28.9.11

அநுராதபுரத்தில் இடிக்கப்பட்ட தர்கா. பின்னணி என்ன?

தர்ஹாக்கள் குறித்து இஸ்லாத்தின் நிலை 
 
“உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்
றிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்.
யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்  
(நூல்: புகாரி)

கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும், அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்’   
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),                                                            நூல்: திர்மிதி.

அநுராதபுரத்தில் நடந்தது என்ன?

சமீபத்தில், அநுராதபுரத்தில் முஸ்லிம்(?)களின் கட்டுப்பாட்டில் இருந்த தர்காவொன்று புத்த பிக்குகள் உள்ளிட்ட கும்பலால் திட்டமிட்டு இடிக்கப்பட்டது.
தர்கா இடிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர், “இப்படியான செயலுக்கு யாரும் ஒப்புதல் அளித்திருக்கவில்லை” என்றும், “சட்டத்தை யாரும் அவரவர் கைகளில் எடுத்துகொள்ளக்கூடாது” என்றும் “சமூகங்கள் இடையிலான நல்லுறவை யாரும் கெடுக்கக்கூடாது” என்றும் தெரிவித்தார். 
ஆனால் “பௌத்தர்கள் புனிதமாக கருதும் ஒரு இடத்தில் அது உள்ளது” என அதனை இடிப்பதற்காக சென்றிருந்த குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த பௌத்த பிக்கு கூறினார். இந்த தர்காவை இடித்துவிட வேண்டும் என மத விவகார அமைச்சகத்தில் தாங்கள் முறையிட்டிருந்ததாகவும், ஆனால் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே அதனை தாங்களாக இடித்துவிட்டதாகவும் அந்த பிக்கு தெரிவித்தார்.

தர்காவை இடித்த இந்தச் சம்பவம் போலிசாரின் முன்னிலையிலேயே நடந்தது. இந்தத் தர்கா, பௌத்தர்கள் புனிதமான இடமாகக் கருதும் சிங்கள மன்னன் துட்டகெமுனுவின் அஸ்தி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே அமைந்திருப்பதால் அது இடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பேசிய அனுராதபுரம் மொஹிதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் அப்துல் ரசாக், இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்ததாகவும், பிக்குமார் அடங்கலாக சுமார் 60 பேர் கொண்ட குழு ஒன்று இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறினார். அதேவேளை அந்த தர்கா தாக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க வந்த முஸ்லிம்களை பொலிஸார் தடுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தர்காக்களை நாம் உடைக்களாமா?

உடைக்கப் பட்டது தர்காவானாலும்
கை வைத்தது முஸ்லிம்களின் உறிமை மீதல்லவா!
நாளை எங்கள் பள்ளிகளை நோக்கி இக்கும்பல் --
வரமாட்டார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம்?
பாதுகாப்பு அமைச்சரா?
போலீஸ் துறையா?
ஜனாதிபதி அவர்களா?

இலங்கை வாழ் முஸ்லிம்களே! 
சிறுபான்மை முஸ்லிம்கள் எதை செய்தாலும், வாய் திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இவர்கள் தர்காவை இடிக்கிறார்கள். நாளை பள்ளியையும் இடிக்க வருவார்கள். இதனால் தான் குறல் கொடுக்கிறோம். எங்களுக்கு தர்கா தேவையில்லை. முஸ்லிகளின் உறிமைகள் தான் அவசியம். தர்காவை கும்பிடுவது தவறு என்பதால் அது (உறியவர்களால்) உடைக்கப் பட்டிருந்தால் அவர்களை முதலில் வாழ்த்துவது நாங்கள் தான். புனித பூமியில் அந்த தர்கா இருந்தது தான் அது உடைக்கப் படுவதற்குக் காரணமாம். சட்டத்த கையிலெடுக்கும் அதிகாரம் நம் யாருக்கும் இல்லை.
இதை இப்படியே விட்டால் நாளை இலங்கை முஸ்லிம்களே கேள்விக்குறியாகி விடுவார்கள் அல்லவா....!

முஸ்லிம்களை மட்டம் தட்டும் இவ்விழி செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

15.9.11

வீணான விமர்சனங்களும் விருட்ஷயமாகும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும்


(அழைப்பு 2011 ஆகஸ்ட் இதலின் ஆசிரியர் தலையங்கம்)

பழிப்போரின் பழிச்சொல்லுக்குஅவர்கள் அஞ்சமாட்டார்கள் (5 : 54)
சத்திய  இஸ்லாத்தை  இத்தரணியில்  அதன் தூய்மையான வடிவில்முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கை இலக்காக வைத்து ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பே  ஸ்ரீலங்கா தவ்ஹீத்  ஜமாஅத்புதுவடிவம் பெற்றுபுத்துணர்வுடன் நடைபயிலும் இந்த ஜமாஅத்அதன்ஓராண்டு எனும் இடைவெளிக்குள் ஆற்றியபணிகள் ஏராளம்அரபுப்பணத்தின் அடிவருடிகளால் அலட்சியப்படுத்தப்பட்டிருந்த அழைப்புப்பணியைஉத்வேகத்துடன் உயிரூட்டி உயிர்ப்பெறச் செய்வதில் இந்தஜமாஅத் அல்லாஹ்வின் அருளால் வெற்றிபெற்றுள்ளதுபெயா் தாங்கி தவ்ஹீத் வாதிகளின் கொள்கைச் சமரசத்தினால்,கொழுந்து விட்டு வளர்ந்த அசத்திய விருட்ஷங்கள்எமது சத்திய பிரச்சாரத்தின் எதிர் விளைவால் வேரருந்து வீழ்வதும்சுவடிழந்து போவதும்  அன்றாட நிகழ்வுகளாய்  அதிகரித்து வருகின்றன.
அல்லாஹ் ஒருவனது அச்சத்தை மட்டும் உள்ளத்தில் ஏந்தி,அசத்தியங்களை அடியோடு எதிர்த்த ஏகத்துவத் தந்தை இப்றாஹிம்(அலைஅவர்களின் வழியை முன்மாதிரியாய்க் கொண்டதினால்,வழிகேட்டுக் கும்பல்களும்,நெறிபிறழ்ந்த ஜமாஅத்துக்களும் கிளிபிடித்து எமக்கெதிராய் கிளர்ந்தெழுந்துள்ளனதம் இருப்பைஸ்தீரப்படுத்துவதற்காய் தமக்கிடையிலான பகைமைகளை மறந்து,எம்மை எதிர்க்கும் பணியிலும்எம் மீது அவதூறுகளையும்ஆதாரமற்ற அபாண்டங்களையும் சுமத்தி சேறுபுசிபொதுமக்கள் மத்தியில் எம்குறித்தத வறான பதிவுகளை விதைக்கும் மூன்றாம் தர களப் பணிகளிலும் அத்தனை அமைப்புகளும்  ஒன்றுபட்டு உழைப்பதனை துளாம்பரமாய்  காணமுடிகிறது.
எமது அழைப்புப் பணியின் ஆக்ரோஷத்தை அழித்தொழிக்கும் நோக்கில்முனைமழுங்கிய விமா்சனக் கணைகளை அசத்தியவாதிகளுடன்இணைந்து செயற்படும் முதுகெழும்பற்றசிலகொள்கைக் கோமாளிகளும்தொடுத்து வருவதனை பரவலாக அவதானிக்கமுடிகிறது.எம்மைஎதிர்ப்பதற்காய் ஆரம்பத்தில் இவா்கள்  விடுத்த விமர்சனக்கணைமாற்றுக் கருத்துள்ளவர்களின் மேடைகளில் இவர்கள்  தஃவா செய்ய மாட்டார்களாம்இந்தக்  கொள்கை  தஃவாவின்  வளர்ச்சியை முடக்கும்! ”என்பதாகும்.
கொள்கைவாதி எனும் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு இடத்திற்கு ஏற்றால் போல் வேஷம் போட்டு பித்அத்துகளை அரங்கேற்றி,  ஜமாஅதேஇஸ்லாமியின் கருத்துக்களை தங்கள் பத்திரிகைகளிலும் மேடைகளிலும்பிரச்சாரம் செய்யும் ஊதுகுழல்களாய் இருப்போரையும்ஜம்இய்யதுல்உலமாவின் பதவிகளுக்காய் கொலைகாரக் கும்பலான தரீகாவாதிகளின்கூட்டணியோடு கைகோர்த்த கோமாளிகளையும்பள்ளிகட்டுதல்,கிணறுவெட்டுதல் என்று கூறி அரபுப்பணத்தை துஷ்பிரயோகம் செய்து,தமது வயிறுகளை வளர்த்துக் கொண்டவசுல் ராஜாக்களையும்,எதிர்ப்புக்கு அஞ்சி ஏகத்துவத்தில் சமரசம் செய்து கொண்ட கொள்கைவங்குரோத்துக்காரர்களையும் நாம் மக்களுக்கு அடையாளப்படுத்திஇவர்களுடன் கைகோர்த்து மேடை ஏறினால்தஃவாமக்களுக்கு