26.1.11

புறப்படு நீயும் போராட்டக் களத்திற்கு. (ஜனவரி 27 உரிமை போராட்டம் )

(பாபர் மஸ்ஜித் இடிப்பு காட்சி – ஜனவரி 27 விளம்பர வீடியோ)

சொத்துரிமைக்கும், மத உரிமைக்கும் விரோதமாக அமைந்த தீர்ப்பு உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றமும் நியாயப் படுத்தப்பட்டு விட்டது. ஆரம்பம் முதலே அங்கே கோவில்தான் இருந்தது என்ற தவறான தீர்ப்பின் மூலம் பாபர் பள்ளிவாசலை யாரும் இடிக்கவில்லை என்ற தவறான நிலையை ஏற்படுத்தி விட்டது.

நீதிமன்றங்கள் மீது நாம் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை கேள்விக்குறியாகி விட்டது. எனவே இனி நீதிமன்றங்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம்தான் எதிர் காலத்தில் முஸ்லிம்களின் உரிமையைக் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டு விட்டனர். நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு உட்பட்டவை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. 

இந்திய வரலாற்றில் பல கருப்புப் பக்கங்களை உருவாக்கிய காவிக் கும்பலுக்கு எதிராகவும் நீதி வழங்குவதில் தவறிய நீதிபதிகளைத் துணிவுடன் கண்டிக்கவும், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தானாக மறு விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தியும், எந்தப் பள்ளிவாசல் பிரச்சினையையும் நீதி மன்றத்துக்குக் கொண்டு செல்ல பயப்படும் நிலைமை இனியும் நீதிமன்றங்களால் ஏற்படக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்தவும், இருக்கின்ற பள்ளிவாசல்கள் இதுபோன்று நீதித்துறையால் பறிக்கப்படாமல் இருக்கவும் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27ம் தேதி சென்னை மற்றும் மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் போராட்டக் களத்திற்கு நாம் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு நமது கண்டனக் கணைகளை பதிவு செய்யப் புரப்படத் தயாராகுவோம்.
சகோதரர்களே ! 
ஜமாத் பிரமுகர்களே ! 
இளைஞர்களே ! 
கல்விமான்களே ! 
அறிஞர்களே !
நமது பிறப்பு சம்பவமாக இருக்களாம் ஆனால் இறப்போ சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சரித்திரம் படைக்க சங்கமிப்போம் போராட்டக் களத்தில்.
Thanks to: www.rasminmisc.tk  
தக்லீத் ஓர் ஆய்வு.(தொடர் 04)
நாம் ஸஹாபாக்களை திட்டுகிறோமா?
RASMIN M.I.Sc


நபித் தோழர்களை பின்பற்றுவதும் வழிகேடுதான் என்ற தலைப்பில் குா்ஆன்,ஹதீஸைத் தவிர வேறு எதனையும் பின்பற்றக் கூடாது என்ற கருத்தில் திருமறைக் குா்ஆனில் இறைவன் குறிப்பிட்டுள்ள வசனங்களையும் அதற்குறிய விளக்கங்களையும் நாம் பார்தோம்.

ஸஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடு,நபித் தோழர்களானாலும் அவர்களை தக்லீத் செய்யக் கூடாது குா்ஆன்,மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் பேசியும்இஎழுதியும் வரும் இவ்வேலை.

இப்படி நாம் சொல்வதால் ஸஹாபாக்களை மதிக்கவில்லை,அவா்களை நாம் திட்டுகிறோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் தங்களுக்கான ஒரு ஆதரவைப் பெற்றுக் கொள்ள முனைகிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல.

நபித்தோழர்களை பின்பற்றக் கூடாது அவா்களின் வார்த்தைகள்,வாழ்க்கை வழி முறைகள் மார்க்கத்தின் ஆதாரமாகாது என்று நாம் கூறுவதினால் ஸஹாபாக்களை நாம் திட்டுகிறோம் என்றோ,அல்லது அவா்களின் தியாகத்தை குறைத்து மதிப்பிடுகிறோம் என்றோ அர்த்தமல்ல.

ஸஹாபாக்களை நாம் நேசிக்கிறோம்,அவா்களின் தியாகங்களை மெச்சுகின்றோம்,ஆனாலும் மார்க்க விஷயங்களில் குா்ஆன்,மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் தான் நமது வழிமுறைகளாக ஏற்றுக் கொள்வோம்.

இந்த இரண்டுக்கும் மாற்றமாக யார் என்ன கருத்தை சொல்லியிருந்தாலும் அவற்றை தூக்கி தூர எறிந்து விடுவோம் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

இனி ஸஹாபாக்கள் இந்த மார்க்கத்தின் வளர்சிக்காக செய்ய தியாகங்களை பற்றியும் அவா்களின் சேவைகள் பற்றியும் சுருக்கமாக பார்த்துவிட்டு,ஸஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்பதற்கான மேலதிக விளக்கங்களை ஆராய்வோம்.



நம்மை விட ஈமானில் சிறந்த நல்லவா்கள்.

மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல்: புகாரி 2651

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3673

நபித் தோழர்களைப் பற்றிய திருமறையின் புகழ்ச்சி.

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள். (அல்குர்ஆன் 57:10)

ஹிஜ்ரத் செய்தோரிலும்அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும்நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன் 9:100)

இந்த நபியையும்ஹிஜ்ரத் செய்தோரையும்அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும்சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்இரக்கமுடையோன்.
(அல்குர்ஆன் 9:117)

மேற்கண்ட வசனங்களில் நபித் தோழர்களுக்குள்ள சிறப்புகளை இறைவன் அழகாக எடுத்துக் கூறியுள்ளான்.

இந்தச் சிறப்புகளை மறுத்து,நபித்தோழர்களை தவறாக விமர்சித்து அவா்களை நிந்திக்கும் ஷீயாக்களை எதிர்த்து அவா்களின் கருத்துக்களை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டி நாம் அடிக்கடி எழுதிவருவதையும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.

அதே போல் இப்படியெல்லாம் சிறப்புகள் இருக்கிறது என்பதற்காக அவா்கள் சொல்வதும் மார்க்கத்தின் ஆதரங்களாகும் என்று வாதிடுவதும் வடி கட்டிய மடமைத் தனம் என்பதையும் நாம் மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.

அதற்கான காரணம் 

நபித்தோழர்களும் மனிதர்கள் தான்.

அவா்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

நபித்தோழர்களும் சில நேரங்களில் தவறுகளை செய்திருக்கிறார்கள்.

