள்ள, உளநோயால் பீடிக்கப்பட்ட தாஈகளைப் பற்றியும் தற்போது கேள்வியுறுவது வேதனைப்பட வேண்டிய சமகால சமாச்சாரங்களில் ஒன்றாகிவிட்டது.

 இந்தப் பொறாமையின் விளைவால் இவர்கள் தங்கள் தஃவாப் பணியை அதிகரித்திருந்தால், அந்த வேதனையிலும் ஓர் இன்பத்தைக் காணலாம். ஆனால், அதிகமாக அழைப்புப் பணி செய்பவரை அடியோடு அழித்திட நினைப்பதுதான் ஆச்சிரியமாக உள்ளது. அந்த நினைப்பே ரிஸ்வான் (மதனி)யையும் இதுபோன்ற P.து. வசைபாடும் கட்டுரையை வரையத் தூண்டியுள்ளது. எச்சில் வடிக்கும் தெருவோர நாய்க்கு எங்கு அடிபட்டாலும் பின்னங்காலை துhக்கிக் கொண்டுதான் ஓடும். அதுபோன்றுதான் இவா;களின் நிலையுமுள்ளது.

சொற்ப வெளிச்சம் உள்ள உருகும் மெழுகு திரியைக் கையில் வைத்துக் கொண்டு, ஆகா! இது சூரியனை விடப் பிரகாசமாக உள்ளது என்று வாதிடும் இந்த பகுத்தறிவுப் பாலகா;களை(?)எந்த சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவது? புதிய மருத்துவ மனைகளும் இவர;களுக்காக அமைக்க வேண்டியுள்ளது.

இவர்களின் P.து. எதிர்ப்புப் படலம் இவர்களை என்ன நிலைக்குத் தள்ளியுள்ளது என்று பாருங்கள்.

1         P.து.யின் இலங்கை வருகைக்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தினகரன் பத்திரிகையில் அறிக்கை வெளியிட வைத்தது.

2         2005ம் ஆண்டு ஏகத்துவப் பிரசாரத்திற்காக இலங்கை வந்திருந்த வுNவுதுயை சேர்ந்த ஆஷ்ரப்தீன் பிர்தவ்ஸியின் உரை மாவத்தகம, தல்கஸ்பிடியவில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெறவிருந்த வேளை, அதற்குத் தடை விதிக்க வைத்தது.(முன்னர; இவர; துயுளுஆ அழைப்பில் பிரசாரப் பணிக்காக பறகஹதெனிய வந்தவர;)

3         P.து.யின் சீடிக்கள் விற்பனை செய்வதற்கு பரகஹதெனிய அஸ்ஸலபிய்யா புத்தக நிலையத்திற்கு தடைகள் ஏற்படுத்தச் செய்தது.

4         P.து.யின் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டாம் என தாருத் தவ்ஹீத் கலாசாலை ஆசிரியர; மற்றும் மணவர்களைத் தடுக்க வைத்தது. (இது தொடர;பாக அங்குள்ள ஒரு மவ்லவிதான் தகவல் தந்தார;.)

5          பத்திரிகைகளில் தொடர்ச்சியாக P.து.க்கு எதிரான பொய் வாதங்களையும் அவதுhறுகளையும் முன்வைத்து கட்டுரை வெளியிட வைத்தது.

6         ஏகத்துவப் பிரசாரம் செய்யவிடாமல் P.து. வுடைய ‘விஸா’ ‘கேன்ஸல்’ பண்ணப்பட்ட அடிப்படை உரிமை மீறல் தொடர;பாக (புலிகளின் உதயன் பத்திரிகை உட்பட) உலகமே பேசிக் கொண்டிருந்த நேரத்தில், உ.உதயம் ஊமையாகி, அதைப் பற்றி எதுவுமே எழுதாமல் ஒதுங்கியிருக்கச் செய்தது.

7         P.து. வுடைய ஏஐளுயு ‘கேன்ஸல்’ பண்ணப்பட்டு, தஃவாவுக்கு தடை விதிக்ககப்பட்ட அநீதிக்கு எதிராக, அனைத்துத் தவ்ஹீத் வாதிகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்புவோம் என்று முயற்சித்த வேளை, எனக்குத் துhக்கம் வரும் இந்த நேரத்தில் இதைப் பேசுவதா என்று அத்தனை  தவ்ஹீத் வாதிகளின் உணர;;வுகளையும் அலட்சியப்படுத்தச் செய்தது.

8         P.து.யை வெளியேற்ற முன் நின்று உழைத்த கோமாளித் தலைவனுக்கு உலமா சபை நிகழ்ச்சி ஒன்றில் பொன்னாடை போர்த்த வைத்தது.

9         P.து.யை யு+தர்களின் சதிக்கு ஆளானவர் என்றும், முஃதஸிலா, கவாரிஜ் கொள்கைக்கு ஒத்தவர், என்று அக்கிரமத்தனமாக அவதுhறு வசைபாட வைத்தது.

10     P.து. தப்லீக் ஜமாஅத்தின் பாமரத் தன்மையை விமர்சித்ததால், ரிஸ்வி முப்தியிடம் எமக்குள்ள நல்லுறவை பேண முடியாமல் போய்விட்டது என்று, உலமா சபையின் அற்ப பதவிக்காய் அங்கலாய்க்க வைத்தது.