தூய்மையாகசென்றடைவதில் தடங்கள் ஏற்படும்என்பதையும் விளங்கப்படுத்தினோம்எமதுவாதத்தில் உள்ள நியாயத்தை புரிந்துகொண்ட கொள்கைவாதிகள் எம்மை நோக்கி விமரசித்தவர்களைபுறக்கணித்துவிட்டுஎம்மோடு இணைந்துஅழைப்புப்பணி புரிய முழு மனதுடன் முன்வந்தனர்எந்த மாற்று மேடையை ஏற்றால்  தஃவா முடங்கும் என்றார்களோஅக்கொள்கைதான் எமதுதஃவாவை விரிவுபடுத்துகிறது என்பதற்கு எம்முடன்இணைந்துசெயற்படும் 26 கிளைகளும்,ஒருமாதத்துக்குள் தேசிய ரீதியில்நடைபெறும் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளும் சான்றாகும்.
இவா்கள் சுமத்திய முதல் அபாண்டம் தமது முகத்திலேயே புழுதியைவாரி இறைத்ததனாலும்எம் வளர்ச்சியின்மீதுகொண்டகாழ்ப்புணர்வின் விளைவாளும் “இவர்கள் மத்ஹபு வாதிகள்!பி.ஜே எனும் மத்ஹபைபின்பற்றுபவர்கள்!”என்றதும் இரண்டாவதுஅஸ்தியை அள்ளி எறிந்தனர்.  மூடிய அறைக்குள்  இருந்து கொண்டு வெற்றுச் சவடால்கள் விட்டனர்.
ஆளுக்கு ஒரு கருத்துக்களை ஆய்வறிவின்றி மிம்பர்களிலும்,பொதுமேடைகளிலும் பரப்பியதனால்தான் தவ்ஹீதியசமுதாயம் தவிடு பொடியாகி சிதறிக்கிடக்கிறதுசமுதாயத்தை சிதறடிக்கும்இப்போக்கைமாற்றிஅனைவரையும் ஓரளவுக்கேனும்ஓரணிப்படுத்துவதாயின்கருத்துவேறுபாடுடைய அம்சங்களையும்முரண்பட்ட விடயங்களையும் முதலில்  உலமாக்கள் அனைவரும்ஓரிடத்தில் அமர்ந்துகுர்ஆன்  ஸூன்னாவின் ஒளியில் தீர்வு கண்டு,எடுக்கப்படும் முடிவை ஏகமானதாய் அனைவரும் ஒன்றாய் மேடைகளில்பிரச்சாரம் செய்தால் பிளவுகள் குறையும்இவ்வுடன்பாடு காண்பதற்காய்முரண்பட்ட கருத்திலுள்ள அனைத்துதவ்ஹீத் உலமாக்களையும்நாம்அன்போடு அழைக்கின்றோம்தமது வாதங்களை எம்மோடு கலந்துரையாடவிரும்பாவிடின் மக்கள் மன்றில் விவாதிக்கவருமாறும்வேண்டுகிறோம்தாடி,கரண்டைக்குக் கீழ் ஆடை அணிதல்,சுனியம்,பிறை… இது  போன்ற எவ்விடயமாயினும் எம்மோடுபேசலாம்:விவாதிக்கலாம்உங்கள் கருத்தைகேட்கநாம் சித்தமாய் உள்ளோம்.இவ்விரண்டுக்கும் முன்வராது,தமதுகருத்தைநிரூபிக்கதுணிவற்ற கோழைகள்அறைக்குள் இருந்துஇவர்கள் மத்ஹப்வாதிகள்என்றுவிமர்சிப்பது எப்படி நியாயமாகும்எமது பதிலில்துளங்கிய நியாயத்தைவிளங்கிக் கொண்டமக்கள் மத்தியில்பச்சோந்திகளின் வாதம் புஷ்வானமாகிவிட்டது.
எம்மோடு நேருக்குநோ் நின்று நெஞ்சு நிமிர்த்தி சான்று களைமுன்வைக்கமுதுகெழும்பற்ற இத்தகையகோழைகளுக்கும்கோமாளிகளுக்கும் நாம் சொல்லிக்கொள்வது இது தான்எமது பணிகளைமுடக்குவதற்காக எந்தஅபாண்டங்களையும்,வீணான விமர்சனங்களையும் சுமத்திபொதுமக்களைகுழப்பி எம்மீது களங்கத்தைகற்பிக்கமுனைகிறீர்களோஅறிந்துகொள்ளுங்கள்!அல்லாஹ்வின் தீனைஉங்கள் வாய்களினால் ஊதி அணைக்க முனைந்தால்,உங்கள் சுவடுகள் கூட இன்றிஅழிந்துபோவீர்கள்.அல்லாஹ்வின் சுழ்ச்சிக்கு முன்   உங்கள் சூழ்ச்சி பஸ்பமாகிவிடும்உங்கள்  விமர்சனங்களால் எம்  வோ்கள் ஆழமாய் பதிந்து ஆழவிருட்ஷமாய் வியாபித்தே வருகிறதுசத்தியம் வானளாவ வளரும்!அசத்தியம் அடியோடுஅழியும்!

செய்திகள்