சில நபித் தோழர்களின் கருத்துக்களும்,செயல்பாடுகளும் குா்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமாக அமைந்திருக்கிறது.

பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன.

குர்ஆன்ஹதீஸில் இல்லாத சில விஷயங்களை அவர்களாக உருவாக்கினார்கள்.

என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே தான் குர்ஆனையும்நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.

குர்ஆன்ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்லஇரண்டல்ல. பல்வேறு விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்துக் கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மை நிலையாகும்.

ஸஹாபாக்கள் குா்ஆன்,மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு மாற்றமாக கூறிய கருத்துக்கள் எவை அவை எப்படி குா்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமாக இருக்கிறது என்ற விஷயங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

ஆய்வு தொடரும்...................
தக்லீத் ஓர் ஆய்வு.(தொடர் 03)
முன்னோர்களை பின்பற்றுவதும் வழிகேடே !
RASMIN M.I.Sc
 
கடந்த தொடரில் மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் எப்படி தக்லீத் செய்கிறார்கள் என்பதைப் பற்றிப் பார்த்தோம்.

இந்தத் தொடரில் முன்னோர்களை பின்பற்றுவதாக வாதிட்டு தக்லீத் செய்பவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

முன்னோர்களை பின்பற்றுவதும் தனிமனித வழிபாடுதான்.

இமாம்களைப் பின்பற்றுபவர்கள் சொல்லும் மற்றொரு வாதம் தான் முன்னோர்கள் சொன்னவைகள் மார்க்கமாகும் என்பது.

அதாவது நமது முன்னோர்கள் என்று யார் யாரெல்லாம் வாழ்ந்து மரணித்தார்களோ அவர்கள் எந்த முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்தார்களோ அந்த முறையில் தான் நாமும் வாழ வேண்டும் என்பது இவர்களின் வாதமாகும்.

எந்தப் பெரிய அறிஞனாக இருந்தாலும்,விஞ்ஞானியாக இருந்தாலும்,மிகப் பெரிய ஆய்வாளனாக இருந்தாலும் அனைவரையும் முட்டாலாக மாற்றும் ஒரு குருட்டு பக்திதான் இந்த முன்னோர்கள் வாதம்.

எந்தப் பெரிய கல்வியாளனையும் முன்னோர்கள் என்ற வாதம் ஒரு பக்தி வட்டத்திற்குள் கொண்டு வந்து விடும்.

ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இந்த குருட்டு பக்தியை துடைத்தெரிகிறது.
குர்ஆன் கூறும் செய்திகளைப் பாருங்கள்.

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?      (அல்குர்ஆன் 2:170)

மனிதனது அறிவுக்கும்இ சுயமரியாதை உணர்வுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய இந்தக் குருட்டு பக்தி முஸ்லிம்களிடம் இருக்கக் கூடாது என்று இறைவன் இந்த வசனத்தில் கட்டளையிடுகின்றான். ஆயினும் பெரும்பாலான முஸ்லிம்கள் பிற மதத்தவரிடமிருந்து காப்பியடித்து இந்தப் போக்கைத் தமதாக்கிக் கொண்டனர்.

முன்னோர்களின் கொள்கைகள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்திருந்தாலும், தெளிவாக அது சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் கூட, "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அதையே நாங்களும் செய்கிறோம்'' எனக் கூறுகின்றனர்.

சமாதிகளில் வழிபாடு செய்வதும், ஷைகுமார்களின் கால்களில் விழுவதும், சந்தனக் கூடு, கொடியேற்றம் நடத்துவதும், கத்தம் பாத்திஹாக்களை சிரத்தையுடன் செய்து வருவதும், இது போன்ற இன்னும் பல காரியங்களும் மார்க்கத்தின் அம்சங்களாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் முன்னோர்களைப் பின்பற்றுவது தான்.

அல்லாஹ்வும்இ அவனது தூதரும் இவற்றைத் தடை செய்துள்ளனர் என்று யாரேனும் சுட்டிக் காட்டினால், "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது?'' என்பதே அவர்களின் பதிலாக இருக்கின்றது. இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான மறுப்பு அமைந்துள்ளது.

 இவர்களின் இந்தக் குருட்டு பக்திக்கான காரணம் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து நபித்தோழர்கள் மார்க்கத்தைக் கற்றனர். அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினர் கற்றனர். இப்படியே வாழையடி வாழையாகவே மார்க்கத்தை நாம் கற்று வருகிறோம். எனவே எங்கள் முன்னோர்கள் செய்தவை யாவும் நபி (ஸல்) அவர்களின் வழியாக வாழையடி வாழையாகவே வந்திருக்க முடியும் என்று இவர்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர்களும், அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினரும் வாழையடி வாழையாக இம்மார்க்கத்தைக் கற்றாலும் கூட, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ செய்திருக்க முடியும் என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை.

ஏசுவை இறைவனின் மகன் என்று ஒரு கூட்டத்தினர் நம்புகின்றனர். இந்தக் கொள்கை ஏசுவிடமிருந்து தங்களுக்கு வாழையடி வாழையாகக் கிடைத்தது என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். இறைவனுக்கு மகன் இல்லை என்று போதனை செய்த ஏசுவின் பெயரால் அவரது போதனைக்கு முரணான கொள்கை நடைமுறைக்கு வந்திருப்பது எதைக் காட்டுகிறது? வாழையடி வாழையாக முழுமையான போதனை வந்து  சேர முடியாது என்பதைக் காட்டவில்லையா?

இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக்கேற்பஇ இறைவனை வணங்குவதற்காக கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்தார்கள். அந்தக் கஅபாவுக்குள் அவர்களின் சந்ததியினரே 360 சிலைகளை வைத்து வழிபட்டது எதைக் காட்டுகிறது? முன்னோர்கள் முழு அளவுக்கு நம்பகமானவர்கள் அல்லர் என்பதைக் காட்டவில்லையா?

தங்கள் முன்னோர்கள் செய்த காரியங்கள் நபி (ஸல்) அவர்கள் வழியாகத் தான் வந்திருக்க முடியும் என்று இவர்கள் கூறுவது ஏற்கத்தக்கது என்றால், ஏசு இறைமகன் எனும் கோட்பாடு ஏசுவிடமிருந்து தான் வந்தது என்று கிறித்தவர்கள் கூறுவதை எப்படி மறுக்க முடியும்? உருவச் சிலைகள் வழிபாடு இப்ராஹீம் நபியின் மூலமாகவே வந்திருக்க முடியும் என்று மக்கத்து இறை மறுப்பாளர்கள் நம்பியதை எப்படித் தவறென்று கூற முடியும்?

