16.12.11

தர்வீஸ் ஹாஜியார் சொன்னதென்ன? தல்கஸ்பிடியில் நடப்பதென்ன?


அன்பிற்கினிய கொள்கை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
சத்தியத்தை சொல்வதற்கு அனைவருக்கும் பொதுவுடைமையான அல்லாஹ்வின் இல்லத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் சத்தியத்தை சொல்வதற்கான அல்லாஹ்வின் அருள்களில் ஒன்றான எழுத்து ஊடகத்தைப் பயன்படுத்தி இப்பிரசுரத்தின் மூலம் உங்களோடு உறவாடுகின்றோம். நிதானமாக வாசித்து உண்மையை உணருமாறும் அதற்கு உதவுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 இலங்கை நாட்டில் தவ்ஹீத் எழுச்சி அப்துல் ஹமீத் அல்பக்ரி (ரஹ்) என்ற தர்வீஸ் ஹாஜியார் அவர்களினால் துவக்கப்பட்டபோது, அவரை ஆதரித்து, ஏகத்துவத்தை ஏற்ற பெருமைக்குரிய ஊர்களில் எமது தல்கஸ்பிடியும் ஒன்று என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றோம். தர்வீஸ் ஹாஜியார் அவர்கள் யாருக்கும் அஞ்சாமல் அல்குர்ஆன் சுன்னாவை மட்டும் பிரசாரம் செய்தார். அசத்தியவாதிகள் யாருடனும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. துhய தவ்ஹீதை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அதனால் அன்று ஏகத்துவம் வீரயமாகப் பரவியது. அவரது துணிவான பிரசாரத்தால் எமக்கு சரியான கொள்கை கிடைத்தது. எனினும், அவருக்குப் பின்னால் இந்த நாட்டில் துணிவாகப் பிரசாரம் அவர் அளவுக்குத் தியாகத்துடன் நடைபெறவில்லை. அவரது பெயரைப் பயன்படுத்தி இன்று பிழைப்பு நடத்துவோர், அவர் யாரை எதிர்த்தாரோ அவர்களோடு கூட்டிணைந்து, வழிகெட்ட கொள்கைகளை உயிர்ப்பிக்க உதவி செய்து, உண்மையான கொள்கைவாதிகளை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். 
அதனால், பல ஊர்களில் தவ்ஹீத் பள்ளிக்குக் கட்டுப்பட்டிருந்த பலர் கொள்யைற்ற இயக்கங்களில் இணைகின்ற ஒரு துர்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. வழிகெட்ட இயக்கங்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்குள் ஊடுருவதற்குக் காரணம் அவர்களுக்கு மத்தியில் தவ்ஹீத் பற்றிய தெளிவின்மையும் பள்ளியை நிர்வகித்த நிர்வாகிகளின் அறியாமையும் கொள்கைத் தெளிவற்ற கையாளாகாத தனமும்தான் என்பதை நீங்கள் நன்கு அறிவீh;கள். 
எனவே, நாம் எமது ஊரில் தவறான கொள்கையுள்ள ஒரு ஜமாஅத் உருவானபோது, அதன் தவறான கொள்கைகளைப் பற்றிய தெளிவை வழங்கி பல இளைஞர்களை அந்த வழிகேட்டிலிருந்து நாம் தடுத்துள்ளோம்.(அல்ஹம்துலில்லாஹ்) தவ்ஹீத் ஜமாஅத்தைக் காப்பாற்ற நாம் எடுத்த முயற்சிகளை மறைத்த பலர் மீண்டும் நாம் தூய்மையான தவ்ஹீதைப் போதிக்க முனையும் போது எம்மீது புதிய இயக்கம் என்ற ஒரு தவறான இருட்டுப் பிரசாரத்தை குருட்டுத் தனமாக மேற்கொள்கின்றனர். கொள்கைத் தெளிவில்லாத சிலரும் பதவி மோகம் கொண்டோரும் நாம் என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் அவதூறு பரப்புகின்றனர். சர்ச்சைக்குரியோர் என்று சகட்டுமேனிக்கு சலப்புகின்றனர். என்ன சர்ச்சை என்றால் எந்தப்பதிலும் இவர்களிடமில்லை. பொதுமேடையில் விவாதிக்கவும் இவர்கள் தயங்குகின்றனர். நியாயமும் உண்மையுமுள்ளோர் மக்கள் அனைவர் முன்னிலையிலும் பகிரங்க விசாரணைக்குத் தயாராக இருக்கவேண்டும். சவால் விட்டவர்கள் பின்வாங்கக் கூடாது. அதை நிரூபிக்க வேண்டும். முன்வரவில்லையானால் அது அவதுhறும் பொய்யுமாகும். சத்தியம் பின்வாங்கியதாக சரித்திர சான்றுகள் இல்லை. எனவே, நாம் உண்மையையும் சத்தியத்தையும் நேசிக்கும் கொள்கைச் சகோதரர்களான ஊர் மக்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கவே இதை உங்கள் முன்வைக்கின்றோம்.