தப்லீக் ஜமாஅத்திலிருந்த போது, P.து. யின் உரைகளால் தவ்ஹீதை விளங்கி, சில காலம் துயுளுஆல் சாரதியாகவும், அதன் பின் யுளுளுயுடுயுகுஐலுலுயு டீழுழுமு ஊநுNவுநுசு ன் ஆயயெபநச ஆகவும் பணியாற்றிய, அண்றாடம் உழைத்து உண்ணும் அண்டை வீட்டு ஏழை வியாபாரியை, நீங்கள் பார;த்துக் கொள்ளுங்கள் என்று அரசியல்வாதிகளின் ளுவலடநலில் துhண்டி, குடும்ப உறுப்பினர;களால் கடுமையாக தாக்கச் செய்ய வைத்தது.அவரும் மகனும் வைத்திய சாலையில் தங்கி நின்று மருத்துவம் பெறுமளவு தாக்கப்பட்டனர;.

“அகிம்சை பேசியவனின்

வாயில் தெறித்தது

எச்சில் அல்ல

என்

சகோதரனின் ரத்தம்”

என்ற இங்குலாபின் கவிதை என் நினைவுக்கு வருகிறது.

கருத்துக்களை கருத்தால் வெற்றிபெற ஆளுமையின்மையால், கரத்தால் வெற்றிபெற வன்முறைகளைத் துண்டிவிடும் இத்தகைய சமகால அரசியல்வாதிகளின் பண்புசார; ஆன்மீகவாதிகளின் பரிதாப நிலையை எந்த “சுன்னா முஹம்மதிய்யா”வில் சேர;ப்பது?

இத்தகைய அராஜகங்களையும், அட்டூழியங்களையும் தொடா;ந்து அரங்கேற்றி வருவதால், அவற்றுக்கு விளக்கம் கூற முற்பட்டால், அவர்களை மட்டும் முஸ்லிமின் மானத்தை சீடிக்குள் சுருட்டும் அழைப்பாளர்கள் என்று அடைமொழி கூறி அழைக்கும் உங்களுக்குத் தான் பிறர் குறை மறைப்பதைப் பற்றி பாடம் நடத்த வேண்டியுள்ளது. எனினும், இத்தகைய பாலர; பிரிவினருக்கும், மன வளர;ச்சி குண்றியவர;களுக்கும் எம்மிடம் பாடத்திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லையே. தருணம் வரும் போது ஆரம்பிப்போம்.

அடுத்து ஒரு முஸ்லிமின் மானத்தைப் பற்றி பேசும் பிரஸ்தாப கட்டுரையிலேயே முஸ்லிமின் மானத்தை கொச்சைப்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள் பஞ்சமின்றி கிடப்பதன் மூலம், பண்பாட்டின் கரடிக் குட்டி, விமர;சிக்கப்ட்ட முஸ்லிமின் மானத்தை எந்தளவு மதித்துள்ளது என்பதை படம் பிடித்து காட்டுகிறது.

ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருப்பவர்களை இஜ்திஹாதிற்குட்பட்ட விடயங்களில், அவர்களின் மானத்தை காற்றில் பறக்க விடுவதும் அவர்களைத் தூற்றுவதும் இஸ்லாமிய வட்டத்தில் இருந்து வெளியேறியவர்களைப் போல் அவர்களை தரம் கெட்டு விமர்சிப்பதும் இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கு அழகானதா? என்று ஓர் அருமையான கேள்வியை பகுத்தறிவுக் குஞ்சு தனது கட்டுரையில் கேட்டுள்ளது. இந்தக் கேள்விகளை ஒரு கண்ணாடியின் முன்னால் நின்று கேட்டால் பொருத்தமாக இருக்கும்.(யார; இத்தகைய தரக்குறைவான விமர;சனங்களையும் தனி நபர; தாக்குதல்களையும் ஆரம்பித்தது என்பதை மட்டுமாவது மனசாட்சியிடம் -அது இருந்தால் - கேட்டுப்பார;க்கவும்.)

பிறர் குறை மறைக்க கட்டுரை வடிக்கச் சென்று, தமது குறைகளை படம் பிடித்துக் காட்டிய ரிஸ்வான் மதனியின் நிலையோ கறிச்சட்டியில் வாய் வைத்த சொறிப் பு+னையின் நிலையாய் மாறிவிட்டது பரிதாபத்திற்குரிய விடயமே. முல்லு ருசியில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டதால், இவர;களுக்கு சூரியனே இருட்டாகத் தெரிகிறது. குதிரைக்குக் கொம்பைக் கொடுக்காத இறைவன், கழுதைக்குக் காலைக் கட்டையாக்கி விட்டதன் தத்துவமும் இங்குதான் வெளிச்சத்திற்கு வருகிறது.

 நியாயத்தை உணர முடியாது, உண்மையைப் பேச முடியாது, அயோக்கியா;களையும் துஷ்பிரயேகம் செய்தவர;களையும் காப்பாற்ற பக்கங்களைப் பாழ்படுத்தி, பொன்னான நேரத்தையும் காலத்தையும் சக்தியையும் வீணடித்து, தீனாருக்கும் திர;கத்திற்கும் அடிமைப்பட்டுப் போன இத்தகைய மனித ஜடங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

நன்றி:அழைப்பு 2007                          

No comments:

Post a Comment

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்