15.2.12

அல்தாபியின் உரையும் ஆடிப் போன அன்ஸார் தப்லீக்கியும்

ஆக்கம்: எம்.எம்.முன்திர்
 


அண்மையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் அறிஞர் அல்தாபி அவர்கள் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பில் இலங்கைக்கு வருகை தந்து,யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் மாற்றாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி இலங்கை தஃவா வரலாற்றில் ஒரு புதிய தஃவாப் பரிமாணத்திற்கான அத்திபாரமாக அமைந்தது. ஏனெனில் இத்தனை ஆண்டுகளில் தஃவா நிறுவனங்கள் அதன் பின்னே அலைமோதிய தாயிகள் எல்லாம் அறைக்குள் மட்டும்தான் ஆடிக் கொண்டிருந்தார்கள்.தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு உப்புச் சப்பற்ற பயான்களை செய்துவிட்டு ஏதோ யுகப் புரட்சி செய்தவர்களைப் போல் ‘தக்ரீர்’ எழுதி தாகம் தனித்துக் கொண்டிருந்தார்கள்.
அதில் அக்கரைப்பற்று எனும் அக்கரைக்குள் மிகச் சிறு தக்லீத் கூட்டத்துடன் தான் மட்டுமே தனிக்காட்டு ராஜா என தப்பாக எண்ணி கறையான் புற்றுக்;குள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த  அன்ஸார் தப்லீக்கி முக்கியமானவர்.
புத்துணசர்ச்சியுடனும், புத்துயிர்ப்புடனும் நாடளாவிய ரீதியில் கிளை பரப்பி வரும் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து உரையாற்றிய அல்தாபி அவர்கள், முஸ்லிம்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்கள்.
அந்த வகையில் காத்தான்குடியில் எமது கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சூனியம் தொடர்பாக ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அன்ஸார் தப்லீக்கியையும் அவர் முகல்லிதுகளையும் அடி அசையவைத்துள்ளது.
ஷபாபிலும் ஐஐஆர்ஓவிலும் மாறி மாறி தாகம் தனித்து வந்த இவர் தற்போது தனித்து நின்று தக்லீத் வளர்த்துக் கொண்டு, தன்னிலை அறியாமலேயே தட்டுத்தடமாறுகிறார். இவரது கிழக்கு மாகாண அக்கரை அன்ஸார் மத்ஹபுக் கனவுக் கோட்டை எமது தனித்தவ தஃவா நகர்வால் தகர்ந்து சுக்கு நூறாகி வருவது ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டுள்ளது.
அதனால், தவ்ஹீத் ஜமாஅத்தையும் அதன் பிரமுகர்களையும் தரக்குறைவாக விமர்சினம் செய்து வருகின்றார். நபி (ஸல்) அவர்களை மனநோயாளி எனக் கேவலப்படுத்தும் கட்டுக்கதைகளை நம்பும் இவர் அவற்றை மறுத்து மாற்று விளக்கம் சொல்லி நபியின் நாகரிகம், கண்ணியம் காக்கும் எம்மை நரித்தன நாடகம் ஆடி விமர்சித்து நழுவல் போக்கோடு நடமாடி வருகின்றார்.
இவரைவிடக் குறைந்த தரத்தில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள்.ஏனெனில் உமர் அலி விவாதிக்க வந்தார். நிமிடத்திற்குள் நூறு தடவை நிலை மாறும் அர்ஹம் மவ்லவி விவாதிக்க ஒப்பமிட்டுள்ளார். ஏன் ஜெபமணி, காதியானிகள், ஜெரி தோமஸ் போன்றோர் விவாதிக்க வந்தனர்.
தன்னைத் தக்லீத் பண்ணுவோருக்கு மத்தியில் மாவீரணாய் வேசம் காட்டும் இவர் தவ்ஹீத் ஜமாஅத் தாயிகளைக் கண்டு வெருண்டு ஓடுவது ஏன்? அவர்களின் விவாத அழைப்புக்கு அஞ்சுவது ஏன்?!
மாற்று மதத்தினரிடம் இருக்கும் மதப் பிடிப்பின் அளவு கூட இவருக்கும் இவர் மத்ஹபு முகல்லிதுகளுக்கும் இவர்களின் கொள்கையில் உறுதி இல்லை போல் தோன்றுகிறது.
இவர் வாதப்படி நாம் இருப்பது தவறான கொள்கை என்றால் அதைத் துணிவாக எமக்கு முன்னால் நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து விடை சொல்லி விவாதிக்க வரவேண்டும்.அதை விட்டுவிட்டு எதிர்க்கேள்வி கேட்கத் தெரியாத அப்பாவி அபலைகளுக்கு முன்னால் நீங்கள் எவ்வளவுதான் ஹீரோ (ர்நசழ) வேசம் போட்டாலும் நீங்கள் (0) ஸீரோதான்.
இவர் போன்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இன்னும் சிலர் பதுங்கியிருந்து படம் எடுக்கப் பார்க்கின்றனர். அவர்களின் படத்தையும் படடவர்த்தனமாய் சமூகத்திற்குப் புட்டுபுட்டு வைப்போம். இன்னும் சிலர் மதம் பிடித்து மதியிழந்து கொண்டிருக்கின்றனர். அவர்களையும் அடுத்தடுத்து விரல் நீட்டி விமர்சித்து விரைவில் சமூகத்திற்கு அடையாளப்படுத்தவோம்.

2.2.12

தப்லீக் இயக்கத்தினர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டமை சரியானதே!


கடந்த சில நாட்களுக்கு முன் தப்லீக் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இலங்கையை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டார்கள். இது தொடர்பாக லங்கா நவ் என்ற இணையதளம் “தப்லீக் இயக்கத்தினர் வெளியேற்றப்பட்டமை சரியானதே!” என்ற தலைப்பில் தனது ஆசிரியர் தலையங்கத்தை அமைத்துள்ளது.  அந்த ஆக்கத்தை எவ்வித மாற்றமும் இன்றி நாமும் இங்கு வெளியிடுகிறோம்.

இலங்கை நாட்டின் சிறுபான்மை சமுதாயத்தில் இஸ்லாமியர்கள் முக்கியமானவர்கள். இவர்களில் தப்லீக், தவ்ஹீத், தரீக்கா, ஜமாத்தே இஸ்லாமி என்று பல பிரிவினர் இயக்க ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் ஜமாத்தே இஸ்லாமி, தரீக்கா, தப்லீக் போன்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் அமீர் என்றொருவரை ஏற்படுத்திக் கொண்டு அவர் சொல்படி கேட்டு நடப்பவர்களாக இருக்கிறார்கள்.


தவ்ஹீத் என்ற அமைப்பனரோ முஹம்மது நபிதான் எங்கள் தலைவர் அவர் பேச்சைத் தான் நாங்கள் கேட்போம் அதற்குப் பின்புதான் மற்றவர்களின் பேச்சுக்களுக்கெல்லாம் முன்னுரிமை தருவோம் என்று வாதிடுகிறார்கள்.

எது எப்படியோ இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபலமாக பேசப்படும் இரண்டு இயக்கத்தவர்களில் தப்லீக் மற்றும் தவ்ஹீத் ஆகிய இயக்கத்தவர்கள் முக்கியமானவர்கள்.

நாட்டின் இறையான்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

செய்திகள்