“இஸ்லம் அந்நியமான நிலையில் தோன்றியது. அது மீண்டும் அந்நிய நிலைக்குச் செல்லும். அதை சீர் செய்வோர் மீது சுபசோபனம் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்று தவ்ஹீத் என்ற போர்வையில் சில போலி இயக்கங்கள் உள்ளன. இவர்கள் தவ்ஹீதை வளர்ப்பதை விட தவ்ஹீதை சிதைக்கும் பணிகளைச் செய்து வருகின்றனர். தவ்ஹீதுக்கு எதிரான அத்தனை அனாச்சாரமும் நடைபெறும் பள்ளிகளைக் கட்டி அசத்தியவாதிகளிடம் ஒப்படைக்கின்றனர். இதை நீங்கள் ஆய்வு செய்து காண வேண்டிய அவசியமில்லை. குருநாகல் - கண்டி வீதியிலுள்ள நாப்பைக்குச் சென்று பாருங்கள். தவ்ஹீத் ஜமாஅத் என்று பாமரமக்களால் நம்பப்படும் ஜேஏஎஸ்எம் என்ற நிதி நிறுவனம் கட்டிக் கொடுத்த பள்ளியில் தவ்ஹீத் வழிமுறையா? அதற்கு விரோதமான நடைமுறையா? நடைபெறுகிறது என்று அவதானித்துப் பாருங்கள். எமது ஊரில் அவர்கள் கட்டிய பள்ளியில் கூட்டு துஆ, சுபஹ் குனுhத், தப்லீக் ஜமாஅத் வருகை என்பன நடைபெறுவதில்லை. ஆனால் இவர்கள் கட்டிய நாப்பை பள்ளியில் இவை அத்தனையும் நடைபெறுகின்றன. ஒரு நிறுவனத்தினால் கட்டப்பட்ட இரண்டு பள்ளிகளில் இரண்டுவிதமான நடைமுறைகள் உள்ளன.  ஏன் இந்த இரட்டை வேடம்? பித்அத்திற்கு உதவினால் தவ்ஹீத் வளருமா? சிதையுமா? இந்த போலித்தனத்தை நாம் எதிர்க்கின்றோம். அவர்களின் இத்தகைய வழிகேட்டை சுயநலத்திற்காக ஆதரிப்போர் எம்மை வெறுக்கின்றனர்.தர்வீஸ் ஹாஜியாhpனால்  ஒழிக்கப்பட்ட பித்அத் இன்று அவரது பெயரைப் பயன்படுத்தி பிழைப்பு நடாத்துவோரால் அரங்கேற்றப்படுகிறது. 
இதனால், உண்மையான தவ்ஹீத்வாதிகள் புறக்கணிக்கப்பட்டு போலித் தவ்ஹீத்வாதிகள் உருவாக்கப்படுகின்றார்கள். பதவிக்காவும் பணத்திற்காகவும்; தவறானவர்கள் பின்னே செல்லும் கொள்கைத்தெளிவற்றவர்களை நேர்வழியின் பக்கம் அழைக்கவே நாம் முயற்சிக்கின்றோம். தர்வீஸ் ஹாஜியார் எந்த முறையில் தூய்மையாகப் பிரசாரம் செய்தாரோ அந்த வழிமுறையில் தவ்ஹீதைச் சொல்ல ஆசைப்படுகின்றோம். நீங்கள் உண்மையான கொள்கையையும் துhய்மையான தவ்ஹீதையும் விரும்புபவர்கள் என்றால் தர்வீஸ் ஹாஜியாரின் தஃவாவிற்கு உதவுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான்.
தவ்ஹீத்வாதிகளுக்குள் பிரிவினை வரக்கூடாது, சத்தியத்தை ஒழித்து மறைத்து சொல்லக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக நாம் பல முறை பள்ளி நிர்வாகிகளிடம் நாகரிகமான முறையில் அனுமதி கேட்டோம். அல்லாஹ்வின் பள்ளியில் அவனது மார்க்கத்தை சொல்வதற்கு எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை. 2009 ரமழானில் கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டது. புதிய நிர்வாகம் வரும் அதன் பின்னர் செய்யுங்கள் என்று அன்று சொல்லிவிட்டு மீண்டும் பதவியை தக்க வைத்தவர்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எனினும் இந்த 2011 ரமழானிலும் நாம் அனுமதி வேண்டினோம். அப்போதும் நாம் வஞ்சிக்கப்பட்டோம். அத்தோடு பள்ளியில் அனுமதி தரமாட்டோம், வேறு எங்காவது Class ஐ நடத்திக் கொள்ளுங்கள் என்று கலைக்கப்பட்ட நிர்வாகிகளால் சொல்லப்பட்டது. அந்த அனுமதியோடு நாம் ஒரு வீட்டில் வாடகை கொடுத்து class செய்வதற்கான கலந்துரையாடலை நடாத்திக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த தற்போது கலைக்கப்பட்டுள்ள நிர்வாகிகளில் ஒருவர் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். “இங்குள்ளவர்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளது. உங்களை விட எனக்கு மார்க்கம் தெரியும் என்று மார்க்க அறிவு அற்ற அவர் மமதையாகப் பேசியதோடு, மறுநாள் அவரும் இரட்டைப்பதவி வகித்த இன்னொரு நிர்வாகியும் சென்று அங்கு class நடாத்த அனுமதிக்க வேண்டாம் என்று வீட்டு உரிமையாளியை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்கள். இது ஓர் அடிப்படை உரிமை மீரல்? தவ்ஹீதை ஆரம்பத்தில் எதிர்த்த குராபிகள் கூட இப்படி அநாகரிகமாக நடந்திருக்கமாட்டார்கள். அதன் பின்னர் நாம் சகோ. முபாரக் அவர்களின் வீட்டில் Class நடத்தியதை புதிய ஜமாஅத் என்று சிலர் தவறான பிரசாரம் செய்துவருகின்றனர். நடந்தவை என்ன என்று தெரியாத சகோதரர்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தவே இதை வெளியிடுகின்றோம். நாங்கள் எந்த வித பித்னாவையும் ஏற்படுத்தவில்லை. சத்தியத்தை நிலைநாட்ட சந்தர்ப்பம் தாருங்கள் என்றுதான் கேட்கின்றோம். இது எந்தவகையில் தவறு என்று நீங்கள் சொல்லுங்கள்.
 உண்மையை அறிய விரும்பும் அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! பல வருடங்கள் நாங்கள் அனுமதி கேட்டும் எமது தஃவா முயற்சிகளை முடக்கி, துhய்மையான ஏகத்துவப் பிரசாரத்தை நியாயமான எந்தக் காரணமுமின்றி சுயநலத்திற்காகத் தடைசெய்ததனால், மார்க்கத்தை சொல்வது அனைவரின் உரிமை என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு ஏற்ப நாம் எமது தஃவாப் பணியை ஆரம்பித்துள்ளோம். ஏனெனில், மார்க்கத்தை அறிந்து அதை சொல்லாமல் மறைத்தால் மறுமையில் நெருப்பாலான கடிவாளமிடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். எனவே, நாங்கள் அல்குர்ஆன் - அஸ்ஸுன்னா மட்டுமே இஸ்லாத்தின் மூலாதாரம் என்று கூறுகின்றோம். தவ்ஹீதைப் புதைத்து குராபத், பித்அத்துகளை வளர்ப்போரை தாட்சண்யமின்றி விமர்சிக்கின்றோம். மாற்று மதத்தினரிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்கின்றோம். கொள்கைத் தெளிவில்லாமல் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் மோதும் விரோதிகளின் பள்ளிகளுக்குப் போகக்கூடாது என்கின்றோம். வட்டிக்கு விளம்பரம் செய்து, ஷிர்க்கான கவிதைகளுக்கு உதவி, குராபிகளுக்குப் பள்ளி கட்டிக்கொடுத்து தவ்ஹீதை மறைமுகமாகச் சிதைத்து, குராபத்தை வளர்க்கும் பணியைச் செய்வோரையும் கண்டிக்கின்றோம். இதேபோல் பல சமூக நலப்பணிகளைத் தன்னார்வத்துடன் செய்து வருகின்றோம். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் “நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்று தீமைக்கு உதவுபவர்களுக்கு எச்சரிக்கின்றான்.
பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியன. அல்லாஹுத்தஆலா அவனது இல்லங்களை நிர்வகிக்கக் கூடியவர்களிடம் ஐந்து பண்புகள் அவசியம் இருக்க வேண்டும் என தனது திருமறையில் கட்டளையிடுகின்றான். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். (அத்தவ்பா : 18)
மேற்கூறப்பட்ட ஐந்து பண்புகளும் எவரிடம் ஒருங்கிணைந்து காணப்படுகிறதோ, அவர் மட்டுமே பள்ளிவாசல்களின் நிர்வாகத்தில் இருக்க அருகதையுடையவர் ஆவார். இப்பண்புகளில் ஒன்று குறைந்தாலும் அவர் நிர்வாகியாக இருக்க எவ்வகையிலும் தகுதியற்றவராக ஆகிவிடுகிறார். இது, அல்லாஹ்வின் பள்ளியை பரிபாலிக்கவும் நிர்வாகிக்கவும் அல்லாஹ் விதித்த கட்டளையாகும். இந்தப் பண்புகளை ஒருவரிடம் எதிர்பார்க்க வேண்டுமானால் அவரிடம் மார்க்க அறிவு இருக்க வேண்டும். பள்ளியை நிர்வகிக்கத் தகுதியானவர்கள் நியமிக்கப்படவேண்டும். மார்க்கத்தைப் பின்தள்ளி மனோ இச்சையை பின்பற்றுவோரையும் பதவி ஆசையுள்ளோரையும் தகுதியற்றோரையும் நியமிக்கக்கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. நபி (ஸல்) கூறினார்கள்: அமானிதம் துஷ்பிரயோகம் நடைபெற்றால் மறுமையை எதிர்பார் என்றார்கள். அப்போது, எது அமானிதத் துஷ்பிரயோகம் என்று ஒருவர; கேட்கும் போது, தகுதி இல்லாதவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுவது என்று கூறினார்கள். ஆகக் குறைந்தது ஒரு விடயத்தை விவரிக்கும் போது, அதை மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையிலான நாவன்மையாவது இருக்க வேண்டும். அல்குh;ஆன் சுன்னா இவை இரண்டிற்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும். இதையே நாமும் வலியுறுத்துகின்றோம். பதவி மோகம் உள்ளோர் அதனால் எங்களை வெறுக்கின்றனர், அவதூறு பரப்புகின்றனர். இது எந்த வகையில் நியாயம் என்று நீங்கள் சிந்தியுங்கள்.
இனிய கொள்கைச் சகோதரர்களே! பள்ளிவாசல் யாருடைய அப்பன் வீட்டுச் சொத்துமல்ல. அதைக் கட்டித் தந்தவனுக்குக் கூட உரிமையில்லை. கட்ட உதவிய நிதி நிறுவனங்களுக்கும் தற்காலிக நிர்வாகிகளுக்கும் கூட உரிமையில்லை என்று அல்லாஹ் தெளிவாகக் கூறியுள்ளான். அது அல்லாஹ்வின் வீடு. அது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான சொத்து (அல்குர்ஆன் 82:18) அதில் அனைவருக்கும் மார்க்க விடயங்களை நடைமுறைப்படுத்தவும் தெளிவுபடுத்தவும் முழு உரிமையுள்ள பொது உடமை. மார்க்க விடயங்களைப் போதிப்பதைத் தடுப்பது மிகப்பெரிய அநியாயம் என்றும் பள்ளியைப் பாழாக்கும் பயங்கரவாதம் என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து  அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும்  மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.(அல்குர்ஆன் 2:114)
 இவ்வாறு நாங்கள் சொல்வதில் ஏதாவது தவறு என்று நீங்கள் கண்டால், அதை சுட்டிக் கட்டுமாறு அன்புடன் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம். யாருடன் வேண்டுமானாலும் பகிரங்க கலந்துரையாடல் அல்லது விவாதம் எதற்கும் தயாராக இருக்கின்றோம். எங்களை தவறாக விமர்சிப்பவர்களை நீங்கள் பகிரங்க விவாதத்திற்கு அழைத்து உண்மையை அறியுமாறு உங்களை நாங்கள் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். அல்லாஹ்வின் இல்லமான பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்கும் போது, சிந்தித்து தகுதிபார்த்துக் கொடுங்கள். இல்லை என்றால் மறுமையில் நீங்களும் அல்லாஹ்விடம் தண்டைனைக்கு உள்ளாகிவிடுவீர்கள். நீங்கள் அனைவரும் பொறுப்புதாரிகள். உங்கள் பொறுப்புகள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். எனவே பக்கசார்பற்று அல்லாஹ்வுக்கு முழுமையாக அஞ்சி நாம் சொல்கின்ற கருத்துக்களை சிந்தித்துப்பாருங்கள். அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! 

No comments:

Post a Comment

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்