நமது முன்னோர்கள் தாம் தொழுகை, நோன்பு போன்றவற்றைக் கூட மார்க்கம் என்று நமக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இந்த விஷயங்களில் முன்னோர்களை நாம் பின்பற்றவில்லையா? என்று சிலர் கேட்கலாம். முன்னோர்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று இந்த வசனம் கூறவில்லை. அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் பின்பற்றுவது எப்படித் தவறானதோ அதே போன்று அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் புறக்கணிப்பதும் தவறானதாகும்.

"அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தால் கூட அவர்களைத் தான் பின்பற்றப் போகிறார்களா?'' என்று இறைவன் கேட்பதிலிருந்து இதை நாம் விளங்கலாம்.

முன்னோர்கள் சென்றது நேர்வழியாக இருந்தால் - அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியாக இருந்தால் - தாராளமாக அதை ஏற்கலாம். தொழுகைஇ நோன்பு போன்ற கடமைகள் இந்த வகையில் அமைந்துள்ளதாலேயே அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

முன்னோர்களைப் பின்பற்றக் கூடியவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இல்லை என்பதையும் நாம் உணர்த்த வேண்டியுள்ளது. முன்னோர்களைப் பின்பற்றுவோர் மார்க்க விஷயங்களில் மட்டுமே அவர்களைப் பின்பற்றுகின்றனர். உலக விஷயங்களில் யாருமே முன்னோர்களை பின்பற்றுவதில்லை.

முன்னோர்கள் நவீன வாகனங்களைக் கண்டதில்லை. மின் சாதனங்களைக் கண்டதில்லை. உறுதியான கட்டடங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இவற்றையெல்லாம் பயன்படுத்தியதில்லை என்பதற்காக அவர்களின் வழித் தோன்றல்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. முன்னோர்கள் வாழ்ந்திராத வாழ்க்கைக்கு இவர்கள் ஆசைப்படுகிறார்கள். தங்களுக்கு அதிக நன்மை தரக் கூடியது என்றால் முன்னோர்கள் செய்யாதவற்றைச் செய்கின்றனர். முன்னோர்கள் செய்தவற்றை விட்டு விடவும் செய்கின்றனர்.

உலக விஷயங்களில் முன்னோர்களைப் பின்பற்றுவதால் மிகப் பெரிய கேடு எதுவும் ஏற்படப் போவதில்லை. அற்பமான இந்த உலகத்தில் சிறிதளவு சிரமம் ஏற்படலாம், அவ்வளவு தான்!

ஆனால் மார்க்க விஷயத்தில் முன்னோர்களைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றினால் மறுமை வாழ்வே பாழாகி விடும் என்பதை இவர்கள் உணர்வதில்லை.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.

"எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள்.      (33:66, 67)

முன்னோர்கள், பெரியார்கள் மீது கொண்ட குருட்டு பக்தி நம்மை நரகத்தில் தள்ளி விடும் என்று இறைவன் எச்சரித்த பிறகு, உலக விஷயங்களை விட மார்க்க விஷயங்களில் அதிகக் கவனம் அவசியம் என்பதை உணர வேண்டாமா?

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தைக் கூறியிருப்பது தெரிய வந்தால், முன்னோôர்களின் வழிமுறைக்கு அது மாற்றமாக இருந்தாலும் அல்லாஹ்வும்இ அவனது தூதரும் கூறியதையே எடுத்து நடக்க வேண்டும். மக்கத்துக் காஃபிர்கள் தங்களின் முன்னோர்களைக் காரணம் காட்டியது போல் காரணம் கூறக் கூடாது.

அல்லாஹ்வின் வேதத்தையும், அவனது தூதரின் போதனை களையும் புறக்கணிப்பதற்குக் காரணமாக உள்ள முன்னோர் பக்தியைத் தூக்கி எறியக் கூடியவர்களே இந்த வசனத்தை உணர்ந்து செயல்படுத்தியவர்களாவர். இந்த பக்தி அகன்று விடுமானால் சமுதாயத்தில் நிலவுகின்ற குழப்பங்களில் பெருமளவு நீங்கி விடும். 

ஆய்வு தொடரும்...................
தக்லீத் ஓர் ஆய்வு.(தொடர் 02)
RASMIN M.I.Sc

தக்லீத் என்றால் என்ன?

ஒரு அறிஞரின் கருத்தை அவர் சொன்னால் தவராகவே இருக்காது அது சரியாகத் தான் இருக்கும் என்று நினைத்து கண்மூடிப் பின்பற்றுவதை தக்லீத் என்று பரிபாசையில் நாம் அறிகிறோம்.

அதாவது ஆரம்பகால தவ்ஹீத் பிரச்சார நேரத்தில் மத்ஹபை பின்பற்றக் கூடிய ஆலிம்கள் நம்மை பார்த்து எழுப்பிய கேள்விகளில் மிக முக்கியமானது நீங்கள் ஏன் இமாம்களை பின்பற்றுவதில்லை என்பதாகும்.

அதே போல் இன்று தவ்கஹீத் வாதிகள் என்று தம்மை சொல்லிக் கொள்ளும் ஆலிம்களும் நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வி நீங்கள் ஏன் ஸஹாபாக்களை பின்பற்றுவதில்லை என்பதுதான்.

இந்த இரண்டு கேள்விக்கும் ஒரே பதிலைத் தான் இறைவன் நமக்குக் கற்றுத் தந்துள்ளான்.

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ(அதைவிட்டும்)தவிர்ந்து கொள்ளுங்கள் (59:5)

ஆக மொத்தத்தில் இரண்டு தரப்பாரும் தக்லீத் என்ற வட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள் நம்மையும் அங்குதான் இழுக்கப் பார்க்கிறார்கள்.

முதலில் மத்ஹபு வாதிகளின் தக்லீதின் பின்னனியை நோக்குவோம்.

மத்ஹபுகளில் பிரச்சினை உள்ளது, சிந்தனைக்கு எட்டாத கதைகள் உள்ளது, ஆபாசங்கள் நிறைந்துள்ளது என்றெல்லாம் அதில் உள்ள உண்மைகளை ஏகத்துவ வாதிகள் எடுத்துக் காட்டும் போது அவர்களின் நிலை இமாம்கள் சொன்னால் அது சரியாக இருக்கும் இமாம்கள் பொய் சொல்ல மாட்டார்கள் தவறாக எழுத மாட்டார்கள் என்பதாகத்தான் இருக்கிறது.

ஷியாக்கள் என்பவர்கள் எப்படி அலி(ரலி) அவர்களை அளவுகக்கதிகமாக நேசித்ததன் மூலம் நபியவர்களுக்கும் மேலாக அவர்களை கொண்டு போய் நிருத்தினார்களோ நபிக்காக உயிரைக் கூட கொடுக்க தயங்காத நபித் தோழர்களை எப்படி வாய் கூசாமல் தூற்றினார்களோ அது போல் மத்ஹபைப் பின்பற்றுபவர்களும் அவர்கள் எந்த மத்ஹபை சார்ந்திருக்கிறார்களோ அந்த மத்ஹபுக்கெதிராக எவர் பேசினாலும் அவரை கடும் வார்த்தைகளால் வசை பாடி தாங்கள் குறிப்பிட்ட இமாமை கண்மூடிப் பின்பற்றுபவர்கள் என்பதை பரை சாற்றுகிறார்கள்.

உதாரணத்திற்கு ஹனபி மத்ஹபின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு ஹனபி இமாமை தக்லீத் செய்தவர்கள் ஷாபி இமாம் மீது சொன்ன இழி சொற்களை பாருங்கள்.

(மத்ஹபைப் பின்பற்றுபவர்களின்)மத்ரஸாக்களில் பாடப் புத்தகமான வைக்கப்பட்டுள்ள துர்ருல் முக்தார் என்ற புத்தகத்திலும் அதன் விரிவுரை நூலான ரத்துல் முக்தாரிலும் முன்னுரையில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு செய்தியைப் பாருங்கள்.

وعنه عليه الصلاة والسلام (إن آدم افتخر بي وأنا أفتخر برجل من أمتي اسمه نعمان وكنيته أبو حنيفة، هو سراج امتيالدر المختار 1 56

ஆதம் (அலை) அவர்கள் என் மூலம் பெருமை அடைந்தார்கள். நான் என் உம்மத்தில் வருகின்ற நுஃமான் எனும் இயற்பெயர் கொண்ட அபூஹனீபாவைக் கொண்டு பெருமையடைவேன். அவர் என் சமுதாயத்துக்கு விளக்காவார் என்று நபி (ஸல்) கூறியதாக அந்த துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் அபூஹனீபாவின் மூலம் பெருமையடைவதாக அவர்களை கூறியதாக ஒரு பொய்யை அல்லாஹ்வின் பயமின்றின்றி நபியவர்கள் மீது பகிரங்கமான இட்டுக் கட்டியுள்ளார்கள் இந்த மத்ஹபு வாதிகள்.

அது போல் அதே புத்தகத்தில் இன்னோர் இடத்தில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 وعنه عليه الصلاة والسلام إن ساير الانبياء يفتخرون بي، وأنا أفتخر بأبي حنيفة، من أحبه فقد أحبني، ومن أبغضه فقد أبغضني
 
எல்லா நபிமார்களும் என் மூலம் பெருமை அடைந்தனர். நான் அபூஹனீபா மூலம் பெருமை பெறுகிறேன். அவரை யார் விரும்புகிறாரோ அவர் என்னை விரும்புகிறார். அவரை யார் வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுக்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஹனபி இமாம் அவர்களை தக்லீத் செய்ததினால் ஏற்பட்ட விளைவைப் பாருங்கள்.அபூஹனீபாவை யாராவது வெருத்தால் அவர் நபியவர்களை வெருக்கிறார் என்றும் அபு ஹனீபாவை யார் நேசிக்கிறாரோ அவரை நபியவர்கள் நேசிக்கிறார்கள் என்றும் பொய்யாக நபியின் மீதே இட்டுக் கட்டியுள்ளனர் இந்த அபு ஹனீபாவின் தக்லீத் கூட்டத்தினர்.

ஒருவர் மீது வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை அன்பு பாசம் இவர்களை இப்படி வழிகேட்டில் கொண்டு போய் சேர்த்துள்ளது.

அபூ ஹனீபா மீது கொண்ட தக்லீத் அல்லாஹ்வின் பேயராலேயே இவர்களை பொய் சொல்லத் தூண்டியுள்ளது.

அதே துர்ருல் முக்தார் என்ற கிதாபில் உள்ள இந்தச் செய்தியைப் பாருங்கள்.

ولها قصة مشهورة وفي حجته الاخيرة استأذن حجبة الكعبة بالدخول ليلا، فقام بين العمودين على رجله اليمنى ووضع اليسرى على ظهرها حتى ختم القرآن، فلما سلم بكى وناجى ربه وقال: إلهي ما عبدك هذا العبد الضعيف حق عبادتك، لكن عرفك حق معرفتك فهب نقصان خدمته لكمال معرفته، فهتف هاتف من جانب البيت: يا أبا حنيفة قد عرفتنا حق المعرفة وخدمتنا فأحسنت الخدمة، قد غفرنا لك ولمن اتبعك ممن كان على مذهبك الى يوم القيامة.
الدر المختار  1 ஃ55

அபூ ஹனீபா அவர்கள் கஃபாவின் காவலாளியிடம் கஃபாவின் உள்ளே செல்ல ஒரு இரவில் அனுமதி கேட்டார்கள். இரண்டு தூண்களுக்கிடையில் வலது காலில் நின்றார்கள். இடது காலை வலது கால் மீது வைத்துக் கொண்டார்கள். இந்த நிலையில் குர்ஆனை ஓதி முடித்தார்கள். ஸலாம் கூறியதும் அழுதார்கள். தமது இறைவனிடம் இரகசியமாக உரையாடினார்கள். என் இறைவா இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. எனினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளேன். எனவே இந்த அடியானின் முழு ஞானம் காரணமாக இவரது வணக்கத்தில் உள்ள குறைபாடுகளை மன்னித்து விடு என்று துஆ செய்தார்கள். அப்போது கஃபாவின் ஒரு பகுதியில் இருந்து அவர்களை நோக்கி அபூஹனீபாவே நம்மை விளங்க வேண்டிய விதத்தில் விளங்கிக் கொண்டீர். உம்மையும் உம்மைப் பின்பற்றியவர்களையும் கியாம நாள் வரை மன்னித்து விட்டேன் என்று அசரீரியில் அல்லாஹ் கூறினானாம்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் தங்களின் இமாமுக்கும் வஹீ வந்திருக்கிறது; அதுவும் அவரைப் பின்பற்றியவர்களை கியாம நாள் வரை மன்னிக்கும் உத்திரவாதத்துடன் வஹீ வந்திருக்கிறது என்று சிறு பருவத்திலேயே நம்ப வைத்து விட்டார்கள்.

இப்படி நம்பியவர்கள் எப்படி உண்மையை ஏற்று இந்த வழிகேட்டிலிருந்து விடுபட்டு வருவது ? ஹனபியை நபியளவுக்கு இல்லை நபியை விட மேலாக உயர்துவதற்கு இவர்களுக்கு தைரியம் வரக் காரணம் என்ன தக்லீத் என்ற இந்த தனி மனித வழிபாடுதான்.

அதுபோல் இந்த ஹனபியாக்கள் தமது இமாமை எதிர்ப்பவர்களை ஷைத்தான்கள் என்று கூறும் அளவுக்கு எல்லை மீறியுள்ளதையும் நாம் அறிய முடிகிறது.

இமாம் ஷாபி அவர்கள் இமாம் ஹனபியின் கருத்துக்கு மாற்றமாக பல கருத்துக்களை கூறியதாலும் ஹனபியின் கருத்தை மறுத்து ஷாபியின் கருத்தை சிலர் ஏற்றுக் கொண்டதாலும் தங்களுக்கு ஷாபியின் மீது ஏற்பட்ட அபார வெருப்பு அவரை ஷைத்தான் என்று சித்தரிக்கும் அளவுக்கு முற்றிப் போனது.

என் உம்மத்தில் முஹம்மத் இப்னு இத்ரீஸ்  (அதாவது ஷாபி இமாம்) என்று ஒருவர் தோன்றுவார். இப்லீஸை விட என் சமுதாயத்திற்கு அவர் கேடு செய்வார். மேலும் என் சமுதாயத்தில் அபூஹனீபா என்று ஒருவர் தோன்றுவார். அவர் என்சமுதாயத்தின் விளக்கு ஆவார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்களாம்.

ஒரு தனி மனிதர் மீது ஏற்பட்ட பக்தி இன்னொரு இமாமை இப்லீஸை விட கெட்டவர் என்று கூறும் அளவுக்குச் சிலரை ஆக்கி விட்டது. அதுவும் நபி (ஸல்) அவர்கள் தான் இப்படிச் சொன்னார்கள் என்ற முத்திரையுடன்..

இதை அறிவிப்பவர்களில் மஃமூன் இப்னு அஹ்மத் என்ற பெரும் பொய்யனும்இ அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் அல் ஜூவைபாரி என்ற பொய்யனும் இடம் பெறுகின்றனர். இவ்விரு பொய்யர்களில் யாரோ ஒருவர் தான் இதை இட்டுக் கட்டியிருக்கின்றனர் என்று ஹதீஸ்கலை மேதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தமது மவ்லூஆத் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

மஃமூன் என்ற பொய்யனிடம் ஷாபி இமாமையும் அவரைச் சார்ந்தவர்களையும் பற்றி நீர் என்ன கருதுகிறீர்? என்று கேட்கப்பட்ட போது மேற்கூறிய பொய்யான ஹதீஸைஅவன் கூறினான். மஃமூன் என்ற பொய்யனே இதை இட்டுக் கட்டி இருக்க முடியும் என்று இமாம் ஹாகிம் அவர்கள் தனது அல்மத்ஹல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். மேலும் சிறிதளவாவது அறிவு உள்ள ஒவ்வொருவனுக்கும் நபி ஸல் அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய் இது என்று தெளிவாகத் தெரியும் எனக் குறிப்பிடுகிறார்கள்.

ஸூயூத்தி அவர்கள் அல்லஆலில் மஸ்னூஆ என்ற நூலில் முதல் பாகத்தில் 457 ஆம் பக்கத்தில் இதைப் பொய்யென நிரூபித்துள்ளார்கள். மேலும் பல அறிஞர்களும் இதைப் பொய்யென நிரூபித்துள்ளனர். இவ்வளவு தெளிவாகப் பொய் என்று அறிஞர்கள் முடிவு செய்த பின்பும் ஹனபி அறிஞர்கள் பலர் இதை சரி காணவே முயற்சிக்கிறார்கள்.

ரத்துல் முக்தார் ஆசிரியர் இது சரியான ஹதீஸ் என்று சாதிக்கிறார். மேற்கூறிய அறிஞர்கள் எல்லாம் அபூஹனீபா அவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் இதைப் பொய் என்று கூறுவதாகத் தெரிவிக்கிறார். ஐனீ போன்ற அறிஞர்களும் இதிலிருந்து தப்பவில்லை. ஹதீஸ் கலை மேதைகள் அறிவிப்பாளர்களின் தராதரத்தை எடை போட்டு தக்கக் காரணங்களுடன் அடையாளம் காட்டியுள்ளதை ஒரு ஆதாரமுமின்றி இந்த ஹனபீ அறிஞர்கள் மறுக்கிறார்கள்.

இந்தக் குருட்டுப் பக்தி ஏற்பட்டு விட்டதால் தான் தங்கள் இமாம் சொன்னதில் தவறே ஏற்படாது என்று நம்புகின்றனர். தவறே ஏற்பட்டாலும் கியாம நாள் வரைக்கும் அல்லாஹ் அதை மன்னித்து விடுவான் என்றும் நம்புகின்றனர். மற்றொரு இமாமை இப்லீஸை விட மோசமானவர் என்று நம்புவதால் தான் அந்த இமாமுடைய எந்தக் கருத்தையும் நாம் ஏற்கக் கூடாது என்ற அளவுக்கு தங்களை மாற்றி கொண்டு விட்டார்கள்.

ஆக தனி மனிதன் மேல் கொண்ட இந்த குருட்டு பக்திதான் இவர்களை இப்படி நபி மீதே பொய் சொல்ல வைத்துள்ளது.

யார் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும் (முஸ்லிம்)

ஆய்வு தொடரும்………………..
தக்லீத் (தனி மனித வழிபாடு) ஓர் ஆய்வு.
தவ்ஹீத் ஜமாத்தா? அல்லது தக்லீத் ஜமாத்தா?
RASMIN M.I.Sc (India)

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!

தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தை தடுக்க நினைக்கும் சில சுயநலவாத சிந்தனை கொண்ட கயவர்கள் தவ்ஹீத் ஜமாத் மீதும் தவ்ஹீத் வாதிகள் மீதும் பல குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள் அந்த குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமான குற்றச் சாட்டு தவ்ஹீத் வாதிகள் தக்லீத் (தனி மனித வழிபாடு)செய்கிறார்கள் என்பதாகும்.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்பகாலங்களில் நாம் குர்ஆனும்,ஹதீஸ{ம் மாத்திரம் தான் மார்க்க ஆதாரம் மத்ஹபுகளோ இமாம்களோ தரீக்காக்களோ மார்கத்தின் ஆதாரங்கள் இல்லை என்று உடைத்துப் பேசுகின்ற போதெல்லாம்.நம்மை எதிர்த்தவர்கள் நம்மீது சொன்ன குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமானது.

இவர்கள் இமாம்களைத் திட்டுகிறார்கள்.

இமாம்களை இவர்கள் மதிப்பதில்லை.

இது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் மக்கள் மன்றில் வைக்கப் பட்டது.

அல்லாஹ்வின் பேருதவியால் அந்த அனைத்து வாதங்களும் அடித்து நொருக்கப் பட்டது.

இப்போது நம்மை நோக்கி இவர்கள் ஸஹாபாக்களை திட்டுகிறார்கள்.

பி.ஜெயை கண்மூடிப் பின்பற்றுகிறார்கள்
 
 
என்றெல்லாம் பரப்பி வருகிறார்கள்.

அதாவது ஸஹாபாக்கள் ஈமானிலும்,தியாகத்திலும் நம்மை விட பண்மடங்கு உயர்ந்தவர்கள் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் அவர்களின் சொந்தக் கருத்து மார்கத்தின் ஆதாரமாகாது.என்பதுதான் நமது வாதம்.

சகோதரர் பி.ஜெ அவர்கள் ஒரு சிறந்த மார்க்க அறிஞர் பண்முக ஆளுமை கொண்டவர் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அவர் சிறந்த அறிஞர் என்பதற்காக எந்தத் தவ்ஹீத் வாதியும் அவரின் கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுவதில்லை பின்பற்றவும் கூடாது.

இன்றைக்கு இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதாக சொல்லிக் கொள்ளும் சிலர் தாங்கள் எடுத்து வைக்கும் தவறான வாதங்கள் மக்கள் மத்தியில் எடுபடாமல் போவதாலும் சகோதரர் பி.ஜெ அவர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் அபார தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளதாலும் அவரை எதிர்க்க தங்களுக்கு திராணியில்லாததினால் தக்லீத் என்ற ஒரு கோஷத்தை இன்று கையிலெடுத்துள்ளார்கள்.

தமிழ் பேசும் மக்களிடம் மட்டுமன்றி அரபுலகத்திலும் சகோதரர் பி.ஜெ அவர்களின் மார்க்கம் தொடர்பான கருத்துக்கள் இன்று மெச்சப்படுவது அனைவரும் அறிந்ததே!

இந்த வகையில் இலங்கை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் சில ஆலிம்களும் மதனிகளும் வெளிநாட்டில் பட்டம் பெற்றதாக சொல்லிக் கொள்ளும் சில பச்சோந்திகளும் தமது கருத்து மக்கள் மத்தியில் எடுபடாமல் போகிறதே என்ற விரக்தியில் இந்த தக்லீத் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

இது தவிர சகோதரர் பி.ஜெ உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் இருந்த சிலர் ஒழுக்க சீர் கேடு பண மோசடி உள்ளிட்ட காரணங்களினால் அந்த அமைப்பை விட்டு வெளயேற்றப் பட்டனர்.

நம்முடன் இருக்கும் வரையில் நமது கருத்துக்களை விமர்சிக்காதவர்கள் ஜமாத் அவர்களின் குற்ற செயலை நிரூபித்து ஜமாத்தை விட்டே அவர்களை வெளியேற்றியவுடன் இதே தக்லீத் வாதத்தை அவர்களும் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

ஆக இப்படிப்பட்ட அனைத்துத் தரப்பாரின் வாதங்களுக்கும் பதில் கொடுக்கும் வகையில் இந்தக் கட்டுரை ஒரு தொடராக எழுதப் படுகிறது.

இந்தத் தொடரில் குர்ஆன் ஹதீஸ் பார்வையில் தக்லீத் என்றால் என்ன? தக்லீத் பற்றி மாற்றுக் கருத்தாரின் விமர்சனம் மற்றும் அதற்கான பதில் இஸ்லாம் தக்லீதைப் பற்றி என்ன சொல்கிறது? தக்லீத் விஷயத்தில் பி.ஜெயின் நிலைப்பாடு என்ன? தவ்ஹீத் ஜமாத் அறிஞர்கள் பி.ஜெயை தக்லீத் செய்கிறார்களா? போன்ற தகவல்கள் எழுத்து மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் விபரிக்கப்படும்.

ஆய்வு தொடரும்………………
சிங்கள பேரினவாதம் தலை தூக்குகிறதா?
மீண்டும் ஹபாயா பிரச்சினை.
RASMIN M.I.Sc

கடந்த 20 வருடங்களான இலங்கையை பயத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்த யுத்த பீதி இறைவனின் மிகப் பெரும் கருணையினால் தற்போது இல்லாமல் ஆகியிருக்கிறது.

இறைவனின் உதவியினால் ஆளும் சுதந்திர முன்னனியின் தலைவர் அவா்கள் முன்னெடுத்த செயல்பாடுகள் யுத்த பயத்தை விட்டும் நிம்மதியாக மக்களை வாழ வைத்திருக்கிறது.

சண்டை ஓய்ந்துள்ள இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் இனவாத சிந்தனை பிறப்பெடுக்கிறதோ என்ற அச்சம் சிறுபான்மை மக்களின் மனங்களை ஆற்கொண்டுள்ளது.

சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களை,பெரும்பான்மை சமுதாயத்தை சோ்ந்தவா்கள் அடிக்கடி சீண்டிப் பார்ப்பது அதனை மேலும் உறுதி செய்கிறது.

ஹபாயாவிற்கு தடையா?

இந்நிலையில் இலங்கையின் கொழும்பில் உள்ள ஒரு கல்லூரிக்கு இஸ்லாம் பாடம் கற்பிப்பதற்காக மத்திய மாகாணத்தை சேந்த முஸ்லீம் ஆசிரியர் ஒருவா்  இடமாற்றம் பெற்று வந்தார் அவரை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கல்லூரியின் அதிபர் ஹபாயா அணிந்து வந்தால் கல்லூரிக்கு வரவேண்டாம் என்றும் சேலை அணிந்து கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்றும் தடை விதித்துள்ளார்.

