25.2.11

மானம் இழந்த அலாவுதீனும் அனியாயத்திற்கு துணை நின்ற பொலன்னறுவை தப்லிக் மர்கஸ் நிர்வாகமும்


(கொள்கை சகோதரர்கள் சிலரின் ஆலோசனையின் பிரகாரம் இக்கட்டுரையிலிருந்து சில வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன)

அன்பின் இணையதள வாசகர்களே!
நமது தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் "பொலன்னறுவை தப்லீக் ஜமாத்திற்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் எச்சரிக்கை. சத்தியத்தை தடுத்தால், அசத்தியத்தை சமாதியாக்குவோம் " என்ற தலைப்பில் கட்டுரையொன்று வெளியிட்டிருந்தோம். அதில் பொலன்னறுவை மாவட்டம் கதுருவல, முஸ்லிம் கொலனி தவ்ஹீத் சகோதரர் ஒருவரின் வீட்டில் அலாவுதீன் என்ற ஒருவர் நடந்து கொண்ட கேவலமான நிலையை சுட்டிக் காட்டி அதை கண்டித்தோம்.

இத்தகவல் பல இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்தது. சில நாட்களில் குறிப்பிட்ட அப்பகுதி மக்களுக்கு www.sltjkaduruwela.tk என்ற தளத்தின் மூலம் அந்தக்கட்டுரையை படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ் யாரை நாடி அந்தக் அக்கட்டுரை எழுதப் பட்டதோ அந்த அலாவுதீனுக்கே அதனை படிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

தான் புகழப்பட்டிருக்கும்(?) அக்கட்டுரையை படித்ததும் இதை அப்பகுதி தவ்ஹீத்வாதிகள் தான் எழுதியிருப்பார்கள் என்ற என்னத்தில் கட்டுயை பிரதி செய்து எடுத்துக் கொண்டு அவர்களை பலிவாங்கும் எண்ணத்தில் ஊர் முழுவதும் வாசித்துக் காட்டிக் கொண்டு திரிந்திருக்கிறார்.

தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொண்ட அலாவுதீன்
அக்கட்டுரையில் தன்னை மிகவும் கேவலமாக எழுதியுள்ளதாகவும் அலாவுதீன் என்று எழுதியதாகவும் மக்கள் மத்தியில் கூறி தவ்ஹீத் வாதிகளுக்கு எதிராக கூட்டம் சேர்க்க முயற்சித்துள்ளார்.
தனது பேரை தானே பாரக்கும் போது கேவலமாகத் தெரிந்துள்ளது அந்த அலாவுதீனுக்கு....
பேருக்கு பக்கத்தில் மௌலவி என்று கூட போடமல் என்னை கேவலப் படுத்தியிருக்கிறார்கள் என்று மக்களிடம் புலம்பியிருக்கிறார்.
மறண வீட்டில் மனிதன் போல் நடந்திருந்தால் கட்டுரையையே எழுதியிருக்க மாட்டார்களே! 
இதை யோசிக்க மறந்திருக்கிறார் அந்த மௌவ்......

அலாவுதீன் கோபப்பட்டது எதற்காக?
தனது பெயர் பயன் படுத்தப பட்டதற்கு யாருக்கும் கோபம் ஏற்படாது. தான்  செய்தகேவலங்கெட்ட செயலை உலக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி    விட்டார்களே! என்ற ஏக்கம் தான் கோபத்தை ஏற்படுத்தி தவ்ஹீத் சகோதரர்களை தாக்க வண்டும. எள்ற எண்ணத்தை ஏற்படுதததியுள்ளது.
தான், சத்தியத்தை தெளிவாக சொன்ன சகோதரரை பேசவிடாமல் தடுத்த குற்றத்தை மறைப்பதற்குத் தான் இந்த நாடகத்தை நடித்திருக்கிறார்.

அனியாயத்திற்கு துணை நின்ற பொலன்னறுவை தப்லிக் மர்கஸ் நிர்வாகிகள்
அலாவுதீனின் அடாவடித்தனத்திற்கு துனை நின்ற பள்ளி நிர்வாகம் இதன் விளைவாக தவ்ஹீத் சகோதரர்களை கலந்துரையாடலுக்கு அழைத்து கடிதம் அணுப்பியிருக்கிறார்கள். கலந்துரையாடலுக்கான நேரம் நெருங்கும் போது குறிப்பட்ட பள்ளி வாசலுக்கு முன்னான் ரௌடியின் குண்டர் கூட்டம் கூடி கலந்துரையாடலுக்கு வரும் தவ்ஹீத் வாதிகளை தாக்க திட்டம் தீட்டி  விட்டனர்.தகவல் அறிந்த நம் சகோதரர்கள் பள்ளிவாசலுக்கு போகாமல் நிர்வாகி ஒருவரை டெலிஃபோனில் தொடர்பு கொண்டு தகவலைக் கூற இது அலாவுதீனின் சதி என்று கூறி நிர்வாகத்துக்கு இது தெரியாதென்று மழுப்பியிருக்கிறார்.

காலையிலிருந்தே அலாவுதீன் ஆள் சேர்த்ததும்,  விரலாட்டிகளுக்கு அடிக்கப் போகிறோம் என்று ஊரில் கதைகள் பரவியதும் நிர்வாகத்திற்கு எட்டாத செய்தி தானா? (தகுதியில்லாத) பள்ளித் தலைவர் ஃபாஹிருக்கு இது தெரியாதா?

நிர்வாகத்தில் ஓரிருவருக்கு தெரியாமல் இருக்கலாம். எல்லோருக்கும் தெரியாதென்பது மகா பெரும் பொய்யாகும்.

நம் சகோதரர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள் என்று தெரிந்ததும் அவர்கள் கூடி நின்ற வீட்டை நோக்கி குண்டர்கள் திருப்பி விடப்பட்டனர்.  அங்கே கூடி நின்று கூக்குரலிட்டவர்கள் போலிஸை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
வந்த போலிஸ் அதிகாரிகளிடம் நம் சகோதரர்கள் ஆரம்பத்திலிருந்து நடந்த தகவலகளை முழுமையாக தெரிவித்தனர். அப்படியே பிரச்சினை ஓய்நதது.

எல்லை மீரிய அதிகார துஷ்பிரயோகம்
பிரச்சினையெல்லாம் ஓய்ந்த பின்னால் மறுபடியும் தமது மஹல்லாவை சேர்ந்த மூன்று தவ்ஹீத் வாதிகளை ரகசிய விசாரணைக்கு அழைத்திருக்கிறது அந்த ப.ப.சபை. விசாரணையின் போது இணைய தளத்தில் மொக்கன் அலாவுதீனின் பெயரை பயன் படுத்தியது தவறு என்றும் அதை வாபஸ் வாங்கி மன்னிப்புக் கேட்டு அதே இணைய தயத்தில் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று மிரட்டி கையொப்பமெடுத்துள்ளது அந்த பள்ளி நிர்வாக சபை. 

குர்ஆன் ஹதீஸ் படி செயல்படவும் தடை.
அதனோடு சேர்த்து இனிமேல் உங்கள் வீடுகளில் நடைபெறும் நல்ல,கெட்ட காரியங்களுக்கு எங்கள் இமாமே(?) தலைமை தங்குவார் என்றும் கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்ட நமது சகோதரர் எங்கள் வீட்டில் நடக்கும் காரியங்களை குர்ஆன் ஹதீஸ் பிரகாரம் எங்கள் மௌலவியை வைத்து நாங்கள் செய்ய முடியாதா? என்று கேற்க குர்ஆன் ஹதீசெல்லாம் இங்கே பேசாதே என்று அவரை தாக்குவது போல் முகத்தில் பாய்ந்திருக்கிறார் ப. தலைவர். 

மார்க்கத்தை முறையாக சொல்லவிடாத அலாவுதீன் மற்றும் மார்கஸ் பள்ளி நிர்வாகிகளே!

நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தையும் இலங்கையின் ஜனநாயகத்தையும் அவமதித்து நடந்திருக்கிறீர்கள்.  இப்போதாவது உங்கள் தீர்ப்பு மாறவில்லையானால் மிக விரைவில் சட்டரீதியான நடவடிக்கை உங்கள் மீது மேற்கொள்ளப் படும். 



சத்தியத்தை தடுக்க நினைத்தால் யாருக்கும் இதே கெதி தான்....

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்'ஆன்: 61 :08 )

5.2.11

ஜனநாயகம் நவீன இணை வைத்தலா?-02


பி. ஜைனுல் ஆபிதீன்

ஆட்சியதிகாரம், சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது என்று வாதிட்டு ஜனநாயகத்தை மறுப்பது எவ்வளவு மடமை என்பதை நாம் சென்ற தொடாில் கண்டோம்.
இவ்வாறு வாதிடக் கூடியவர்கள் வணக்க வழிபாடுகளைச் செய்யும் போது அல்லாஹ் கூறியபடி செய்யாமல் தங்களின் மதகுருமார்கள் சொன்னபடி செய்வதன் மூலம் தங்கள் வாதத்திற்குத் தாங்களே முரண்படுகிறார்கள் என்பதையும் சென்ற இதழில் நாம் எடுத்து வைத்துள்ளோம்.
இந்த வாதத்தில் இவர்கள் பொய்யர்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகளே அம்பலப் படுத்துவதை நாம் காணலாம்.
இவ்வாறு வாதிடும் இயக்கத்தினர் தமது இயக்கத்திற்காகவோ, அல்லது தமக்காகவோ ஒரு சொத்தை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சொத்தின் உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்துப் பேசி முடித்தவுடன் அந்தச் சொத்து அவர்களுக்குரியதாகி விடும். இன்னும் உறுதிப்படுத்த நாடினால் இருவரும் எழுதி வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் குர்ஆனும், நபிவழியும் கூறுகின்றன.
ஆனால் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தாள் வாங்குவதும், அந்த முத்திரைத் தாளில் அதை எழுத வேண்டும் என்பதும், எழுதிய பின் அதைப் பத்திரப் பதிவாளர் முன் பதிவு செய்வதும் மனிதர்கள் இயற்றிய சட்டமாகும். இந்த வாதத்தைச் செய்வோர் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மேற்கண்ட மனிதச் சட்டங்களை மீற வேண்டும். வெள்ளைத் தாளில் மட்டும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வாதத்தைச் செய்யும் ஒருவர் கூட இப்படிச் செய்வதில்லை. எந்த அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்று கூறினார்களோ அந்த அதிகாரத்துக்குக் கட்டுப்படும் போது தங்கள் வாதம் பொய்யானது என்று தம்மையும் அறியாமல் ஒப்புக் கொள்கின்றனர்.
இது போன்ற வாதங்களைச் செய்பவர்கள் தமது அலுவலகத்துக்காகவோ அல்லது சொந்தப் பயன்பாட்டுக்காகவோ ஒரு கட்டடம் கட்ட நினைக்கிறார்கள். அல்லது ஒரு பள்ளிவாசலையே கட்ட நினைக்கிறார்கள். நமக்குச் சொந்தமான இடத்தில் நாம் விரும்பும் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளும் உரிமை இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மனிதச் சட்டங்கள் இதில் பல விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன.
கட்டப்படும் கட்டடத்தின் அளவு, பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள், கட்டடத்தின் உயரம் மற்றும் அடுக்குகள் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு, பல மட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் கட்டடம் கட்டக் கூடாது என்பது மனிதச் சட்டம்.
இப்போது இவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? எனது சொந்த இடத்தில் சொந்தக் கட்டடத்தைக் கட்ட நான் எவரிடமும் அனுமதி பெற மாட்டேன் என்று கூற வேண்டும். ஆனால் தமது வாதத்தைத் தாமே மீறும் வகையில் அந்த மனிதச் சட்டத்தை அப்படியே பேணுவதைக் காண்கிறோம். அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்பது இப்போது இவர்களுக்கு மறந்து போய் விடுகின்றது.
இவர்கள் தமது கொள்கைகளை மக்களிடம் சொல்வதற்காக வார, மாத இதழ்களை நடத்துகிறார்கள். இஸ்லாம் இந்த உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் இவர்கள் அற்பமான தபால் சலுகை வேண்டும் என்பதற்காக இதழ்களின் பெயரைப் பதிவு செய்கிறார்கள். அதற்காகப் பல்வேறு துறைகளில் அனுமதி பெறுகிறார்கள்.
மனிதச் சட்டங்களுக்குப் பணிந்து நாங்கள் அனுமதி வாங்கியுள்ளோம் என்பதைத் தெரிவிக்கும் வகையில் பதிவு எண்களைக் குறிப்பிடுகிறார்கள். சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனுக்கு உள்ளதை அப்போது மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்த வாதத்தைச் செய்பவர்களை ஒருவன் மோசடி செய்து விட்டால் இவர்கள் என்ன செய்கிறார்கள்? மனிதச் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியோ அல்லது இந்திய உரிமையியல் சட்டத்தின் படியோ புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கின்றனர். மனிதச் சட்டங்களின்படி எங்களுக்கு நீதி வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் தங்கள் வாதம் அபத்தமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். மனிதச் சட்டங்களை ஏற்றுக் கொண்டால் தான் மோசடி செய்யப்பட்ட பணம் எங்களுக்குக் கிடைக்கும் என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை என்று கூற வேண்டியது தானே?
இவர்களின் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான். இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருள் திருட்டுப் போய் விடுகின்றது. இஸ்லாமியச் சட்டத்தின்படி திருடனின் கையை வெட்ட வேண்டும். இந்தியாவில் சில மாதங்கள் சிறைத் தண்டனை தான் அளிக்கப்படும்.
அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான சட்டம் தான் இந்தியாவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டே இவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மனிதச் சட்டப்படியாவது எங்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடுகின்றனர். இவர்கள் செய்த வாதம் இப்போது என்னவானது?
ஹஜ் எனும் கடமையைச் செய்ய எந்த மனிதரிடமும் நாம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. ஆனால் பாஸ்போர்ட், விஸா என்று பல்வேறு அனுமதிகளை வாங்கினால் தான் ஹஜ் செய்ய முடியும் என்று மனிதச் சட்டங்கள் கூறுகின்றன.
மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வருகிறார்களா? அல்லது மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டும் என்று கூறுவார்களா?
இவர்கள் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தித் தான் எல்லாவிதமான கொடுக்கல் வாங்கல்களையும் செய்கிறார்கள்.
தங்கம், வெள்ளி போன்றவை இயற்கையாகவே மதிப்புடைய பொருட்கள். அதன் மூலம் கொடுக்கல், வாங்கல் நடத்தினால் அதில் குறை ஏதும் சொல்ல முடியாது.
அல்லது பண்டமாற்று முறையில் கொடுக்கல் வாங்கல் நடத்தினால் அதையும் குறை கூற முடியாது. ஏனெனில் பண்டங்களுக்கு இயற்கையாகவே மதிப்பு உள்ளது.
ஆனால் ரூபாய் நோட்டுக்களுக்கு இயற்கையாக எந்த மதிப்பும் கிடையாது. 1000 ரூபாய் நோட்டுக்கு உரிய இயற்கையான மதிப்பு அதைத் தயாரிக்க ஆகும் செலவு தான். அதாவது 1000 ரூபாய் நோட்டைத் தயாரிக்க 10 ரூபாய் ஆகும் என்றால் அது தான் அந்தக் காகிதத்தின் மதிப்பு!
மனிதச் சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, அந்தப் பேப்பரைக் கொண்டு வருபவனுக்கு 1000 ரூபாய் மதிப்புடைய பொருளைக் கொடுக்கலாம் என்று உத்தரவாதம் தருவதால் தான் அதற்கு செயற்கையாக மதிப்பு கூடுகின்றது.
ஒருவர் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்திக் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதே, மனிதச் சட்டங்களைப் பின்பற்றாமல் என்னால் வாழ முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.
குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, சாலை விதிகள் என ஆயிரமாயிரம் விஷயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் மனிதனுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இதற்குக் கட்டுப்படாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.
யாரும் சொல்லாத தத்துவத்தை (?) சொன்னால் ஒரு கூட்டம் சேர்க்கலாம் என்பதற்காக மக்களை மடையர்களாக்குகிறார்களே தவிர எள்ளளவும் இவர்களது வாதத்தில் நேர்மையில்லை.
தேர்தலைப் புறக்கணிப்பதற்கு மட்டும் தான் இவர்களது வாதத்தை நடைமுறைப்படுத்த முடியுமே தவிர இதைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் இவர்களின் வாதம் செல்லத்தக்கதாக இல்லை.

துர்மணம் தேடும் ஜமாஅதே இஸ்லாமி அமீர் ஹஜ்ஜூல் அக்பர்


(அல்ஹஸனாத் ஜுன் 2007 இதழில், ஜமாஅதே இஸ்லாமி அமீர உஸ்தாத்(?)ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் என்பவர்,’நறுமணம் நீக்கி துர்மணம் தேடும் விமர்சிகர்கள்’ என்ற தலைப்பில், தவ்ஹீத்வாதிகளை எல்லாம் அரை குறை என்று – தான் ஓர் அரை குறை என்பதை மறந்துவிட்டு – கொச்சைப்படுத்தி எழுதியிருந்தார். அவரது விமர்சினத்திலுள்ள முரண்பாடுகளுக்கும் தவறான விடயங்களுக்கும் பதில் அளிக்கப்படுகிறது.)

கடந்த அல்ஹஸனாத் ஜுன் 2007 இதழில் காக்கா ஹஜ்ஜுல் அக்பர் என்பார் : ஹஸனுல் பன்னா, மவ்லானா மவ்தூதி, மவ்லானா இல்யாஸ், ஸையித் குதுப், யூசுப் அல்கர்ளாவி, ரஷீத் அல்ஃகன்னூஸி, உமர் தில்மஸானி, பைஸல் மவ்லவி போன்றோர் இஸ்லாமிய உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெற்றவர்கள் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டு, வாதிடுகின்றார்.
உண்மையில், இங்கு இவரால் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் பெரிய அறிஞர்களோ, ஆய்வாளர்களோ அல்லர் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் உலகிலுள்ள மிகச் சொற்பமான, இஸ்லாத்தை விளங்காத சில ஆதரவாளர்களைப் பெற்ற, பல தவறான கொள்கைகளையுடைய இயக்கவாதிகள் மாத்திரமே. இமாம் இப்னு தைமிய்யா, அல்பானி, P.ஜைனுல் ஆபிதீன் போன்ற பன்முக ஆளுமையுடைய அறிஞர்களுக்கு நிகரானவர்களும் அல்லர். வெறுமனே இயக்க ஸ்தாபகர்கள், இயக்கவாதிகள். அவ்வளவுதான் இவர்களின் பெருமை. இவர்களில் பலர் அகீதாவில் தவறு விட்டதால், சமகால பல்துறை சார்ந்த அறிஞர்களால் மிக வன்மையாக விமர்சிக்கப்பட்டவர்கள். எந்தளவுக்கென்றால், சமகால ஹதீஸ் துறை அறிஞர்களில் ஒருவர், யூசுப் கர்ளாவி பற்றி ஒரு விமர்சன நூல் எழுதியுள்ளார். (இஸ்காத் அல்கல்புல் ஆவி யூசுப் அப்தில்லாஹ் அல்கர்ளாவி) யூசுப் கர்ளாவி ஒரு வெறிபிடித்த நாய் என்று தனது நூலுக்கு பெயரிட்டு விமர்சித்துள்ளார். இந்தளவு கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டவர்களுக்குத்தான் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் என்று நீங்கள் போலிப் புகழ் தேடிக் கொடுக்க முனைகின்றீர்.
நீங்கள் பெயர் குறிப்பிட்டுத் துதிபாடுபவர்களில் மவ்தூதி தவிர, மற்றவர்கள் எகிப்தில் பல முஸ்லிம் இளைஞர்களைக் குர்பான் கொடுத்ததைத் தவிர, இதுவரை எதையும் சாதிக்காத இக்வான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். மவ்தூதி என்பவர் நபி () அவர்களின், தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பை மறுத்தவர். நபி () அவர்கள் யூகத்தின் அடிப்படையில் பேசிவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்று ஹதீஸைக் கேவலப்படுத்திவர். (பார்க்க: முiவாயடிரச சுயளயயடை றுயடஅயளயயடை P.57) இதை மவ்தூதி தனது தப்ஹீமில் ‘யூஸூப் நபி ஹிட்லருக்கு நிகரான அதிகாரத்தை வேண்டினார்’ என்று நபியையும் குர்ஆனையும் கேவலப்படுத்தியவர். இவ்வாறு, நபிமார்களை அவமதிப்பவர்களை முஸ்லிம் உம்மத் எவ்வாறு அங்கீகரிக்கும்? மவ்லானா இல்யாஸைப் பற்றிப் பேசவே தேவையில்லை. தப்லீக் இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகளை அவதானித்தால், அவரது இஸ்லாமிய அறிவு ஞானத்தையும் சமூக அங்கீகாரத்தையும் பட்டென்று புரிந்து கொண்டு விடலாம்.
இலங்கையில் கூட, நீங்கள் குறிப்பிட்டுள்ள இயக்கவாதிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான்களான ஆகுஊனு தவிர்ந்த மற்ற இயக்கங்களின் அங்கீகாரத்தைப் பெறாதவர்கள். ஜமாஅத்தே இஸ்லாமியும் இக்வான்களான ஆகுஊனுயும், இல்யாஸ் மவ்லானாவின் சமூக அங்கீகாரக் கருத்துக்களை(?) எடுத்துக் கூறுவதில்லை. தவ்ஹீத்வாதிகளுக்கு எதிராக, தப்லீக் ஜமாஅத்வாதிகளைத் தூண்டிவிட மாத்திரம் அவரின் பெயரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதேபோல், தப்லீக் ஜமாஅத் மஜ்லிஸ்களில், ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) இயக்கவாதிகளின் கருத்துக்கள் பேசப்படுவதில்லை. ஏன்? ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) இயக்கவாதிகளின் ஒரே இலட்சியம் கி(இ)லாபத் கனவுதான். எனினும் இவர்களே இரண்டாகப் பிரிந்து, பல துருவங்களாக உள்ளனர். இவர்களே ஒற்றுமைக் கோஷத்தையும் இடைவிடாது போட்டும் வருகின்றனர்.
‘முதலில் விமர்சிக்கப்படுபவரையும், அவரது மகிமைகள், அவர் செய்திருக்கும் மகத்தான பணிகள் என்பவற்றையும் சிலாகித்துக் குறிப்பிட்ட பின் அவரது உலக மறுமை நற்பேறுகளுக்காக துஆச் செய்துவிட்டு அடுத்ததாக,ஒரு முஸ்லிம் தன் அடுத்த சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைப்பாடு என்ற வகையில் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பண்பாடாக விமர்சிக்கும் போதும், பின்னால் அந்தத் தவறுகளுக்காக அல்லாஹ் அவரை மன்னித்து விடுவானாக! என்று பிரார்த்தனை செய்யும் போதும் மனம் புல்லரித்து விடுகின்றது. ஒரு மனிதரிடம் அடக்கமும் அறிவும் இருக்கின்றது என்பதற்கான அடையாளம்தான் இத்தகைய விமர்சனமாகும்.’ என்று எழுதியுள்ளீர்.
‘ஒருவரை விமர்சித்தால், அவரது மகிமைகள், அவர் செய்திருக்கும் மகத்தான பணிகள் என்பற்றையும் சிலாகித்துக் குறிப்பிட்ட பின்னர்தான்…’ என்று தொடரும் நீங்கள், இதற்கு முன்னர் அறிஞர் P.து.யையும் பல தவ்ஹீத் அறிஞர்களையும் விமர்சித்துள்ளீர்கள். நீங்கள் எழுதியபடி, அறிஞர் P.து. அவர்கள் செய்துவரும் நற்பணிகளை எல்லாம் சுட்டிக் காட்டித்தான் விமர்சித்தீர்களா?
•    இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியூடாக இஸ்லாத்தின் தூதை, முஸ்லிமல்லாத மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களில் கணிசமான ஒரு தொகையினரை, இஸ்லாத்தில் நுழைய வைத்து, பலரை இஸ்லாத்தின் ஆதராவாளர்களாக மாற்றியதை எடுத்துக் காட்டித்தான் விமர்சித்தீர்களா?
•    வரதட்சணை கொடுமைகளால் ஏற்பட்ட சீரழிவுகளை எடுத்துக்காட்டி, இஸ்லாமிய பெண் விடுதலைக்காக அவர் ஆற்றிவரும் புரட்சிகரமான பணிகளை எடுத்துக் காட்டித்தான் விமர்சித்தீர்களா?
•    அமேரிக்க, இஸ்ரேலின் அராஜகங்களை பகிரங்கமாக மேடை போட்டு அவர் கண்டித்து ஆற்றிய உரைகளை எடுத்து விளக்கித்தான் விமர்சித்தீர்களா?
•    தூய்மைத் தவ்ஹீத் வாதத்தை ஆய்வினடியாய் எடுத்துக் கூறி, ஷிர்க்-பித்அத்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதில் அவர் ஆற்றிவரும் நிகரற்ற பணிகளை எடுத்துக் காண்பித்துத்தான் விமர்சித்தீர்களா?
•    காதியானிஸம், தரீக்காயிஸம், சூபிஸம், 19யிஸம், கிறிஸ்தவர்கள் போன்ற பல்வேறு தவறான மதவாதிகளுடன் அவர் விவாதித்து, இஸ்லாத்தின் பெருமையை நிரூபித்ததையெல்லாம் எடுத்துக் கூறித்தான் விமர்சித்தீர்களா?
•    20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்து, உரை, ஆய்வு போன்ற அனைத்து ஊடகங்களாலும் அவர் சத்திய இஸ்லாத்தைக் காப்பதற்காக இடைவிடாது போராடி வருவதைக் குறிப்பிட்டுக் கூறித்தான் விமர்சித்தீர்களா?
•    இந்த நாட்டில் தவ்ஹீத் அமைப்புக்கள் செய்து வரும் நற்பணிகளையெல்லாம் சிலாகித்துத்தான் விமர்சித்தீர்களா?
ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் இயக்கங்களின் தவறான கொள்கைகளை எவருக்கும் அஞ்சாமல், துணிகரமாகவும் விவேகமாகவும் விமர்சித்தார் என்பதற்காக மட்டும் அவரை விமர்சித்தீர்கள். உங்கள் இயக்கம் சார்ந்தவர்களை விமர்சிக்கும் போது, நாங்கள் மட்டும் நன்மையைக் கூற வேண்டும். நீங்கள் எப்படியும் விமர்சிக்கலாம் என்ற இறுமாப்புத்தானே இவ்வாறு எழுதவைத்துள்ளது. ‘ஒருவரிடம் அடக்கமும் அறிவும் இருக்கின்றது என்பதற்கான அடையாளம்தான் இத்தகைய விமர்சனமாகும்…’ என்று தொடரும் நீங்கள், மற்றவர்களின் ஒரே ஒரு நற்பணியைக் கூட சுட்டிக் காட்டிப் பண்பாடாக விமர்சிக்கவில்லை;. மனிதத் தவறுகளுக்காக அல்லாஹ்விடம் அவர்கைளை மன்னித்து விடுவாயாக! என்று நீங்கள் பிரார்த்தனை செய்யவில்லை.
எனவே, நீங்கள் எவ்வாறு விமர்சிக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குக் கூறுகின்றீரோ, அந்தப் பண்புகள் உங்களிடமே இல்லை. உங்களின் வாதப்படி உங்களிடமே அடக்கமும் அறிவும் இல்லை என்பதை நீங்களே ஏற்றுக்கொண்டுவிட்டீர். நீங்கள் ஓர் அரைகுறை என்பதை எழுத்தாலும் பேச்சாலும் மட்டுமல்ல, பத்வாக்களாலும் கூட நிரூபித்துள்ளீர்கள். ஒரு முறை சிலாபம் பள்ளியின் ஹவ்லில் நாய் விழுந்த போது, உங்களிடம் ஹவ்லை சுத்தம் செய்வது எவ்வாறு என்று கேட்கப்பட்டபோது, மண்போட்டு ஏழு முறை கழுவ வேண்டும் என்றீர். இதையே சகோ. அகார் முஹம்மதிடம், உங்கள்; பத்வாவை யார் சொன்னது என்று குறிப்பிடாமல் கேட்டபோது, யார் இவ்வாறு அரைகுறை பத்வா வழங்கியது? அது, தவறு. நாயை வெளியே எடுத்து வீசினால் போதும் என்றார். ஆகவே, அகார் முஹம்மதும் உங்களை அரைகுறை என்று கூறியுள்ளார்.
இஸ்லாமிய அடிப்படையை, கலிமாவின் விளக்கத்தை அரை-குறையாகப் புரிந்துகொண்டவர்களை விமர்சிக்கும் தவ்ஹீத்வாதிகளை எல்லாம் அரைகுறை என்று எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மாதம்பையில் லுஹர் தொழுகையை 5 ரக்ஆத்துக்கள் தொழுவித்துவிட்டு ஸலாம் கொடுத்தீர்கள். அதை நினைவுபடுத்திய பின், நீங்கள் திரும்பத் தொழ வேண்டும் என்று சுடசுட அரைகுறை பத்வா வழங்கினீர்கள். 4 ரகஅத் தொழுகையை மறதியாக 5 ரக்ஆத்துக்கள் தொழுதால், இரண்டு ஷஸஜ்தா| செய்ய வேண்டும் என்ற அன்றாடத் தொழுகை சட்டமே தெரியாத அறிவுமகாஞானி நீங்கள், இதையும் மறந்து மற்றவர்களுக்கு அரைகுறை என்கிறீர்களே! ஹஜ்ஜுல் அக்பர் நானா! இது நியாயம்தானா? மத்ரஸா சான்றிதழ் கூட இல்லாத உங்கள் பெயருக்கு முன்னால் ‘உஸ்தாத்’ பட்டம் எவ்வாறு வந்தது? ‘உஸ்தாத்’ பட்டம் பெற எவ்வளவு தகுதியும், P.hன முடித்த பின்னர் பல வருட அனுபவமும் வேண்டும். இவையெல்லாம் உங்களிடம் இருக்கின்றனவா? நீங்களும் ஜாமிஆ நளீமிய்யாவில் துரஅp ழுரவ என்பதை மறந்து, மற்றவர்களை அரைகுறை என்று எழுதுவது உங்களுக்குக் கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா?; இயக்கவாதிகள் மீதான அளவு மிஞ்சிய பாசம், கடந்த காலத்தை எல்லாம் மறக்கடித்துவிட்டதா? அல்லது தவ்ஹீத்வாதிகள் மீதுள்ள வெறுப்பா?
சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள், முஸ்லிம் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் என்று அறிமுகப்படுத்திய சிலரில், செய்யித் குதுப் என்பவரும் ஒருவராவார். இவர் வாழ்ந்த காலப் பகுதியில் உலகில் எங்கும் முஸ்லிம்கள் இல்லை என்று, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் காபிராக்கியவர்! செய்யித் குதுப் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தையும் காபிர் என்றார் என்பதை, அதே இயக்கத்தைச் சேர்ந்த யூசுப் கர்ளாவி தனது ஷஅவ்லியாத்து ஹரகதில் இஸ்லாமிய்யா| என்ற நூலில் ஏற்றுக் கொள்கின்றார். இவர் முஸ்லிம் சமூகத்தை அங்கீகரிக்கவே இல்லை. செய்யித் குதுப், மூஸா நபியையும் இப்ராஹீம் நபியையும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும், மூஸா நபியை இனவெறியர் என்றும் கொச்சைப்படுத்தியவர். முஸ்லிம் சமூகத்தை அங்கீகரிக்காத இவர், எவ்வாறு முஸ்லிம் உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெறுவார்? பெற முடியும்? சூறா அல் – இஃலாஸுக்கு விரிவுரை (?) வழங்கும் போது, அனைத்திறைவாத(அத்வைத)க் கொள்கையை பிரதிபலித்திருக்கின்றார். அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்றும் எழுதியுள்ளார். இவரது முகத்தில் இஸ்லாத்தின் அடையாளங்கள் கூட இருந்ததில்லை.
யாரடா என்று கேட்கப்பட்ட மேதை யார்? தரீக்கா வழிபாட்டையும், ஷிர்க்கையும், ஷீஆயிஸத்தையும் ஆதரித்தவர், உமர் தில்மஸானி (மூன்றாவது இக்வானியத் தலைவர்- சினிமாத் தியட்டரில் அஸரையும் லுஹரையும் ஜம்வு செய்தவர்) சிகரட் குடித்துக்கொண்டு வந்தபோது, தடுக்கவும் – ஏவவும் மாட்டேன் என்று சொன்னவர். பல இளைஞர்களின் இரத்தத்தை வீணாக ஓட்டியவர். அவர்தான் நீங்கள் போற்றும் மாமேதை ஹஸனுல் பன்னா. P.து. என்றாலும் ஓரளவு கண்ணியமாக விமர்சித்தார். ரபீவு மத்கலி வெறிபிடித்த நாய் என்று எழுதியுள்ளாரே! இதற்கு என்ன சொல்லப் போகின்றீர்கள். மத்கலி ஒரு சமகால மாமேதை. அவரின் உள்ளத்திலுள்ள இஸ்லாத்தின் அறிவுப் பாரம்பரியத்தை ஹஸாபிய்யா தரீக்கா மந்திர சக்தியால் பன்னா கடத்திவிட்டாரா? உலக அதிசயம்தான். தவறான கொள்கைகளை விமர்சித்தால் இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம் எடுபட்டுவிடுமா?
தரீக்கா வழிபாட்டை அங்கீகரித்தோர்தான் மாமேதைகளா? அல்லாஹ் தனது நண்பராக்கிய இப்ராஹீம் நபியை ஒழுக்கம் கெட்டவர் என்று தூற்றியவர்கள் தான் மாமேதைகளா? இவர்களின் கருத்துககளுக்;குத்தான் கண்ணியம் கொடுக்க வேண்டுமா? இவர்களையெல்லாம் முஸ்லிம் சமூகம் எவ்வாறு அங்கீகரிக்கும்? எங்கள் கொள்கை உள்ளத்தில் செய்யித் குதுபைவிட, நபிமார்களும் ஸஹாபாக்களும் மரியாதையில் உயர்ந்து நிற்கின்றார்கள். ஏகத்துவ வாதிகளுக்கும் இயக்கவாதிகளுக்குமிடைலுள்ள வேறுபாடு இங்குதான் வெளிச்சத்திற்கு வருகிறது. ஹஸனுல்பன்னா, மவ்லானா இல்யாஸ் போன்றவர்கள் தரீக்கா சிந்தனை சார்ந்தவர்கள். இவர்கள் முஸ்லிம் உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெறாத, குறுகிய சில ஆதராவாளர்களை மட்டுமே கொண்ட ஜமாஅதே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) போன்ற இயக்கங்களின் ஆதரவை மட்டும் பெற்றவர்கள். நபிமார்களை இனவெறியர்கள், ஹிட்லர் போன்ற அதிகாரத்தை வேண்டியவர்கள் என்றெல்லாம் தூற்றிய இவர்கள், சகோ. ஹஜ்ஜுல் அக்பருக்கும் அவர் தலைமை வழங்கும் ஜமாஅத்தே இஸ்லாமிக்கும், மீள்பார்வைக்கும் வேண்டுமானால், நேசத்திற்குரியவர்களாக தெரியலாம். ஆனால், ஏகத்துவவாதிகளுக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் இவர்களைவிட பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்களாக உள்ளனர். அதனால்தான் நாம் அல்குர்ஆனையும் நபி வழியையும் மட்டும் பின்பற்ற வேண்டும் என்கின்றோம்.
கண்மூடித்தனமாக எந்த அறிஞர்களின் பின்னாலும் நாம் செல்வதில்லை. தவ்ஹீத் உலமாக்கள் தவறுவிட்டால், எப்படி ஜமாஅதே இஸ்லாமி, ஆகுஊனுகளின் தவறான கருத்துக்களை விமர்சிக்கின்றோமோ, அதேபோன்று விமர்சிக்கின்றோம். தவ்ஹீத்வாதிகளிடம் என்னவன் உன்னவன் என்ற வேறுபாடுகள் இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இஸ்லாமியப் பாரம்பரியங்களை இதயத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டு, மனோ இச்சைகளையும் இயக்க நலனையும் பெரிதாக மதிப்பவர்களின் வழி எங்கள் வழி அல்ல என்று உறுதியாகக் கூறுகின்றோம். முஸ்லிம் சமூக அங்கீகாரமற்றவர்களுக்காகவும் இஸ்லாத்தையும் இறைத்தூதர்களையும் அவமதித்தவர்களுக்காகவும் வாதிட்டு, அல்குர்ஆனையும் ரசூல்மார்களையும் ஸஹாபாக்களையும் அவமதிக்கும் ஈனச் செயலுக்கு நாம் ஒருபோதும் துணை நிற்கமாட்டோம்.
‘குர்ஆனிய வசனங்களில் காணப்படுகின்ற அற்புதமான ஓசை நயத்தில் தன்னைப் பறிகொடுத்த அவர் அதில் காணப்படுகின்ற இசை நுணுக்கங்களை விபரிக்கின்றார். துர்மணம் தேடுவோருக்கு அது போதாதா? அவரது மூக்கு இசை என்ற சொல்லில் பட்டுவிடுகிறது. உடனே அந்த சொல்லின் கூடாத வாசம் அவரது மூக்கைத் துளைக்கிறது.’ நறுமணம் மூக்குக்குக் அடிப்பது போன்று துர்மணமும் தெரிய வேண்டும். இல்லாவிட்டால், மலத்தையும் பிணத்தையும் உண்ண மனிதன் ஆரம்பித்துவிடுவான். எனவே, நாங்கள் குறை-நிறைகள் இரண்டையும் பேசுகின்றோம். நல்லறிஞர்களிடம் நளினத் தன்மையையும் குறைமதிகளிடமும் முஸ்லிம் உம்மத்தை தவறாக வழிநடாத்தியவர்களிடமும் கடுமையான விமர்சனத் தன்மையையும் கடைப்பிடிக்கின்றோம்.
தவ்ஹீத் அறிஞர்கள், ஜமாஅதே இஸ்லாமியை விமர்சிக்கும் ஒரே காரணத்திற்காக அவர்களின் விமர்சனத்தை மட்டும் குறைகாணும் நீங்கள், அவர்களின் மகத்தான நற்பணிகளை எடுத்துக் கூறியதுண்டா? ‘…குறைகளை மட்டும் தேடி விமர்சிக்கும் குணமுடையவர்கள் மேதாவித்தனமும் அகம்பாவமும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போகின்றீர்கள். அப்படியாயின், P.து. அவர்களும் மற்றும் தவ்ஹீத் அறிஞர்களும் உரையாற்றிய பலவாயிரம் ஏஊனுகள் உள்ளன. ஆவற்றின் அத்தனை நறுமணமும் உங்கள் மூக்குக்குப்படவில்லை. பல்லின மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்ற ஒரே ஒரு உரையில் பேசப்பட்ட உங்களுக்கு பிடிக்காத சொல்லின் கூடாத வாசம் உங்கள் மூக்கைத் துளைத்துவிட்டது. உடனே! அதை விமர்சிக்க ஆரம்பித்துவிடுகிறீர்! அவ்வாறாயின் பல்லின மக்களுக்கு மத்தியில் எவ்வாறு வாழுவது என்று அருமையாக கூறப்பட்ட அத்தனை நறுமணம் கமழும் நல்லறிவுரைகளையும் விடுத்து, குறைமட்டும் தேடிய உங்களிடம் மேதாவித்தனமும் அகம்பாவமும் குடிகொண்டுள்ளது என்றுதானே உங்கள் எழுத்து மூலம் உங்களுக்கு நீங்களே சொல்லியுள்ளீர்கள்.
2005ல் P.து. இலங்கை வந்த போது, பல பாகங்களிலும் பல்;வேறு தலைப்புக்களில் உரையாற்றினார். இவையெல்லாம் அருமையான, ஆழமான, தர்க்கரீதியான உரைகள். இந்த உரைகளில் அவர் ஜமாஅதே இஸ்லாமி, ஆகுஊனு என்பன மழுப்புவது போன்று, வளையாது, நெளியாது, மழுப்பாது, மறைக்காது அழுத்தமாக உண்மைகளைப் பேசினார். இதை தாங்க முடியாத சகோ. மின்ஹாஜ் இஸ்லாஹி என்பவர் மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான் என்று அல்ஹஸனாத்தில் எழுதினார். ஆனால், இதே மின்ஹாஜ் சில வருடங்களுக்கு முன்னர் புத்தளத்தில் ஷரீஆ கவ்ன்சில் ஆநநவiபெ போட்ட போது, கற்களுடனும் பொல்லுகளுடனும் சில தடியடி ஜமாஅத் ஊழியர்களுடன் சென்று, மேடையிலுள்ள பொருட்களை உடைத்து, சேதப்படுத்தினார். கருத்தை கருத்தால் வெல்ல முடியாமல், தடியடியால் வெல்ல முனைந்த ஜமாஅதே இஸ்லாமி மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான் என்று எழுதுவது வேடிக்கைக்குரியதாகும். கருத்தால் புரோகித இயக்கங்களை துணிவாக விமர்சித்த P.து.யை மென்மை இழந்தார் என்று எழுதுவது எவ்வளவு வக்கிரப் புத்தி நிறைந்தது? யார் மென்மையை இழந்தவர்கள். மழுப்பாது, மறைக்காது, தெளிவாக கருத்தை முன்வைத்தவரா? ரவ்டிகளுடன் இணைந்து, வுரடிந டுiபாவகளை உடைத்து, ஷரீஆ கவ்ன்சிலின் மேடையை ரணகளப்படுத்திய ஜமாஅதே இஸ்லாமியா?
ஸஹாபாக்களைத் திட்டித் தீர்க்கும் ஷீஆக்களைக் கண்டித்து நீங்கள் இப்படி ஒரு கட்டுரை எழுதியதுண்டா? ஆயிஷா(ரழி)வை வேசி என்பவர்களை இயக்க அரசியல் நலனுக்காக ஆதரிக்கின்றீர்களே! அபூபக்கரை ‘காபிர்’ என்று கூறிய சாட்சாத் குமைனியின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்று எழுத எப்படி உங்களுக்குத் துணிவு வருகிறது? ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் கண்ணியமிக்க தாயாக மதிக்கும் ஆயிஷா (ரழி)யை வேசி என்று எழுதிய குமைனியின் புரட்சியை மவ்தூதி : ‘இஸ்லாமியப் புரட்சிளூ அதனை ஆதரிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாஜிப்’ என்றார். முஅவியா () அவர்களை ஏமாற்றுக்காரன், பொய்யன், நயவஞ்சகன் என்றெல்லாம் மவ்தூதி திட்டியுள்ளார். மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! யாரின் உள்ளத்திலிருந்து அல்லாஹ் இஸ்லாமியப் பாரம்பரியத்தை அகற்றியுள்ளான்? வஹியை எழுதிய முஅவியா (), மற்றும் அம்ர் () போன்ற ஸஹாபாக்களைவிட, சமகாலத்தில் தோன்றிய, கலிமாவுக்குச் சரியான விளக்கம் தெரியாத, அரைகுறை இஸ்லாம் தெரிந்த இயக்கவாதிகள், உங்கள் மதிப்புக்கும் மாண்புக்கும் உரித்தானவர்களாகிவிட்டார்கள்! இது ஏன்? இஸ்லாத்தைவிட இயக்கம் பெரிதானதால் தானே?
இஸ்லாத்தை விட, பன்னாயிஸத்தையும் மவ்தூதியிஸத்தையும், இயக்க நலனையும் பெரிதாக மதிப்பவர்களின் பின்னே செல்பவர்கள் யார்?
•    கலிமாவுக்குச் சரியான விளக்கம் தெரியாதவர்கள்.
•    நபிகளாரின் ஸூன்னாவில் ஏற்றத் தாழ்வு பார்ப்பவர்கள்.
•    ஸூன்னாவுக்கும் பித்அத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்கள்.
•    ஷிர்க்-பித்அத் என்பவற்றை சில்லறைப் பிரச்சினை என்பவர்கள்.
•    நபியின் ஹதீஸ்களைவிட தமது இயக்க இஸ்தாபகர்களின் கருத்துகளுக்கு முதலிடம் வழங்குபவர்கள்.
•    சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட ஸஹாபாக்களைக் காபிர்கள் என்று திட்டும் ஷீஆக்களை வாயாரப் புகழ்ந்து, ஆதரிப்பவர்கள்.
•    அரசியல் அதிகார ஆசை பிடித்தவர்கள். அதற்காக, பல நல்லறிஞர்களைக் கொலை செய்தவர்கள்.
•    அரசியல் அதிகாரத்திற்காக அனைத்து வழிகெட்ட இயக்கங்களுடனும் நளினத்தன்மை கடைப்பிடிப்போர்.
•    ஷிர்க்-பித்அத்,வழிகேட்டு இயக்கங்களை விமர்சிக்கும் தவ்ஹீத்வாதிகளுடன் மட்டும் கடுமை காட்டுவோர்.
மொத்தத்தில், இவர்கள் அல்குர்ஆன் – ஹதீஸ் பற்றிய ஆழமான அறிவற்ற, ஜிஹாத், அரசியல் பற்றிய மேலோட்டமான சில விடயங்களை மட்டும் தெரிந்த உணர்ச்சிக் கோஷதாரிகள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் கூட, எந்த அரசியல் மாற்றத்ததையும் இதுவரை ஏற்படுத்த முடியாத வரண்டுபோன நிலையிலுள்ள இவர்கள்தான், 8மூ முஸ்லிம்கள் வாழும் இலங்கையில், நளைக்கழித்து இஸ்லாமிய கிலாபத்தைக் கொண்டுவருவோம் என்று, கற்பனை உலகில் சிறகு இல்லாமல் பறந்து கொண்டு, தானும் ஏமாந்து, அல்குர்ஆன் – ஹதீஸ் தெரியாத அப்பாவிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே! நீங்கள் இயக்க சிந்தனைவாதிகளுக்காக வாதாடி, கட்டுரை எழுதி அல்லாஹ்வையும் அல்குர்ஆனையும் அவனது தூதர்களையும் ஹதீஸ்களையும் அகவ்ரவப்படுத்தாதீர்கள். நீங்கள் நேசிப்பவர்களைவிட, இறைத்தூதர்களும் ஸஹாபாக்களும்; கண்ணியமானவர்கள் என்று எண்ணவாவது முயற்சி செய்யுங்கள். அப்போது, அல்லாஹ் அருள் செய்வான், கண்ணியப்படுத்துவான். இல்லாவிட்டால் இழிவுதான் மிஞ்சும். நீங்கள் குறிப்பிட்ட சிலரின் பெயர்களைவிட, தரமான அறிஞர் பட்டியல் உள்ளது. அந்த இஸ்லாமிய அறிஞர்களின் தூய சேவைகளையும் எடுத்துச் சொல்லுங்கள்.
சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே! இஸ்லாத்திற்காக வாதிடுங்கள். இயக்கத்திற்காக வாதிடாதீர்கள். குர்ஆனையும் ஹதீஸையும் சாதாரண மனிதர்களின் கருத்துக்களைவிட மேன்மையானதாக மதியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலித்து, மார்க்க ஞானத்தையும் அதில் தெளிவையும் வழங்குவானாக!
.

இஸ்லாமிய ஆட்சி தான் முஸ்லிம்களின் இலட்சியமா


கிலாஃபத் – உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி என்ற கருத்து தற்போது பரப்பப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்தையுடையவர்களின் வாதங்கள்:
கிலாஃபத் என்பது இல்லாமல் இஸ்லாம் என்பதே இல்லை. இந்த இலக்கைக் கொண்டு தான் நுபுவ்வத் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் சென்றதும் இதற்காகத் தான்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவினார்கள். அப்போது தான் மது விலக்கு போன்ற கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடிந்தது. எனவே இஸ்லாமிய ஆட்சி இல்லாமல் இஸ்லாம் முழுமையாக நடைமுறைக்கு வராது.
எதிர்காலத்தில் மஹ்தீ (அலை) அவர்கள் தோன்றும் போது இஸ்லாமிய ஆட்சிக்காக பைஅத் செய்ய வேண்டும். அந்த கிலாஃபத்தை உருவாக்க இப்போதே முயற்சி செய்வது நமது கடமையாகும். மஹ்தீ தொடர்பான நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளும், 24:55 வசனமும் கிலாஃபத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
இவ்வாறு இவர்கள் வாதிடுகின்றனர். இந்தப் பிரச்சாரம் செய்பவர்களிடம் பைஅத் பெறும் முறை உள்ளது.
இது குறித்து மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை ஏகத்துவத்தில் கேள்வி பதில் பகுதியிலோ அல்லது தனிக் கட்டுரையாகவோ விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இஸ்லாமிய ஆட்சியை, கிலாஃபத்தை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ எந்த இடத்திலும் கூறப்படவேயில்லை. இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தும் இலக்கைக் கொண்டே நுபுவ்வத் – நபித்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது இறைவன் மீது இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலாகும்.
இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் நோக்கம் என்றால் எல்லா இறைத் தூதர்களும் மன்னர்களாகவே இருந்திருக்க வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நபிமார்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவில்லை. பல நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருக்குர்ஆனில் 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70 ஆகிய வசனங்கள் இறைத்தூதர்கள் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிடுகின்றன.
தாவூத் நபியவர்கள் தாலூத் என்ற மன்னரின் படையில் போர் வீரராக இருந்துள்ளார்கள்.
மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம் என்று தமது நபியிடம் கூறினர். உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா? என்று அவர் கேட்டார். எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது? என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.
தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான் என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 2:246, 247
நபி யூசுப் (அலை) அவர்கள், இஸ்லாமிய ஆட்சியல்லாத ஓர் ஆட்சியின் கீழ் அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார்கள். அந்த ஆட்சியின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துள்ளார்கள்.
அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! அவரை எனக்காகத் தேர்வு செய்கிறேன் என்று மன்னர் கூறினார். அவரிடம் மன்னர் பேசிய போது இன்றைய தினம் நீர் நம்மிடத்தில் நிலையான இடம் பெற்றவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறீர் என்றார். இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன் என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 12:55
எனவே, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தான் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று கூறுவது திருக்குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். இறைத் தூதர்களின் பணி என்னவென்று திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்! என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.
அல்குர்ஆன் 21:25
எடுத்துச் சொல்வது தவிர இத்தூதர் மீது வேறு (பொறுப்பு) இல்லை.
அல்குர்ஆன் 5:99
தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்களுக்கு வேறு எதுவும் உள்ளதா?
அல்குர்ஆன் 16:35
இதே கருத்து 16:82, 24:54, 29:18, 36:18, 64:12 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.
ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்வது தான் இறைத்தூதர்களின் பணியாக இருந்துள்ளது; இதைத் தவிர வேறு கடமை அவர்களுக்கு இல்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.
இவ்வளவு தெளிவாகத் திருக்குர்ஆன் பிரகடனம் செய்யும் போது, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் கடமை என்று ஒருவர் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுகிறார் என்று தான் அர்த்தம்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.
அல்குர்ஆன் 6:21
நபி (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில், இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தாம் அனுப்பப்பட்டதாக எந்தவொரு கட்டத்திலும் குறிப்பிட்டதே இல்லை. குறைந்தபட்சம் மக்காவில் 13 ஆண்டு காலம் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதாவது, இஸ்லாமிய ஆட்சியே எனது குறிக்கோள் என்று பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மக்காவில் தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த பதிலைப் பாருங்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா? என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.
(பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி)
நூல்: புகாரி 3612, 3852
நபித்தோழர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றிக் கூறும் போது, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதே என் லட்சியம்; உடனே எதிரிகளை வீழ்த்தப் புறப்படுங்கள் என்று நபியவர்கள் கூறவில்லை. ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டால் சோதனைகள் வரத் தான் செய்யும்; பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதே சமயம் இஸ்லாம் வெற்றியடையும் என்றும் முன்னறிவிப்புச் செய்கிறார்கள்.
அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.
அல்குர்ஆன் 24:55
இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் முஸ்லிம்களின் இலட்சியம் என்பதற்கு இந்த வசனத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் பெறப் போகும் வெற்றி குறித்து அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதியைப் பற்றியே இந்த வசனம் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் போருக்கு அழைக்கும் போது நயவஞ்சகர்கள் புறக்கணிப்பது பற்றிய செய்தியைக் கூறி விட்டு, அதன் பிறகு தான் மேற்கண்ட செய்தி கூறப்படுகின்றது. இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களுடன் இணைத்துப் பார்த்தால் இதை விளங்கிக் கொள்ள முடியும்.
(முஹம்மதே!) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்கின்றனர். சத்தியம் செய்யாதீர்கள்! அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் என்று கூறுவீராக!
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.
அல்குர்ஆன் 24:53, 54
24:55 வசனத்தில் கூறப்பட்டுள்ளது அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானது என்று ஒரு வாதத்திற்குக் கூறினாலும் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்பதற்கு இதை ஆதாரமாகக் கொள்ள எந்தச் சான்றும் இதில் இல்லை.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்குப் பூமியில் அதிகாரம் வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி, அதைப் பிற மக்களுக்கும் எடுத்துரைத்து, அதில் ஏற்படும் சோதனைகளுக்குப் பொறுமை காக்கும் போது, இஸ்லாமிய ஆட்சியை இறைவன் நமக்கு வழங்கலாம். அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஆட்சியதிகாரத்தை வழங்கினான். இஸ்லாமிய ஆட்சி தான் இலக்கு என்று மேற்கண்ட வசனம் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களும் ஒரு போதும் அவ்வாறு கூறவில்லை. அதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும் இல்லை. மேலே எடுத்துக் காட்டியுள்ள புகாரி 3612 ஹதீஸ் இதைத் தான் கூறுகின்றது.
எனவே இஸ்லாமிய ஆட்சி கோஷத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வாதம் புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் ஓரிறைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்வதையும், ஒற்றுமை ஒன்றையே மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வதையும் பார்க்கிறோம்.
சமாதி வழிபாட்டையும், மத்ஹபுகளையும் கண்டித்துப் பேச வேண்டும் என்றால் இவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். குர்ஆன், ஹதீஸை மட்டும் பிரச்சாரம் செய்தால் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, அதன் பிறகு ஒரு ஆட்சி ஏற்படுத்தப்பட்டாலும் அது எப்படி இஸ்லாமிய ஆட்சியாக இருக்க முடியும்?
இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற முடியும்; அதனால் தான் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம் என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர். இதுவும் அபத்தமான வாதமாகும். இஸ்லாமிய ஆட்சி இல்லாத இந்தியாவில் நமக்கு உள்ள பிரச்சார உரிமை, வணக்க வழிபாட்டு உரிமைகள் கூட இஸ்லாமிய ஆட்சி உள்ளதாகக் கூறும் நாடுகளில் வழங்கப்படுவதில்லை.
நபி (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் நடைபெற்ற போர்களில் ஏராளமான நபித்தோழர்கள், முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எல்லாமே இஸ்லாமிய ஆட்சியை மையமாக வைத்துத் தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.
மஹ்தீ (அலை) அவர்கள் தோன்றுவார்கள், இவ்வுலகை ஆட்சி செய்வார்கள் என்று முன்னறிவிப்புக்கள் இருப்பது உண்மை தான். ஆனால் மஹ்தீ (அலை) அவர்கள் தான் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, அந்த ஆட்சியை உருவாக்குவதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பாடுபட வேண்டும் என்று கூறப்படவில்லை. நாம் உருவாக்கி வைத்த அடித்தளத்தில் தான் மஹ்தீ (அலை) அவர்கள் ஆட்சியமைப்பார்கள் என்று கூறுவது பைத்தியக்காரத் தனத்தின் உச்சக்கட்டமாகும்.
இந்த வாதத்தை முன் வைக்கும் கூட்டத்தினர் பைஅத் பெறுவதை வலியுறுத்துகின்றனர். பைஅத் எனும் உறுதி மொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதி மொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர். ஆனால் இவர்கள் கூறும் இந்த பைஅத்திற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.
அல்குர்ஆன் 48:10
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் பைஅத் செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
நபிகள் நாயகத்திடம் எடுக்கும் உறுதி மொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதி மொழியாகும் என்று கூறுவதிலிரிருந்து இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம்.
இது போல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் பைஅத் எனும் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம் என்றெல்லாம் பல்வேறு கட்டங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 60:12)
இவை யாவும் நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதி மொழி தான்.
இத்தகைய உறுதி மொழிகளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தலைசிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித் தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை. அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அரிலீ (ரலி) ஆகியோரிடம் வந்து திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம் என்றெல்லாம் எந்த நபித் தோழரும் பைஅத் எடுக்கவில்லை.
இறைவனிடம் செய்கின்ற உறுதி மொழியை இறைத் தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திடம் பைஅத் செய்தார்கள்.
எனவே நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன் என்று நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எந்த மனிதரிடமும் உறுதி மொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகத்தை இழிவு படுத்துகின்ற, தங்களையும் இறைத் தூதர்களாகக் கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழி முறையாகும்.
நபிகள் நாயகம் தவிர மற்றவர்களிடம் உறுதி மொழி எடுப்பதென்று சொன்னால் அது இரண்டு விஷயங்களில் எடுக்கலாம்.
ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது, உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதி மொழி கொடுக்கின்ற பைஅத். இதற்கு அனுமதி உண்டு.
இந்த உறுதி மொழியை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கரிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமரிடம் செய்தார்கள்.
இப்படி முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது. இது மார்க்கக் காரியங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல. இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்பந்தப்பட்டவர் களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும்.
எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும், வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி – பைஅத் – எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத்தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.
வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானவை. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதரிடமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும்.
அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்.
THANKS TO:  www.kadayanalluraqsa.com

காதியானிகளின் கட்டிடம் சரிகின்றது.


இருளிருந்து ஒளியின் பக்கம் அழைப்பு

ஷேக் ரஹில் அஹ்மத்
மொளலவி ஜபருல்லாஹ் கான் மவ்லவி  (தமிழில்)


காதியானிஸத்தின் க­ஃபா மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் அவர்களுக்கும் ஏனைய சகோதரர்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள் ஆகியோருக்கும் அஸஙஸலாம்.
உங்களில் பலரைப் போன்றே நானும் அஹ்மதி தாய் தந்தையருக்கு புதல்வனாக  காதியானி குடும்பத்தில் பிறந்தவன்தான் ரப்வாஹ்வில் தான் சிறுவயது முதல் வளர்ந்தேன்.
சிறிது காலத்திற்கு முன் வரை குருட்டு நம்பிக்கை அஹ்மதி ஜமாத்தின் பிரச்சாரகர்களின் தவறான பிரச்சாரங்களினால் மிர்ஸா குலாம் அஹ்மது ஸாஹிபை மஹ்தி மவ்ஊத் என்று (வாக்களிக்கப்பட்ட மஹ்தி) மஸீஹ் மவ்ஊத் (வாக்களிக்கப்பட்ட மஸீஹ்) நபி என்று தவறாகத் தான் நம்பிக்கைக் கொண்டு இருந்ஆதன்.
ஆனால் ஒரு சம்பவம் என்னை திசைத் திருப்பியது. அதனால் மிர்ஸா குலாம் அஹ்மது ஸாஹிபின் நூல்கள் அவரது வரலாறு பற்றிய நூல்களை நடுநிலையாக எந்த சார்புமின்றி வாசிக்கத்துவங்கினேன் இந்த ஆழ்ந்த வாசிப்பினால் நான் மிர்ஸா ஸாஹிபின் அனைத்து பிரகடனங்களிலும் வெறும் முரண்பாடுகள் மட்டும் ம­வுற்று இருப்பதைக் கண்ணுற்றேன்.

மிர்ஸா ஸாஹீப் எழுதுகிறார்
பொய்யனின் கருத்துகளில் எங்கு பார்த்தாலும் முரண்பாடுகளே கண்டிப்பாகக் காணப்படும்   (பராஹீனே அஹ்மதியா பாகம் 5 ரூஹானின் கஸாயின் தொகுதி 21 பக்கம் 275) இந்த முரண்பாடான கருத்துகளி­ருந்தே மிர்ஸா ஸாஹிபின் கருத்துக்கள் அடிப்படையற்றவை மட்டுமல்லஅவை இறுதிதூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம்) அவர்களû இழிவு செய்வதாகவும் நபித்துவத்தின் தரத்தைக் குறைத்து தாழ்த்துவதாகவும் எதிர்த்துப் போர் தொடுப்பதாகவும் அமைந்துள்ளன.
எனது நாட்களின் பெரும் பகுதி ஈங்களிடையே கழிந்துள்ளது. இயல்பாகவே உங்கபளுடன் இதய பூர்வமாக நெருக்கம் உள்ளதை நான் உணர்கிறேன். ஆதலால் இந்த சில வழிகளை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ளஆவல் மிக கொண்டுள்ளேன். இவைகளை சுய சார்பின்றி ஆழ்ந்து வாசிக்குமாறு எனது சுய கருத்துகளை ஆண்வு செய்து தீர்க்கமான ஒரு முடிவை எடுக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஜனாப் மிர்ஸா ஸாஹிப் தனது நூல் பராஹினே அஹ்மதியாவில் இறைவன் அவரை நபி ரசூல் என்று பெயரிட்டான் என்று எழுதுகிறார். அல்லஹீத் நஆலாவின் பரிசுத்த வஹி என் மீது இறங்குகிறது. அதில் ரஸீல் முர்ஸல் நபி என்ற வார்த்தைகளால் அழைக்கப்படுகிறேன். இது வரை பராஹினே அஹ்மதிய என்ற நூல் பிரசுரமாஹி 22 இருபத்தி இரண்டு வருடங்கள் ஆகின்றன.
இதிலும் இந்த வார்ததைகள் பல முறை வருகின்றன. பார்க்கவும் (பராஹீனே அஹ்மதியா 498) இதி­ருந்து இந்த அடியேனை லசூல் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிகிறது எனக்கூறுகிறார்.   (ஏக்க­கா இஸாலா ருஹானி கஸாயின் தொகுதி  18 பக்கம் 27)
இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் இறுதி நபி (ஸல்) அவர்களின் மணிமொழிகள்  (ஹதீஸ்) ஒளியில் அவரது இடம். என்ன என்று பார்ப்போம். மற்றும் மிர்ஸா ஸாஹிபின் கட்டுரைகள் வாயிலாக அவரது தகுதி தரம் என்ன என்பதை ஆய்ந்து நோக்குவோம்.
தித்திக்கும் திருமறையில் கூறப்படுவதாவது.
முஹம்மது (ஸல்) உங்களில் எந்த ஆண் மகனின் தந்தையாகவும் இருந்தது இல்லை இப்போதும் இல்லை இனியும் இருக்கப் போவதும் இல்லை. ஆனால் அவர் அல்லாஹ்வின் ரசூல் மற்றும் காதமுன் நபிய்யீன் ஆவார். மேலும் அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்தவன் ஆவான் (அல் அஹ்ஸாப் 41 இந்த மொழி பெயர்ப்பு ஜமாத் அஹ்மதியா பிரசுரித்த தஃப்ஸீரே ஸகரியி­ருந்து எடுக்கப்பட்டது.
எவ்வாறு வல்ல அல்லாஹ் மிகத் தெளிவாகவும் உதாரணத்துடனும் எப்படி நபிகள் நாயகம் (ஸல்) எந்த ஆண் மகனின் தந்தையாக இல்லை.  எனக்கூறினானோ அதே போல் நபிமார்களில் இறுதியானவர் என்று தெளிவாக உதாரணங்களுடன் கூறிவிட்டான்.
இப்போது நபி úôழிகள் (ஹதீஸ்) இந்தக் கருத்தை எவ்வாறு பொருளஙபடுத்துகின்றன என்பதைப் பார்ப்போம்.
இது சம்பந்தமாக மூன்று சந்தர்பங்களில் நவிலப்பட்ட சில ஹதீஸ்கள் இங்கு தரப்படுகின்றன.

1)     நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அலங்காக அலங்கரித்து ஒரு மூலையில் ஒரு செங்கள் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதனின் நிலையாகும். மக்கள் அதை சுற்றிப்பார்த்து விட்டு ஆச்சரியமடைந்த இந்த செங்கல்  இங்கே வைக்கப்பட்டிருக்கக் கூடததா? என்று கேட்கலானார்கள் நான் தான் அந்த செங்கல் மேலும் நான் தான் இறைத்தூதர்களில் இறுதியானவர்.
இதை அபூஹீரைரா (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் விலக்கம் என்னவெனில் இறுதியாக பொருத்தப்பட்ட செங்கல்­ன் காரணமாக கட்டிம் பூரணமடைந்துவிட்டது.இதற்குப்பின் எந்த ஒரு செங்கல்லும் பொருத்தவும் முடியாது எடுக்கவும் முடியாது. (புஹாரி 3535 வெளியீடு ரஹ்மத் சென்னை )

2)    ஹஜ்ஜத்துல் விதாவில் இறுதி ஹஜ் அதி முக்கியமான காலத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது.
மக்களே உண்மை சத்தியம் என்னவெனில் எனக்கு பின்னர் எந்த நபியும் வர மாட்டார். உங்களுக்கு பின் எந்த உம்மத்தும் தோன்றாது.
அதாவது நீங்கள் உங்கள் ரப்பாகிய அல்லாஹ்வை வழிபடுங்கள் 5 வேளை தொழுகையை நிலை நாட்டுங்கள் ரமலானில் நோன்பை கடைபிடியுங்கள் உங்கள் பொருட்களுக்கு ஜகாத் கொடுத்து வாருங்கள். உங்களது தலமைப்பதவியில் உள்ளவர்களுக்கு கீழ் படியுங்கள். நீங்கள் உங்கள் எஜமானனின் சுவனத்தில் நுழைய முடியும்.  (கன்ஸீல் அஃமாஷ் அ­ ஹாமிஷ் முஸ்னத் அஹ்மத்)
சுவர்க்கத்தில் நுழைவதற்கு ரசூல் கரீம் (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் இல்லை என்று நம்பிக்கைக் கொள்வதற்கு முழு முதல் நிபந்தனையாக உள்ளது என்பது இந்தக் ஹதீஸ் மூலம் தெள்ளத் தெளிவாகிறது.
அதன் பின்னர்தான் இஸ்லாத்தில் வேறு கடமைகள் கூறப்படுகின்றன. இன்றைய கருத்து அந்தக் காலகட்டத்தில் முஸ்­ம்களின் மிகப் பெரிய மாநாட்டில் (ஹஜ்ஜத்துல் விதாவில்) வ­ளுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
3)    இப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் வஃபாத்தாகும் முன் நோய் வாய்பட்டு இருந்த போது என்ன கூறினார்கள் என்பதைப் பார்ப்போம்.
அப்துல்லாஹ் இப்னு உன்ர் (ர­) அவர்கள் ரிவாயத் செய்கின்றார்கள் . பெருமானார் (ஸல்) அவர்கள் நம்மிடம் வந்தார்கள் அவரது தோரணை நமக்கு இறுதி உரை நிகழ்த்தப்பட்டது என்பதைப் போன்று இருந்தது.
அண்ணலார் மூன்று முறை நவின்றார்கள் நாம் உம்மி நபியாக இருக்கிறேன். எது நாள் வரை நான் உங்களுடன் இருக்கின்றேனே எனது பேச்சைக் கேளுங்கள் பின் பற்றுங்கள் எனக்கு உலக வாழக்கையில் விடுதலைத் தரப்பட்ட பின்னர் நீங்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஹலாலாக்கப்பட்டவைகளை ஹலாலாக கருதுங்கள் ஹராமாக்கப்பட்டவைகளை ஹராம் என்று கருதுங்கள்   (அஹ்மதின் ரிவாய்த்)
அதாவது பிரிவன் காலம் வந்த போது பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பின் வேறு எந்த நபி இல்லை என்று வ­யுறுத்துகிறார்கள்.
மேலே கூறப்பட்ட இந்த ஆதாரங்களி­ருந்து ஒரு விஷயம் திண்ணமாக தெளிவாகி விட்டது. அது என்னவென்றால் (ரசுலே கரீம் (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி என்றும் அண்ணலாருக்குப் பின் வேறு எந்த விதத்திலும் நபி தோன்ற மாட்டார் என்பதுதான்.
ஆனால் இந்தக் கூற்றுக்கு ஆதாரப்பூர்வமான ஆயத் மற்றும் ஹதீஸ்களுக்கு வேறு ஏதேனும் வியாக்கியானம் விளக்கம் தர முடியுமா?
நான் கத்முன் நுபுவ்வத் (இறுதி நபித்துவம் பற்றி) மிர்ஸா ஸாஹிப் கூறியவைகளின் உங்கள் பார்வைக்கு சமர்பிக்கும் முன் அவர் தன்னைப் பற்றியும் தான் எவ்வாறு முஜத்திக் என்பதைப் பற்றியும் அவர் தனது நூல் பராஹீனே அஹ்மதியாவில் எழுதி இருப்பதை கூற விழைகிறேன்.
ஏனெனில் இந்தக் கருத்துக்கள் எனது உள்ளக் கிடக்கையை நீங்கள் புரிந்து கொள்வதில் உதவிகரமாக இருக்கும் என நினைக்கிறேன்.
பராஹீனே அஹ்மதியா மிர்ஸா ஸாஹிப் முதன் முத­ல் எழுதிய நூல் தான் இது. இந்த நூ­ன் முதல் நான்கு தொகுதிகள் கி பி 1884ல் பிரகாரமானது ஜந்தாம் பாகம் 23 வருடங்கள் கழித்து பிரசுரிக்கப்பட்டது.
இந்த நூ­ல் அவரது பிரகடனங்கள் இதோ (பிரகடனங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை சிலவற்றைக் காண்போம்.)

1)    இந்த சாமானியன் ஒரு நூலை எழுதியுள்ளான் இதைப் படித்தப்பின்னர் ஒரு சத்தியத் தேடலை மேற்கொண்டு இருப்பவர் இஸ்லாத்தை ஏற்பதைத் தவிர வேறு வழி எதுவும் அவருக்குப் புலப்படாது (இஷ்திஹார்) ஏப்ரல் 1879 தப்லீகோ ரிஸாலத் பாகம் 1 பக்கம் 8)
2)    மேலும் நூலாசிரியனுக்கு அவன் இந்தக் கால கட்டத்தில் மறுமலர்ச்சியாளன் (முஜத்திதே வக்த்) என்ற ஞானம் தரப்பட்டது . மேலும் ஆத் மரீதியாக அவளது அறிவுத்திறன் மஸீஹ் இப்னு மர்யம் (ஈஸா நபியன் அறிவுத்திறனை ஒத்ததாக இருக்கிறது. இந்த அறிவிப்பனை செவியுற்ற பின்னரும் எவன் ஒருவன் உண்மையான பக்தியை நாடுபவனாக மாறி தனது பிரச்சினைகளி­ருந்து விடுபட்டு முழுமனதுடன் வந்து இணையவில்லை என்றால் இதுவே அவனுக்கு இறுதியான வலுவான ஆதாரம் என புரிந்து கொள்ள வேண்டும்  இஷ்ததிகார் எண் 16 மஜ்மூயே இஷ்திகார் பாகம் 1 : பக்கம் 3
3)    இந்த குழப்பமான சூழ­ல் ஆழ்ந்த ஆய்வுகளில் அடிப்படையில் உண்மையான கருப்போருளின் மூல முத­ன் ஆழத்தை விடுவிக்கும் அடிப்டையில் அமைந்த ஒரு தத்துவார்த்தமான விவாத நூல் தான் ஆன்ம பலத்தை தரும் (இஷ்திகார் அறிவிப்பு 11 மஜ்மூயே இஷ்திகார் பாகம் 1: பக்கம் 23 25 வரை
4)    ஆக இந்த நூ­னை ஆக்கியோரின் யாரெனில் நிர்வகித்து வழி நடத்துபவன் வெளிப்பார்வைக்கும் உள்ளார்ந்த முறையிலும் இருலோக ரட்சகனாகிய ரப்புல்  ஆலமீன் தான் ஆவான் (இஷ்திஹார் என் 18 மஜ்மூயே இஷ்திஹாராபாத் பாகம் 1 பக்கம் 56 முஜஷத்திக் வரைவிலக்கணத்தை மிர்ஸா ஸாஹிப் இவ்வாறு தருகிறார்.
5)    அல்லாஹ்வினால் முஜத்திக் மறுமலர்ச்சி தன்மை கொண்ட சக்தியை பெறுகின்றவர்கள் செறும் எலும்புத் துண்டுகளை விற்கின்றனர். அல்லர் மாறாக அவர்கள் உண்மையிலே ரசூலுல்லாஹ் அவர்களின் இணை துணையாகவும் ஆத்ம ரீதியாக நபிகளார்ன் கலீஎபாவும் (பிரதிந்தியும்) ஆவார்கள் . அல்லாஹ்தஆலா அவர்களுக்கு நபிமார்களும் ரசூல்மார்களுக்கும் அறிவிக்கப்படும் அனைத்து அருட்கொடைகளுக்கும் வாரிசாக்க நியமிக்கப்படுகின்றனர்  (ஃபத்ஹே  இஸ்லாம்  அடிக்குறிப்பு ரூஹானி கஸாயின் பாகம 3)
மேலும் இறையருள் அவர்களது இதயத்தை ஒளிப் பெறக் செய்கிறது . எந்த ஒரு கஷ்டமான காலத்திலும் ரூஹீல் குத்ஸ் எனப்படும் வானவர்களால் பாதுகாக்கப்பட்டு அறிவூட்டப்படுகிறார்கள் அவர்களில் நடை, உடை பாவணைகளில் உலக வாழ்வின் வர்ண ஜாலங்கள் காணப்படுவதில்லை ஏனெனில் அவர்கள் பூரணமாக என்னை வார்க்கப்பட்டவர்களும் ஆவார்கள் தன்னைப் பற்றி தம் அனைத்துப் பாவங்கள் தவறுகளின்றி இறையருளால் பாதுகாக்கப்பட்டவர் என்று அறிவிக்கும் மிர்ஸா குலாம் அஹ்மத் ஸாஹிப் இவ்வாறு கூறுகிறார்.
6)    அல்லாஹ்தஆலா  என்னை  எந்த தவறிலும் நிலைத்து நிற்பவனாக வைப்பதில்லை மேலும் என்னை ஒவ்வொரூ தவறுகள் பாவங்களில் இருந்து முற்றிலும் பாதுகாக்கப்பட்டவனாகவோ வைக்கிறான் (நூருல் ஹத் பாகம் 2 ரூஹானி கஸாயின் பாகம் 8 பக்கம் 272)
7)    நான் செய்யும் பணிகள் அல்லாஹ்வின் கட்டளைப்படி தான் செய்கிறேன் எனது சுயவிருப்பத்தினால் எதுவும் செய்வதுமில்லை செயல்படுவதுமில்லை


அக்பரின் தீனே இலாஹி ஒரு விமர்சனப் பார்வை.


ஹபீழ் ஸலபி 

அறிமுகம்:
இந்திய உபகண்டத்தை (1526-1858) காலப்பிரிவில் சுமார் 300 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த ஒரு பேரரசையே வரலாற்றாசிரியர்கள் முகலாய சாம்ராஜ்யம் என அழைக்கின்றனர். இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் ஆட்சியின் பொற்காலம், முகலாயர் ஆட்சிக் காலப் பகுதியாகும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக இப்பேரரசு 1526 முதல் 1707 வரை சுமார் 150 வருட காலம் அக்பர், ஜஹாங்கீர், ஸாஜஹான், அவ்ரங்கஸீப் ஆகிய மன்னர்களின் கீழ் செழித்தோங்கிக் காணப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சுட்டி நிற்கின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய உபகண்டத்தின் பெரும் பகுதியையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த முகலாயர்கள் அரசியல், பொருளாதார, சமய, சமூக மாற்றங்களுக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
மத்திய ஆசியாவைச் சேர்ந்த துர்க்கிய இனத்தவரான பாபர் என்பவரே 1526இல் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். மங்கோலியத் தளபதி ஜெங்கிஸ்கானின் வழித்தோன்றலான இவர், ஸமர்கந்தை ஆட்சி செய்த ஸுல்தான் மஹ்மூத் மிர்ஸா என்பவரின் நெருங்கிய உறவினராவார். ஆட்சிப் பீடமேற விரும்பிய பாபர், ஸமர்கந்தைக் கைப்பற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு, தோல்வி அடைந்தார். பி;ன்னர், ஆப்கானிஸ்தானில் பல வெற்றிகள் அவருக்குக் கிடைத்தன. 1504இல்-தனது 21வது வயதில் அவர் காபூல் நகரைப் பிடித்துக் கொண்டார்.
ஆப்கானிய லோதி சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியான டில்லியை ஆட்சி செய்து வந்த, இப்றாஹீம் லோதி என்பவரை 1526ல் தோற்கடித்த பாபர், தலைநகரான ஆக்ராவைக் கைப்பற்றிக் கொண்டார். இதுவே முகலாய சாம்ராஜ்யத்தின் ஆரம்பமாக அமைந்தது. 1527இல் தனது படைப் பலத்தைக் கொண்டு, இந்து ராஜபுத்திரர்களின் கூட்டாட்சியை வெற்றி கொண்ட அவர், தனது பேரரசை நிலை நிறுத்திக் கொள்வதற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வங்காளம், பீஹார் ஆகியனவும் அவரின் செல்வாக்கின் கீழ் கொண்டுவரப்பட்டன. முகலாயர்களின் ஆட்சிக்காலப் பிரிவு இந்திய உப கண்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் செல்வாக்குடன் இந்தியாவில் ஆட்சி செய்தனர்.
முகலாய மன்னர்கள் வரலாற்றில் குறிப்பிட்டுச் சிலாகிக்கப்படும் அளவு முக்கியத்தும் பெற்றுத் திகழ்கின்றனர். முஸ்லிம் உலக வரலாற்றில் பதினாறாம் நூற்றாண்டு முக்கிய காலப்பகுதியாகும். மேற்காசியாவிலும் ஆபிரிக்காவிலும் போல்கன்-ஐரோப்பிய நாடுகளிலும் உதுமானியர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பெற்றிருந்தனர். மத்திய ஆசியாவில் ஸபவிக்களின் செல்வாக்குக் காணப்பட்டது. தென்னாசியாவில் முகலாயர்களின் பரம்பரையில் முக்கியத்துவம் வாய்ந்த பல ஆட்சியாளர்கள் ஆட்சி புரிந்தனர்.
முகலாயர்களின் ஆட்சியின் கீழ் அனைத்து மதப் பிரினரும் சுதந்திரத்துடன் வாழ வழிவகுக்கப்பட்டது. மூன்று நூற்றாண்டு கால நீண்டதொரு ஆட்சி முறையை முகலாயர்கள் தொடர்வதற்கு, சமய சகிப்புத் தன்மையே காரணமாகக் கொள்ளப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஜனநாயக நாட்டில் கூட-பல கட்சிமுறை ஆதிக்கம் செலுத்தும் நவீன அரசியல் பாரம்பரியத்தில் கூட நீண்டகால ஆட்சி முறைமை சாத்தியமாகாத போது, எப்படி ஒரு சிறுபான்மை இனம், பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட ஒரு நாட்டை ஆட்சி செய்தது என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகும்.
இஸ்லாம், பலவந்தமாக மார்க்கத்தைப் பரப்புவதை அனுமதிக்கவில்லை. எனவே, முகலாயர்கள் சமயப் பொறுமையைக் கையாண்டார்கள். அவர்களது வணக்க வழிபாடுகளுக்குப் பூரண சுதந்திரத்தை வழங்கினர்கள். முகலாயப் படைகளில் இணைந்த இந்திய இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும்,    விதிவிலக்கு அளித்தனர். அரசாங்கத்தின் பாதுகாப்புடன் வாழந்த முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமே   வரி செலுத்த வேண்டியிருந்தது. அதிலும், வலது குறைந்தோர், வயோதிபர் ஆகியோருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
முகலாய ஆட்சியில் இஸ்லாமிய கலாசாரப் பண்பாடுகள் ஒரளவு குறிப்பிடடத்தக்க வகையில் பின்பற்றப்பட்டது. எனலாம். முஸ்லிம் அல்லாதவர்களும் கலாசார நடைமுறைகளிலும் பண்பாடுகளிலும் இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்தனர். இஸ்லாமியத்திற்குள் தங்களை ஐக்கிப்படுத்துவதை ஒரு கௌரவமாகவும் கருதினர். இன்றுவரை அதன் தடையங்கள் இந்துக்களிடம் காணப்படுகிறது. இந்துப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் போன்று முக்காடு அணிகின்றனர். தமது சாரியால் தலையை மூடிக்கொள்கின்றனர். இஸ்லாமும் இந்துத்துவமும் இணைந்த ஒரு கலப்புக் கலாசாரமே உருவாயி;ற்று எனக் கருதப்படுகிறது.
இனமாச்சாரியமும், ஜாதி வேறுபாடும், குல வேற்றுமையும் நிறைந்த இந்திய உபகண்டத்தில், இஸ்லாமிய சமத்துவத்தை  நிலைநாட்டுவதில் அதிக பங்களிப்பினைச் சட்ட ரீதியாக ஏற்படுத்தியவர்கள், முகலாய மன்னர்களே எனலாம். இதனால், பல இன மக்களும் இஸ்லாத்தில் காணப்பட்ட நல்ல அம்சங்களால் கவரப்பட்டு, இஸ்லாத்தைத் தழுவினர்.
இந்தியாவில் இஸ்லாம் நிர்பந்த-தந்திர உபாயங்கள் மூலமாகப் பரவவில்லை. இஸ்லாத்தை விளங்கி ஏற்றுக் கொண்ட பின்னர், மதம் மாறியவர்களை அறிவது மிக அரிதாகும். இஸ்லாத்தின் சமத்துவம் அதி உன்னதமானது என்பதை பல இன மக்களும் நன்கு அறிந்திருந்தனர். முகலாய மன்னர்கள், குறிப்பாக அக்பர் சமத்துவம் என்பதற்காக இஸ்லாத்தையே அதன் உயிர் நாடியான ஏகத்துவக் கொள்கையையே, விட்டுக் கொடுத்தார் என்ற கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டார்.
அக்பர் (1556 – 1605)
ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் 1556இல் அரசரானார். நிர்வாகத் திறமை, தற்துணிவு, அரசியல் ஆளுமை, தந்திரோபாயங்கள், அரசனுக்குரிய குணாம்சங்கள் என்பன இவரிடம் மிகுதியாகக் காணப்பட்டன. இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு சமயங்களையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்ய முனைந்தார். ஹிந்துக்களைம் முஸ்லிம்களையும் இணைக்கும் நோக்குடன், பல புதிய திட்டங்களை தமது சுய விருப்புக்கேற்ப அவற்றை நடைமுறைப்படுத்த முனைந்தார். அவ்வாறான திட்டங்களில் ஒன்றாக விளங்கியதே. ‘தீனே இலாஹி’ எனும் அக்பரின் முக்கிய, புதிய சமய நோக்காகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டைத் தகர்த்தெறியும், முற்றிலும் அதற்கு விரோதமான, முரணாக அமைந்த அவரது சமய நடைமுறைகளால் ஹிந்துக்கள் முகலாய ஆட்சியுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தனர். அவர், இந்துக்களைத் திருப்தப்படுத்துவதற் காக இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து ஆடசியை ஸ்திரப்படுத்தினார். எனவே, முஸ்லிம்கள் அக்பரின் புதிய சமயக் கோட்பாட்டை ஏற்கவில்லை. மறுத்து விமர்சித்தனர்.
அக்பர் மன்னரின் ‘தீனே இலாஹி’ எனும் புதிய சமயக் கோட்பாடுகளுக்கு எதிராக செய்க் அஹ்மத்  அவர்களின் பிரசாரம் சிர்ஹிந்திப் பகுதியில் பெரும் வரவேற்பையும் செல்வாக்கையும் பெற்றது. அக்பரின் புதிய கொள்கைக்கும் முஸ்லிம்களிடத்தில் காணப்பட்ட தவறான சமய விளக்கங்களுக்கும் எதிராகப் பிரசாரப் பணியில் அவர் ஈடுபட்டார். அவரது அபார துணிவு, மன்னனையே எதிர்த்துக் கருத்துச் சொல்லும் தற்துணிவு, அபார ஆற்றல்,  சமய அறிவு என்பன ஏனைய முஸ்லிம்களையும், மற்ற சமூகத்தினரையும் சிந்திக்கத் தூண்டிற்று.
அக்பரின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பல உள்நாட்டுக் கலவரங்களும் கிளர்ச்சிகளும் இடம்பெற்றன. எனினும், விரைவில் இந்தியா மலைத் தொடருக்கு வடக்கே உள்ள முழு இந்திய உப கண்டப் பிரதேசத்தையும் அவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
மகா அக்பர் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அவரையே முகலாயப் பேரரசின் உண்மையான ஆரம்பகர்த்தா எனச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். எனினும், இஸ்லாமிய அறிஞர்களாலும், மக்களாலும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். இஸ்லாத்தைப் பின்பற்றவோ, வளர்க்கவோ இவர் முனையவில்லை. மாறாக இஸ்லாமியப் போதனைகளை இந்துக்களின் திருப்திக்காக விட்டுக் கொடுத்தார்.
மாமிச உணவுகளை இந்துக்கள் புசிப்பதில்லை என்பதற்காக தானும் ஒதுக்கி வாழ்ந்தார்.
முஸ்லிம்கள் இணை கற்பிப்போரை மணக்கக் கூடாது. எனினும், அக்பர் 1562ல் பீகாரிமாலின் இந்து மகளை கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.
தனது வீட்டில் இந்து மத வழக்கங்களையம், சடங்கு சம்பிரதாயங்களையும் பின்பற்றியதோடு, நாட்டு மக்களையும், பின்பற்றச் செய்தார்.
அவர் இறுதித் தீர்ப்பு நாள், இறுதித் தீர்ப்பு நாளில் இறந்த உயிர்கள் மீண்டும் எழுதல் போன்றவைகளை மறுத்தார்.
மறுமையை நம்பாத காரணத்தினால் ‘தீனே இலாஹி’ என்ற மதத்தை உருவாக்கி, இஸ்லாத்தை அவமதித்தார். ‘தீன் இலாஹி’யில் புதிதாக இணைந்தவர்கள், பிரதி ஞாயிறு தோறும் வணக்கம்; புரிவார்கள். இவர்கள் தம் வணக்கச் சடங்கின் போது, கைகளில் தலைப்பாகை ஏந்தியவர்களாக அரசனின் காலில் விழ வேண்டும். அரசன் அவர்களிடம் தன்னுடைய உருவப்படத்தைக் கொடுப்பார். அக்பர் தன் காலில் விழுந்து வணங்குவதையும், தன் புதிய மதச் சடங்காகவே ஆக்கினார்.
பல விதிகளையும் சடங்குகளையும் இவருடைய ‘தீன் இலாஹி’யில் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அவை:
அரசன் காலில் விழுந்து வணங்க வேண்டும்.
பிறந்த நாளில் விருந்தளிக்க வேண்டும.;
பிறந்த மாதத்தில் இறைச்சி உண்ணக்கூடாது.
இறந்தவரின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யலாம்.
எரிக்கும்போதோ, புதைக்கும் போதோ தலை கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.
இறைச்சிக் கடைக்காரர், மீனவர், பறவைகளைப் பிடிப்போர் ஆகியோரின் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு, பல கோட்பாடுகளை உள்ளடக்கியதாக ‘தீனே இலாஹி’ காணப்பட்டது.
அரசியல், சமூகப் பங்களிப்பு:
அக்பர் மன்னராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதும், உள்நாட்டுக் கலவரங்களையும் கிளர்ச்சிகளையும் அடக்கி, அமைதியை நிலை நாடினார். அவர் கால ஆட்சியில் பல அரசியல், சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் மேற்கொண்ட பணிகளை பி;ன்வருமாறு நோக்கலாம்.
பாதைகள் பலவற்றை அமைத்து, வர்த்தகத்தை விருத்தி செய்தார்.
வரி அறவிடும் முறைகளை முற்றாகச் சீர்திருத்தினார்.
முஸ்லிமல்லாதவரை சகிப்புத்தன்iமையோடு அனுசரித்து நடந்த அவர், தன் அரச சபையில் விஞ்ஞானம், இலக்கியம், நுண்கலைகள் முதலியவற்றிற்கு முக்கிய இடம் வழங்கி, அவற்றின் வளர்ச்சிக்கு வழிகோலினார்.
அடிமைத்தனத்தை இல்லாதொழித்தார்.
விதவைகள் உடன் கட்டையேறும் கொடூர வழக்கத்தை தடை செய்தார்.
விதவைகள் மறுமணம் செய்ய வழிவகுத்தமை முதலியன அக்பர் செய்த மிக முக்கியமான பணிகளாகும்.
அத்தோடு பனாராஸிலும், பிருந்தாவனத்திலும், இரண்டு அழகிய கோயில்களை அக்பர் அமைத்தார். கோயில் கட்டிக் கொடுத்ததுடன் இவர் இஸ்லாம் தடை செய்த சிலை வணக்கத்தை ஆதரித்தார். அக்பர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆக்ரா கோட்டையின் ஜஹாங்கீர் மஹாலில் இந்துக்களின் சிற்பக்கலையும் இடம்பெற்றிருந்தது. இவரின் ஆட்சிக் காலத்தில்தான் இந்துஸ்தானி இசை முக்கியத்துவம் பெற்றது. இன்னும், இவர் காலவதை போன்று, ஏனையோர் காலத்தில் இசைக் கலை முக்கியத்துவப்படுத்தப்பட வில்லை.
கல்வி பெறாத பாமரனாக இருந்த போதிலும், அக்பர் தனது தீட்சண்யமான புத்தி, கூர்மையான சிந்தனை என்பவற்றின் மூலம், அபார திறமையுடன் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சி சுமார் 49 வருடங்கள் நீடித்தது. அவர் 1605இல் தனது 63வது வயதில் காலமானதும், அவரது மூத்த மகனான ஸலீம் என்பவர் ஜஹாங்கீர் என்ற பெயரில் அரசரானார்.
49 வருடங்கள் ஆட்சி செய்த அக்பர், பல்வேறு அரசியல் சமூகப் பங்களிப்புக்களை மேற்கொண்டாலும், அவரது செயற்போக்கு, கொள்கை என்பன கடுமையான கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகின. செய்க் அஹ்மத் ஸிர்ஹிந்தி போன்றவர்கள் மன்னன் அக்பரின் கொள்கை கோட்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்துப் பிரசாரம் செய்தனர். செய்க் ஸிர்ஹிந்தி பற்றி மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) குறிப்பிடும்போது, அக்பரின் மறுபக்கத்தையும், அதனை ஸிர்ஹிந்தி எதிர் கொண்ட பாங்கினையும் விரிவாக விளக்குகின்றார்கள்.
விமர்சனம்:
முகலாய மன்னர்கள் இறைமையையும், வரையறையற்ற உரிமைகளையும் தமதாக்கிக் கொண்டனர். அரசவைப் பிரதானிகளின் சொகுசான, படாடோப வாழ்க்கை, சட்ட விரோதமான முறையில் செல்வம் சேர்த்தல், அநீதியாகச் செலவு செய்தல், கொடுங்கோலாட்சி, அடக்குமுறை, இறைவனை மறந்து, நேர்வழியிலிருந்து விலகி நடத்தல் போன்ற அத்தனை தீமைகளும் அவர்களிடையே பரவியிருந்தன. சமய நோக்கில் சட்ட வரம்புக்குக் கட்டுப்படாத இவ்வவலநிலை அக்பரி;ன் காலத்தில் அதன் உச்ச கட்டத்தை அடைய, சீர் குலைவுகள் அவற்றின் எல்லைகளையே அண்மித்தன.
அக்பரின் அரசவையில் பொதுவாக இஸ்லாத்தைப் பற்றி நிலவிய கருத்து: ‘இஸ்லாமிய கலாசாரம் அறியாமையில் ஆழ்ந்திருந்த அரேபிய நாடோடிக் கூட்டத்தில் பிறந்ததாகும். ஆகையால், அது ஒரு நாகரீகமான, பண்பட்ட சமுதாயத்திற்குப் பொருத்தமற்றது என்பதிலும், நரகமும்-சுவர்க்கமும் கேலியும், நையாண்டியும் செய்யப்பட்டன. குர்ஆன் இறைவனின் வாக்கு என்பதும், அது இறைவனால் அருளப்பட்டது என்பது சந்தேகத்திற்குள்ளாகியது. மரணத்தின் பின் தண்டனையோ, வெகுமதியோ அளிக்கப்படும் என்பது நிச்சயமற்றதாகக் கொள்ளப்பட்டது. இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மிஃராஜ் நடைபெறாத ஒன்றாகக் கருதப்பட்டது.
நபிகள் (ஸல்) அவர்கள் பலதார மணத்திற்காகவும், அவர்கள் தொடுத்த புனிதப் போர்களுக்காககவும் பகிரங்கமாகக் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அஹ்மத், முஹம்மத் போன்ற பெயர்கள் கூட வழக்கொழிக்கப்பட்டு, இவ்வாறான பெயர்கள் மாற்றப்பட்டன. உலகாசை பிடித்த ஆலிம்கள் தமது உரைகளிலும் எழுத்துக்களிலும் முஹம்மத் (ஸல்) அவர்களின் திருநாமத்தை உபயோகிக்கும் இடங்களில் அன்னாரைப் புகழ்ந்து, ஸலவாத்துச் சொல்லும் சொற்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தைக் கைவிட்டு விட்டனர். சிலர் இறைதூதர் (ஸல்) அவர்களில் தஜ்ஜாலின் அடையாளங்கள் காணப்படுவதாகக் கூறும் அளவுக்கு துரோகிகளாக மாறிவிட்டிருந்தனர்.’
அக்பரின் நம்பிக்கைக்குரிய அரசவைப் பிரதானியான அபுல் பஸல் தொழுகை, நோன்பு, ஹஜ் முதலிய கடமைகளை அவமதித்து, அவற்றை இழித்துரைத்தார். அக்பரின் மாளிகை வளாகத்திற்குள் யாரும் தொழுகை நடத்தத் துணியவில்லை. ஆஸ்தான கவிஞர்கள், இஸ்லாத்தின் கடமைகளை கிண்டல் செய்து, புனைந்த கவிதைகள் பொது மக்களையும் அடைந்தன.

அக்பரின் காலத்திலேயே ‘பஹாய்’ கொள்கை முதன் முதலில் தோன்றியது. ‘இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் காலமுதல் இஸ்லாத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகால எல்லை முடிவடைந்து விட்டது. ஆகையால், இஸ்லாம் காலங்கடந்ததாகிவிட்டது. எனவே, அதற்குப் பதில் புதியதொரு சமயக் கொள்கை அவசியமாகும்’ என்பது பஹாய்கள் கருத்தாகும். இக்கருத்து,அக்காலத்தில் மிகச் சக்தி வாய்ந்த பிரசார சாதனங்கள் எல்லாவற்றின் மூலமும் பரப்பப்பட்டது.
இந்து, முஸ்லிம்கள் கொள்கைகளை ஒன்றாகக் கலந்து, முகலாயச் சாம்ராஜ்யத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காக, ஒரு புதிய கொள்கையுடைய, புதியதொரு சமயக் கொள்கை உருவாக்கப்பட்டது. முகஸ்துதிபாடும் இந்து அரச சபைப் பிரதானிகள், சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக இந்து வேதாக மங்களிலிருந்து சில தீர்க்க தரிசனக் கூற்றுக்களை எடுத்துக்காட்ட முற்பட்டனர். ‘மகாத்மாவைக் கொண்ட ஒர் அரசன் பிறப்பான். அவன் பசுவைக் காப்பான்’ என்று கவிதை பாடினர்.
சில முஸ்லிம் அறிஞர்கள் ‘அக்பரே வாக்களிக்கப்பட்ட மஹ்தி (அலை)’ என்றும், அக்பர்தான் ‘இமாமுல் முஜ்தஹித்’ என்றும் நிரூபிக்க முனைந்தனர். அரசவைப் பிரதானிகளில் ஒருவரான ‘சூஃபி’ ஒருவர், அக்பரை ‘பரிபூரண மனிதன்’ என்றும் ‘தற்கால கலீபா’ என்றும், ‘பூமியில் இறைவனின் அவதாரம்’ என்றும் பிரகடனப்படுத்தினார்.
நீதியும், உண்மையும் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானவை. ஆகையால், எந்தச் சமய நெறியும் இவ்வறப் பண்புகளுக்கு ஏகபோக உரிமை கோர முடியாது என்று, பொதுமக்கள் நம்பும்படி செய்யப்பட்டன.
எனவே, பல்வேறு சமய நெறிகளிலும் காணப்படும் நல்ல அம்சங்களை ஒன்று சேர்த்து, விரிவான ஒரு மதக் கொள்கையை உருவாக்கினால், பல்வேறு கருத்துக் களையும், மத நம்பிக்கைகளையும் கொண்ட மக்கள், அதனை விரும்பி ஏற்றுக் கொள்வர் என்றும் இதன் மூலம் பிரிவினை மனப்பான்மையையும் வகுப்புவாத வேறுபாடு களையும் மறந்து விடுவர் என்றும் கருதப்பட்டது. இப்புது மதத்துக்கு ‘தீனே இலாஹி’ என்று பெயர் சூட்டப்பட்டது.
அதன் அடிப்படைக் கொள்கை ‘லாஇலாஹ இல்லல்லாஹ் அக்பர் கலீபத்துல்லாஹ்’ என்பதாகும். (வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை அக்பர் அவனது பிரதிநிதி)
இப்புது மார்க்கத்தைத் தழுவியவர்கள் தம் பாரம்பரிய மார்க்கமும் மூதாதையரிடமிருந்து கேட்டும், பார்த்தும் அறிந்து கொண்ட மார்க்கமுமாகிய இஸ்லாத்தைப் பகிரங்கமாகத் துறந்து விட்டு, அக்பரின் ‘தீனே இலாஹியில் பக்தி சிரத்தையோடு நுழைய வேண்டும். இம்மதத்தைத் தழுவியவர்கள் ‘சேலர்’ என அழைக்கப்பட்டனர்.
இம்மதத்தில் முகமன் கூறும் முறையும் மாற்றப்பட்டது . ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதற்குப் பதில் ஒருவர் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூற, மற்றவர் பதிலுக்கு ‘ஜல்ல ஜலாலுஹு’ என்பார். இச்சொற்கள் மன்னனின் ஜலாலுத்தீன் அக்பர் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டவையாகும்.
சேலர்கள் தமது தலைப்பாகைகளில் சக்ரவர்த்தியின் உருவத்தை ஒத்த உருவங்களை அணியுமாறு பணிக்கப்பட்டனர். அரசனை வழிபடல் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். அரசனை அதிகாலையில் தரிசிப்பதன் மூலம் மக்கள் இதனை நிறைவேற்றினர். அரசனின் சன்னிதானத்தி;ல் ஆஜராவதற்கு யாருக்காவது அனுமதி கிடைத்து விட்டால், முதலாவதாக அவர் அரசருக்குச் சாஷ்டாங்கம் செய்வார். அவரே தம் பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்று பவர் போல ஆலிம்களும், சூஃபிகளும் கூட அரசனுக்குச் சாஷ்டாங்கம் செய்தனர்.
இஸ்லாத்திற்கு முரணான இச்செயலை அவர்கள் ‘ஸஜ்தா தஹிய்யா’ (கண்ணியப்படுத்துவதற்காகச் செய்யும் ஸஜ்தா) ‘ஸமீன் போஸீ’ (பூமியை முத்தமிடல்) எனும் சொற்களைக் கொண்டு மறைக்க முயற்சி செய்தனர். இவை: ‘ஒரு காலம் வரும் அக்காலத்தில் மக்கள் சட்ட விரோதமானவற்றை சட்ட பூர்வமானவையாக ஆக்குவதற்காக, அவற்றின் பெயர்களை மாற்றி விடுவார்கள்’ என்ற நபியவர்களின் வாக்கை உறுதிப்படுத்தி நிற்கின்றன.
அக்பர் ‘எவ்வித பாராபட்சமும் பக்கச் சார்பும் இன்றி எல்லாச் சமய நெறிகளதும் நல்லம்சங்கள் யாவற்றையும் கொண்டே இப்புதிய மதம் உருவாக்கப்படும்’ என்று கூறியே ‘தீனே இலாஹியைத்’ தோற்றுவித்தார். துர்பாக்கியம் என்னவென்றால், இஸ்லாத்தை முற்றாக ஒதுக்கிவிட்டு மற்றெல்லா மதக் கொள்கைகளும் உள்ளடக்கப்பட்டன.
தீ வழிபாடு ஸொரஸ்திரியர்களிடமிருந்து இரவல் பெறப்பட்டு, எப்பொழுதும் அரச மாளிகையில் தீ எரிந்து கொண்டிருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாலைப் பொழுது கிரியைகளுக்காக விளக்கு, மெழுகுதிரி எனபன ஏற்றப்படும் போது, அரண்மனையினர் எழுந்து நின்று, மரியாதை செய்யும் முறைமை உருவாக்கப்பட்டது. மணி அடித்தல், திரி மூர்த்திகளை வழிபடல் போன்ற சில கிரியைகள் கிறிஸ்தவ மதத்திலிருந்து இரவல் பெறப்பட்டன. எனினும், இந்து மதமே கூடிய ஆதரவைப் பெற்றது. ஏனெனில், அதுவே நாட்டின் பெரும்பான்மையினரின் மதமாகும். அவர்களின் உள்ளங் களை வென்று, சக்கராதிபத்தியத்தை உறுதிப்படுத்த வேண்டிய நிலை அக்பருக்கு ஏற்பட்டது. அதனால், இஸ்லாத்தைப் புறக்கணித்து, இந்து மதத்திற்கு கூடிய ஆதரவை வழங்கினார்.
பசுக்கள் அறுப்பதற்கு அக்பர் தடை விதித்தார். தீபாவளி, துஷேரா, ராகிபூணம், சிவராத்ரி போன்ற பண்டிகைகள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. அரச மாளிகையில் ‘ஹவான்’ கிரமமாக நடைபெற்றது. தினமும் நான்கு வேளை சூரிய நமஸ்காரம் இடம் பெற்றது. சூரியனின் ஆயிரம் பெயர்களும் பக்தி சிரத்தையோடு ஜெபிக்கப்பட்டன.யாராவது சூரியனின் ஒரு பெயரைச் சொன்னால், அதைக் கேட்டவர்கள் ‘அதன் புகழ் ஓங்குவதாக’ என்பர். நெற்றியில் திருநீறு தடவி தோளில் பூணூள் அணியப்பட்டதோடு, காமதேனு-பசுவுக்கு மிக்க உயர்ந்த கண்ணியம் அளிக்கப்பட்டது.
மறுபிறப்புக் கொள்கை முற்றாக ஏற்றுக் கொள்ளப்பட்ட துடன், பிராமணியத்திலிருந்து வேறு பல நம்பிக்கைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறாகத்தான் பிற மதங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அதேவேளை மன்னனும் அரசவைப் பிரதானிகளும் இஸ்லாத்தைக் கேவலமாகவும் இழிவாகவுமே நடத்தினர். இஸ்லாத்தின் உண்மையான போதனைகள் அவமதிக்கப்பட, அரச சபைச் சூழலுக்கு ஏற்ப, இஸ்லாத்தை அவமதிக்கும் ஏதேனும் ஒன்று தத்துவரீதியாகவும், புரியாத புதிராகவும் சமர்ப்பிக்கப்பட்டால், அதுவே வானத்திலிருந்து அருளப்பட்ட போதனையாகக் கொள்ளப்பட்;டது. உணர்வுள்ள ஆலிம்கள் உண்மயான இஸ்லாத்தை எடுத்துரைத்தால், அல்லது ஒரு தீமையை அங்கீகரிக்காவிட்டால், அத்தகைய ஆலிம்களுக்கு தீண்டத்தகாத முட்டாள் எனப் பட்டம் சூட்டப்பட்டது.
அரசா    ங்கத்தின் கல்விக் கொள்கையும் இஸ்லாத்திற்கு நேரெதிராகவே தயாரிக்கப்பட்டது. அரபு, இஸ்லாமிய சட்டம், ஹதீஸ் ஆகிய பாடங்கள் போதிப்பதற்கு ஆதரவளிக்கப்பட வில்லை. இக்கலைகளைக் கற்றோர் கீழ்த்தரமானவர்களா கவும் பிற்போக்கானவர்களாகவும் கருதப்பட்டனர். அதே வேளை முற்றிலும் உலகியல் பயனுள்ள தத்துவவியல், கணிதம், வரலாறு போன்ற பாடங்களுக்கு அரசாங்கம் பேராதரவளித்தது. மொழியைப் பொறுத்தவரை சமஸ்கிருதம், இந்தி என்பன வளர்ப்பதற்குப் பேராவல் கொள்ளப்பட்டது.
அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இஸ்லாமிய சமயத்துறைக் கல்விக் கூடங்கள் கைவிடப்பட்டன. இவ்வாறு, அக்பரின் ஆட்சிக்காலம் காணப்பட்டபோது செய்க் அஹ்மத் ஷிர்ஹி;ந்தி பிறந்தார்கள்.
ஷெய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தியும் அக்பரும்:
அக்பரின் ஆட்சியின் தொடக்க காலத்தில் இருந்து மேற்கூறப்பட்ட சூழ்நிலையில்தான் சிர்ஹிந்த் என்னுமிடத்தில் ஷெய்க் அஹ்மத் அவர்கள் பிறந்தார்கள். அவர், அவரது காலத்தில் வாழ்ந்த பயபக்தி மிக்கவர்களின் மத்தியிலேயே வளர்ந்தார். அவர் தம்மைச் சூழ்ந்து, வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்குச் சக்தியற்றவராக இருந்த போதும், ஈமானில் உறுதியானவராகவும், செயலில் சிறந்தவராகவும் விளங்கினார். அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத்தூண்டிக் கொண்டும் இருந்தார்.
ஷெய்க் அஹ்மத்  (1563 -1624) அவர்கள், அக்பரின் காலத்தில்  ஆன்மீகத் துறையில் மேலோங்கி நின்ற ஹஸ்ரத் பகீஹ் பில்லாஹ் அவர்களிடமிருந்த ஆழ்ந்த உணர்ச்சியும் பயனும் பெற்றார். ஷெய்க் அஹ்மத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார்.
ஷெய்க் அஹ்மத் அவர்கள் முதன் முறையாக பகீஹ் பில்லாஹ் அவர்களைச் சந்தித்த போது – ஷெய்க் அஹ்மத் அவர்களால் பெரிதும் கவரப்பட்ட பகீஹ் பில்லாஹ் பின்வருமாறு தமது நண்பர் ஒருவருக்கு எழுதினார்.
‘ஷெய்க் அஹ்மத் என்ற ஓர் இளைஞர் ஷிர்ஹிந்தியிலிருந்து சமீபத்தில் இங்கு வந்துள்ளார். அவர் அறிவும் பேராற்றலும் நிறைந்தவராகக் காணப்படுகிறார். அவர், ஒரு சில நாட்களாக என்னுடன் பழகி வருகிறார். நான் அவதானித்த வரை, அவர் எதிர்காலத்தில் மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்;து, முழு உலகையும் ஒளிமயமாக்குவார் எனத் தோன்றுகிறது.’
இத்தீர்க்க தரிசனம் முழுமையாக உண்மையாயிருந்தது. அக்காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சத்தியத்தை விரும்பும் ஆலிம்களும் சொற்ப அளவு சூஃபிகளும் வாழ்ந்து வந்தனர். எனினும், அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளியிட்டு, ஷரீஅத்தை மேலோங்கச் செய்ய, மன உறுதியோடு முன்வந்த ஒரே மனிதர், ஷெய்க் அஹ்மத் அவர்கள் ஆவார்.
அவர், அக்கால அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து, உண்மையான சமய நெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அப்போது, தீயபோக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப்போராடியதோடு, ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
எனவே, அரசாங்கம் முழுச்சக்தியையும் திரட்டி, அவரை அடக்கியொடுக்க முயன்று, சிறையிலும் தள்ளியது. இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.
மன்னர் அக்பரின் மரணத்தின் பின்னரும், ஷெய்க் அஹ்மதின் பணி தொடர்ந்து கொண்டே இருந்தது. மன்னர் ஜஹாங்கீருக்கு சாஷ்டாங்கம் செய்ய, ஷெய்க் அஹ்மத் மறுத்தார் என்பதற்காக அவரை குவாலியர் கோட்டையில் சிறையில் அடைத்தார். செய்க்கின் நன்னடத்தை காரணமாக மன்னர் அவரின் சீடரானார். பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் மன்னர் ஜஹாங்கீர் ஆன்மிகப் பயிற்சிக்காக தனது மகனை ஷெய்க் அஹ்மத் அவர்களிடம் ஒப்படைத்தார். இவையெல்லாம் இஸ்லாமியப் பிரசாரப் பணிக்குப் பெருந்துணையாக அமைந்தன. இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடாத்திய அரசாங்கத்தின், மன்னர்களின் மனப்பான்மை, இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது.
அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக்கோட்பாடு கள், சட்டவிதிகள் அனைத்தோடும் கூடிய அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற புதிய மதம் செயல்படாமல் தடுக்கப்பட்டது. இஸ்லாமிய கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும், விலக்குகளும் தாமாகவே இரத்தாகி, செல்லுபடியாகாதவையாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்சிமுறை முடியாட்சியாகவே தொடர்ந்தாலும், சமயக் கலைகள் மற்றும் ஷரீஅத் சட்டங்களைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் மனப்பான்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.
ஷெய்க் அஹ்மத் அவர்கள் மரணித்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்ரங்கஷீப் ஆலம்கீர் பிறந்தார். பெரும்பாலும் ஷெய்க் அஹ்மத் அவர்களின் நற்செல்வாக்குக் காரணமாக தைமூர் குடும்பத்தின் இவ்வரசர் சிறந்த அறிவு, ஒழுக்கப் பயிற்சிகளைப் பெறுவது சாத்தியமாயிற்று. இஸ்லாமிய ஷரீஅத்தை ஒழித்துக் கட்டும் செயலில் ஈடுபட்டவர், அக்பராயினும் அவரது கொள்ளுப் பேரனான அவ்ரங்கஷீப் இஸ்லாத்தின் பாதுகாவலராக ஆனார்.
ஷெய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தி அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம் முற்றாக ஜாஹிலியத்தின் கைகளுக்கு மாறுவதைத் தடுத்தார். அத்தோடு, மற்றிரு சாதனைகளை நிலைநாட்டிய பெருமையும் அவரைச் சாரும்.
01.    அக்காலத்தில் தஸவ்வுபுடன் இரண்டறக் கலந்திருந்த தத்துவச் சிந்தனை தொடர்பான மாசுமறுக்களையும், துறவி மடப் பயிற்சிகளையும் களைந்து, இஸ்லாத்தின் உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டினார்.
02.    பொதுமக்களிடையே நிலவிய சன்மார்க்கத்துக்கு முரணான எல்லாப் பழக்க வழக்கங்களையும், கடும் தீவிரமாக எரித்துக் கருத்துத் தெரிவித்தார்.அத்துடன், ