25.12.11

மனித வாழ்வும், பெருந்தன்மையின் முக்கியத்துவமும்.(தொடர் - 03)

அன்பின் சகோதரர்களே! மனித வாழ்வும் பெருந்தன்மையின் முக்கியத்துவமும். என்ற இந்தத் தொடர் ஆக்கம் எனது நண்பர் சகோதரர் மனாஸ் அவர்களினால் எழுதப்படுகிறது. பெருந்தன்மை தொடர்பாக இஸ்லாம் சொல்லும் செய்திகள் என்ன? பெருந்தன்மையினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றிய செய்திகளையெல்லாம் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் கட்டுரையாளர் அழகாகத் தெளிவுபடுத்துகிறார். தொடர்ந்து படியுங்கள் உங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பதியுங்கள்.

                                                         அன்ஸாரிகளின் பெருந்தன்மை.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று என்றைக்கு அந்த மக்கள் அறிந்து ஏற்றுக் கொண்டார்களோ அன்றிலிருந்து ஆரம்பமானது உன்னத சத்திய சீலர்களின் வாழ்க்கையில் விட்டுக் கொடுப்பும் பெருந்தன்மையும்.

ஹஜ்ஜுடைய காலத்தில் ஹஜ் கிரிகையை நிறைவேற்றும் எண்ணத்துடன் மக்கா வந்து நபிகளாரை இரகசியமாக சந்தித்து அவர்களை மதினாவுக்கு வரும் படி அழைப்புக் கொடுத்து, நபிகளாரும் இவர்கள் ஆலோசனை ஏற்று மதீனா சென்ற போது இவர்களின் தியாகமும் பெருந்தன்மையும் மேலும் மேருகூட்டப்பட்டது.  

தங்களின் வாழ்க்கையை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அர்பணித்து உயிரூட்டிய சத்திய சீலர்கள் இன்று வரை இஸ்லாமிய வரலாற்றில் நினைவு கூறப்படுபவர்களாக இருக்கின்றனர். இன்று இந்த உலகில் அரசியல் தலைவர்களையும் மன்னர்களையும் கண்டு விட்ட மனிதகுலம் அவர்களின் பிறந்த நாளின் போதும் நினைவு நாளின் போதும் அவர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்ந்து விட்டு அன்றுடன் அவர்களின் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவார்கள். அவர்களை மீண்டு நினைவு கூற வேண்டுமென்றால் அடுத்து வரும் ஆண்டி அவர்களின் இறப்பை நினைவு கூறும் போதுதான் அவர்களைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால் இனிய இஸ்லாமிய மார்க்கத்திற்காக தங்களையே அர்பணித்து பெருந்தன்மையோடு வாழ்ந்த இவர்கள் இன்று வரையும் ஏன் இந்த உலகம் அழிக்கப்படும் நாள் வரையும் நினைவு கூறப்படுபவர்களாக இருக்கிறார்கள். 

இவர்களின் வாழ்க்கை இவர்கள் கடைப்பிடித்த நல்ல பழக்க வழக்கங்களையும் விட்டுக் கொடுப்பையும் பெருந்தன்மையையும் இன்று வரைக்கும் திருமறைக் குர்ஆன் நினைவு கூறுகிறது. 

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும் இவ்வுரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர்.அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.(59-09)

இன்று வாழ்கின்ற இஸ்லாமியர்களாக இருந்தாலும் இஸ்லாத்தை ஏற்காதவர்களாக இருந்தாலும் அவர்களை நாடி வரக்கூடிய மக்களை குறிப்பிட்ட சில காலத்திற்கு அல்லது நாட்களுக்கு மாத்திரம் நல்லுபகாரம் செய்வதைப் பார்க்கமுடிகிறது. இதற்குத் ஏற்ப தமிழில் ஒரு பழமொழியைச் சொல்வார்கள். பழகப் பழக பாலும் புளிக்கும். என்று ஆனால் இந்தப்  புனிதவான்களுக்குப் புளிக்கவுமில்லை கசக்கவுமில்லை அவர்களின் வாழ்க்கைக்கு பொருந்தவுமில்லை கடைசி வரைக்கும் இன்முகத்தோடு இவர்கள் தங்களிடம் சொத்து செல்வங்களையும், குடும்பங்களையும் இழந்து வந்த அந்த முஹாஜிர்களுக்கு ஆறுதலாக மதினா வந்தது முதல் வந்தவர்கள் அனைவர்களுக்கும் வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் ஏற்படுத்திக் கொடுத்து இவர்களின் சுக துக்கங்களிலும் இரண்டரக் கலந்து வாழ்ந்தார்கள்.

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக் கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர் களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர்  தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.அவர்களுக்குப் பின் வந்தோர் "எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன்: 59:9'10)

.அது மாத்திரமல்லாமல் அன்ஸாரிகளை விடவும் மக்காவில் இருந்து வந்த முஹாஜிர்கள் உழைத்து பெரும் செல்வந்தர்களாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)  உஸ்மான் (ரலி) போன்றவர்கள் அன்ஸாரிகள் முன்நிலையிலே வாழ்ந்தார்கள். அப்படியான நேரங்களில் எந்த அன்ஸாரித் தோழரும் மக்காவில் இருந்து வந்தவர்களுக்கு கடுஞ்சொட்களையோ மனது புண்படும் படியான வார்த்தைகளையோ பிரயோகிக்கவில்லை அவர்களின் உங்களில் வெறுப்பை ஏற்படத்தி விடக்கூடாது. என்றும் அன்ஸாரிகளான நன்மக்கள் அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளனர்.

அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர் களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். அவர்களுக்குப் பின் வந்தோர் "எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர்.  

இன்று வாழக்கூடிய முஸ்லீம்கள் மத்தியில் இந்தக் காழ்புணர்வுத் தன்மையைப் பார்க்க முடிகிறது (பெரும்பான்மையானவர்கள் அல்ல) நமது நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையின் போது இடம் பெயர்ந்து முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் பகுதிகளில் வந்து அகதிகளாக குடியேறி வாழ்ந்து வரும் மக்கள் கடுஞ் சொற்களால் நோவினைப் படுத்தப்படுவதை இன்று அவதானிக் முடிகிறது. ஆனாலும் அன்ஸாரித் தோழர்களுக்கு மத்தியில் இந்த நிலை ஏற்ப்பட்ட போது அவர்களின் உள்ளங்களில் ஷைத்தான் தான் இதனை விதைக்கிறான் என்று நினைத்து விழிப்புணர்வடைந்தார்கள். இது ஷைத்தானின் செயல் என்று அறிந்து இப்படியான சந்தர்ப்பங்களிலும் தங்களுக்குள் காழ்புணர்சிகளை ஏற்படுத்தும் வார்த்தைகளை ஏற்படுத்தி விடாதே என்று அல்லாஹ்விடம் பிராத்தனை செய்தார்கள் நம்மிடமும் இந்தப் பண்பு வரவேண்டும் நம்மை விடவும் ஒருவர் நன்றாக இருக்கிறார் என்றால் என்னுடைய இஸ்லாமிய சகோதரன்தானே என்று நாம் நமது உள்ளத்தை சமாதனப் படுத்திக் கொண்டு நாமும் இந்த சத்திய சீலர்களைப் போன்று அல்லாஹ்விடம் இது போன்ற எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும் இந்தப் பிராத்தனையை கேட்க வேண்டும். 

இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்''  இதுவெல்லாம் அன்ஸாரிகளின் பெருந்தன்மைக்கு சான்றுகளாகும். 

அன்ஸாரித் தோழர்களின் பெருந்தன்மைக்கு எல்லையில்லை என்பதற்கு இந்தத் திருமறைக் குர்ஆன் வசனத்தை பாருங்கள். ஏவராவது தங்களின் சொத்து செல்வங்களில் எங்கிருந்தோ வந்த ஒருவனுக்கு முன் ஒரு போது பார்த்திராக சந்தித்திராதவர்களுக்கு தங்களோடு பிறந்த சகோதர்களுக்கு சொத்து செல்வங்களை வழங்கி இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் (பிறகு இது தடைசெய்யப்பட்டது) பங்கு கொடுத்தார்கள்.