சுமார் 600 க்கும் அதிகமான முஸ்லிம் மாணவிகள் பயிலும் இப்பாடசாலையில் தரம்  1 - 11 வரை சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கற்பித்தல் நடை பெறுகின்றது. தமிழ் மொழி மூலம் போதிக்கப்படும் தரம் 1, 2 ஆகிய வகுப்பக்களில்  தற்போது ஒரே ஒரு ஆசிரியையே கல்வி போதிப் பதுடன் ஏனைய வகுப்புக்களில் இஸ்லாம் பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர் எவரும் இல்லாத நிலையில் ஆரம்பக் கல்வி கற்பித்தலில் தேற்சி பெற்ற  இந்த ஆசிரியைக்கு மேல் மாகாணக் கல்விப் பணிப்பாளர்  இப்பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கியுள்ளார்.

பதவியேற்பதற்கு முன்னர் பாடசாலையைப் பார்வையிடச் சென்ற ஆசிரியை அன்றைய தினம்  அதிபர் கல்லூரியில் இல்லாத நிலையில் தமிழ்ப் பிரிவுப் பொறுப்பாசிரியையிடம் தனது இடமாற்றம் பற்றித் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் கறுப்பு நிற பாயா (மேலங்கி) அணியாமல் மாற்று நிறங்களில் அணிந்து வறுமாறு கூறியுள்ளார். 

அதற்கேற்ப அதிக பணச் செலவில் வேறுநிறங்களில் பாயாவைத் தைத்து அணிந்து, கடந்த வாரம் கடமை ஏற்கச் சென்ற ஆசிரியைக்கு `இப்பாடசாலையில் ஹபாயா அணிய அனுமதி வழங்கப்படுவதில்லை' என்றும், இந்தப் கல்லூரியில் கற்பிக்க விரும்பினால், சேலை உடுத்து வேண்டுமானால் தலையை மாத்திரம் மறைத்து வருமாறும்  அதற்கு சம்மதிக்க முடியாதிருப்பின் வேறு கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண கல்விப் பணிப்பாளரிடமும்மேல்மாகாண ஆளுநர்  அலவி மவ்லானாவிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாசிரியைக்கு மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் வேறு முஸ்லிம் பாடசாலை ஒன்றுக்கு உடன் இடமாற்றம் வழங்கியுள்ளார். 

இதேவேளை 600 க்கும் அதிகமான முஸ்லிம் மாணவிகளைக் கொண்ட இப்பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகளுக்கு கட்டாய  பாடங்களில் ஒன்றான  இஸ்லாம் பாடத்தைக் கற்பிப்பதற்கு முஸ்லிம் ஆசிரியர் எவரும் இதுவரை நியமிக்கப்படாததனால் கத்தோலிக்க அல்லது இந்து சமய பாடத்தைக் கற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மேல் மாகாண ஆளுனர் அலவி மவ்லானா ஜனாதிபதி அவா்கள் தற்போது அமெரிக்காவிற்கு சென்றிருப்பதினால் அவா் இலங்கை திரும்பியவுடன் இது தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிட இருப்பதாக தெரிவித்தார்.

ஆசிரியர்களின் ஆடை தொடர்பாக சட்டம் உள்ளதா?

இலங்கை நாட்டில் கல்லூரிகளில் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர்கள் இந்த ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.

நிலைமை இவ்வாறிருக்க பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே சிறுபான்மை மக்களின் உரிமைகளில் கை வைப்பது நாட்டின் நலனையும்,சமுதாய ஒற்றுமையையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு செயல் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன்பும் பல தடவைகள் முஸ்லீம் மாணவிகள் அவா்களின் ஆடை தொடர்பாக பெரும்பான்மை ஆசிரிய,ஆசிரியைகளினால் பல இன்னல்களை சந்தித்திருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

இலங்கை மக்கள் அனைவரும் சமமானவர்கள் பிரிவினை காட்டப் படக்கூடாது என்று அடிக்கடி மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் ஜனாதிபதி அவா்கள் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் அவசரமாக கவணம் எடுக்க வேண்டும் என வழியுறுத்துகிறோம்.

ஓரளவு அச்சத்தாலும்,பசியாலும்,செல்வங்கள்,உயிர்கள்,மற்றும் பலன்களை சேதப்படுத்தியும் உங்களை சோதிப்போம்.பொருத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவா்கள் கூறுவார்கள்.

அவா்களுக்கே தமது இறைவனின் அருள்களும்,அன்பும் உள்ளன.அவா்களே நேர்வழி பெற்றோர். (2 - 155,156,157) 

24.1.11

இன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின் ஆட்டம்


ஷாஹினா ஷாபிஃ

மானத்தை மறைப்பதற்காகவும், குளிர், வெப்பம், மற்றும் பல காரணங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமே இந்த ஆடை ஆகும்.

ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
(அல்குர்ஆன் 7:26)

ஆனால் இன்று ஆடை வழங்கப்பட்ட நோக்கத்தையே மறந்தவர்களாக, தம் அழகைப் பிறருக்குக் காண்பிப்பதற்காகவே நம் பெண்கள் ஆடைகளை அணிவதைக் கண்கூடாகக் காணலாம். வேறு எந்த மதத்திலும் சொல்லாத அளவிற்கு பெண்களின் ஆடைக்கான எல்லையை இஸ்லாம் மார்க்கம் தான் வகுத்துத் தந்துள்ளது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமதுஅலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமதுதந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள் தமதுசகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்கவேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.    
(அல்குர்ஆன்  24 : 31)

பெண்களின் உடலமைப்பானது ஆண்களின் உடலமைப்பை விட சற்று வித்தியாசமானது. ஆண்களை இலகுவில் கவர்ந்து ஈர்க்கக் கூடிய தன்மை உடையது. ஆனால் ஆண்களின் உடலமைப்பானது அவ்வாறன்று. ஆண்கள் அரைகுறை ஆடையுடன் இருந்தால் கூட அதனைப் பெண்கள் அவ்வளவு அலட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்களின் நிலை அவ்வாறன்று. அதனால் தான் அல்லாஹ் ஆடையான வேலியை பெண்கள் மீது அதிகப்படியாக விதித்துள்ளான்.

ஆனால் நம் பெண்களோ மாற்று மதத்தவர்களுக்கு ஒப்பாகவே இன்று தமது ஆடைக்கலாச்சாரத்தை மாற்றியமைத்துள்ளனர். இறையச்சத்தை விட, தனது மானத்தை விட இவ்வுலக அலங்காரத்தையும் அந்நியவரின் திருப்தியுமே இவர்களுக்கு மிகவும் மேலானதாகவும், விருப்பமானதாகவும் உள்ளது. நமது பெண்கள் “தொழுகிறோம், நோன்பு பிடிக்கிறோம், ஸகாத் ஸதகா கொடுக்கிறோம், பிறருக்கு உதவி செய்கின்றோம். இது தான் முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டியது” என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம் இவை அல்லாஹ்வின் கட்டளை என்பதால் செய்கிறோம். ஆனாலும் அல்லாஹ் தன் வேதத்தின் மூலமும் தன் தூதர் மூலமும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய முறைகள், பேண வேண்டிய வியங்கள், வரையறைகளையும் சேர்த்தே நம் மீது விதித்துள்ளான். அதனடிப்படையில் எமது ஆடை உள்ளதா என்று சற்றேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? அந்நிய ஆண்களின் முன்னிலையில் முகம், முன் கையைத் தவிர மற்ற பகுதிகளை மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் ஆடை விடயத்தில் தலைகீழாக இருக்கின்றது நம் பெண்களின் நிலைமை.

இன்று நம் பெண்களை வீதிகளில் காணும் போது முஸ்லிம் பெண்களாகவே கருத முடியாத அளவுக்கு அந்நிய மதக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போனவர்களாக அவர்களது ஆடை அவர்களைக் காட்டிக் கொடுக்கின்றது. இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களை போட்டுள்ளது, அதற்கான வரையறைகளை இட்டுள்ளது. நாமோ அதனைப் புறக்கணித்து நம் இஷ்டப்படி மனம் போன போக்கிலேயே ஆடைகளை அணிகின்றோம்.

ஆண்கள் குற்றம் புரிவதற்குக் கூட பெண்களின் இந்த முறையற்ற ஆடைக் கலாச்சாரமும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. பெண்கள் தமக்குத் தாமே அழிவையும், இழிவையும் தேடிக்கொள்பவர்காக இருப்பது வேடிக்கைக்குரியது. பாதுகாப்புக் கவசத்தையே துளையிட்டு உபயோகிப்பதாகவே இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலைமையும் உள்ளது. அதாவது சல்வார் என்பது கூட ஒரு ஒழுக்கமான ஆடை தான் அதையே மிகவும் இறுக்கமாக இடுப்பு வரை பிளந்து காற்றில் பறக்க அணிகின்றனர். ஹபாயா என்பது கூட நவீன பெஷனாக மாறியுள்ளது. அதனையும் மிக இறுக்கமாக அணிந்து தலையை மட்டும் மெல்லிய துணியால் காயத்துக்கு போட்ட பெண்டேஜ் (bandage)மாதிரி சுற்றி மூடிவிடுகின்றனர். மற்ற மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்க மறந்து விடுகின்றனர். அல்லாஹ் இட்ட கட்டளையையும்  சேர்த்தே மறந்து விடுகின்றனர் என்பதை அறிய வேண்டாமா?

ஏன் இந்த ஆடைகளை ஒழுக்கமான முறையில், உடலமைப்பைக் காட்டாத முறையில், அலங்காரத்தை வெளிப்படுத்தாமல், தளர்த்தியாக அணிய முடியாது? இவ்வுலக அலங்காரமும், மோகமும், மற்றவர்களின் திருப்தியுமே எமக்கு அழகாக தோற்றமளிக்கின்றது. ஆனால் ஈருலகிலும் நன்மையைப் பெற்றுத் தருகின்ற அல்லாஹ்வின் திருப்தி மட்டும் எம்மை மறக்கடிக்கச் செய்கின்றது?

ஆடைக்குறைப்பினாலும், முறையாக அணிந்தும் இறுக்கமாக அணிவதாலும் ஏற்படும் விபரீதங்களை பெண்களாகிய நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அதனால் தான் படைத்தவனாகிய அல்லாஹ் அதற்காக பாதுகாக்கும் கவசமாக ஆடையை வழங்கி அதற்கான வரையறைகளையும் வகுத்து நமக்கு அருள் புரிந்துள்ளான். கவர்ச்சி காட்டுவதை அறியாமைக்கால (ஜாஹிலியாக்கால) பண்பாக பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் விவரிக்கின்றான்.

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
(அல்குர்ஆன் 33:33)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களைஅடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள்நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள். 

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3971)



பெண்களின் ஆடை எவ்வாறு அமைதல் வேண்டும்?

பெண்களின் ஆடையானது இறுக்கமில்லாமல் அணிந்தும் அணியாதவாறு இல்லாமல் அதாவது மறைக்க வேண்டிய பகுதிகள் வெளியே தெரியக் கூடியவாறு மெல்லியதாக இல்லாமல் அலங்காரங்களை வெளியே காட்டாத வகையிலும் இருத்தல் வேண்டும்.

ஆனால் கணவன் முன்நிலையில் மட்டும் எந்தவித வரையறையும் இன்றி மேற்கூறிய தடைகளின்றி ஆடையலங்காரங்களை அமைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண்களின் ஆடையானது ஹபாயாவாக, கறுப்பு நிற ஆடையாகத் தான் இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது. எந்த நிறத்திலும் ஆடை அணிய மார்க்கத்தில் பெண்களுக்கு அனுமதி உள்ளது. இஸ்லாம் மார்க்கமானது பெண்களின் ஆடை அமைய வேண்டிய ஒழுங்கு முறைகளைத் தான் வரையறுத்து நிர்ணயித்துள்ளது.

அழகான, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகிறான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல் : முஸ்லிம் 131

பெண்களுக்கான பாதுகாப்பு

இஸ்லாம் வழங்கியுள்ள இந்த ஆடை அமைப்பானது நிச்சயமாக பாதுகாப்பு மிக்கதாகும். அடுத்தவர் பார்வை பெண்கள் மீது விழுவதும், பெண்கள் தொந்தரவு செய்யப்படுவதும் இதனால் தடுக்கப்படுகின்றது. இஸ்லாம் வழங்கியுள்ள இந்த பாதுகாப்பு தான் பெண்களுக்கு சுதந்திரமானது. இதனை ஒழுங்காக கடைப்பிடிப்போமாயின் இதன் உண்மை நிலையை நிச்சயமாக உணரலாம்.

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும் தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்றஅன்புடையோனாகவும் இருக்கிறான்.   
(அல்குர்ஆன் 33 : 59)

செய்திகள்