இதன் பின்னர் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, உங்களுடன் இணைந்து போரிட்டோரே உங்களைச் சேர்ந்தவர்கள். இரத்த பந்தமுடையோர் ஒருவர் மற்றவருக்கு அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி நெருக்கமானவர்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். அல்குர்ஆன் (8:85)

இப்படியும் பெருந்தன்மையா?

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (நாடு துறந்து மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவருக்கும் சஅத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். இந்த சஅத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்களுக்கு இரு துணைவியர் இருந்தனர். ஆகவே சஅத் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிலும் தம் செல்வத்திலும் சரிபாதியை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்குப் பங்கிட்டுத் தருவதாகக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் , ஆதாரம் புகாரி:5072 

சொத்தில் பாதி இரு மனைவியில் விருப்பமான ஒரு மனைவி இதிலும் பெருந்தன்மை பறைசாற்றினார்கள். நினைக்கும் போது கண்கள் ஆனந்தத்தால் பணிகிறது. இந்தப் பெருந்தன்மைக்கு இந்த உலகில் யாரையும் எடுத்துக் காட்ட முடியாது என்ற அளவுக்கு இவர்களின் பெருந்தன்மையும் விட்டுக் கொடுப்பும் அமைந்துள்ளது. இப்படி இந்த சத்திய சீலர்களின் வாழ்நாள் நிடுகிலும் பெருந்தன்மைகள் பறை சாற்றி நிற்கின்றன.

அல்லாஹ்வுக்காக நிலத்தைக் கொடுக்க வந்த ஏழைச் சிறார்கள்.

 நபி (ஸல்) அவர்கள் மதீனாக்கு சென்றதும் அங்கு அல்லாஹ்வுக்காக ஒரு ஆலயத்தை கட்ட வேண்டும். என்றெண்ணி அங்கு அதற்கான இடத்தையும் தெரியுசெய்தார்கள். அந்த இடம் யாருக்கென்று நபிகளார் அன்ஸாரிகளிடம் வினவிய போது இது இரண்டு ஏழைச் சிறார்களுக்குரியது. என்று அருமைத் தோழர்கள். பதிலளித்தார்கள். 

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு செய்தி இன்று வாழும் மக்கள் நலன்தான் எங்கள் நலன்கள் என்று நாவில் தேனையும் உள்ளத்தில் தேளையும் வைத்துக் கொண்டு நடமாடும சாக்கடைகள் இப்படி எங்காவது நாதியற்ற மக்களுக்குச் சொந்தமான இடங்கள் கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டு நாக்கை வெளியே தொங்க விட்டுக் கொண்டு நயவஞ்சகத்தையே தொழிலாகக் கொண்டு வாக்குறுதிகளை தேர்தல்காலங்களில் அள்ளி வீசி  மக்களிடம் ஓட்டுப் பிச்சை கேட்கும் அரசியல் வாதிகள் மத்தியில் விலை மதிக்க முடியாத நிலத்தை நபிகளாருக்கு அந்த ஏழைச் சிறார்கள் அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்கள்.

இருந்தாலும் தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்கள். இதில் இந்தப் பிஞ்சு உள்ளங்களில் கூட அந்தப் பெருந்தன்மை வேரூண்டி இருந்தது. கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணமும் அவரிகளிடம் கூடிகொண்டிருந்திருக்கிறது. இதோ அந்தச் சிறார்கள் நபிகளாருடன் நடந்து கொண்ட விதம் (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் இது தான் (நமது) தங்குமிடம்'' என்று கூறினார்கள். பிறகு அந்த இரு சிறுவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அந்தக் களத்தை பள்ளிவாயில் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும், "இல்லை. அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர் கüடமிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள்.  ஆதாரம் (புகாரி:3906)

No comments:

Post a Comment

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்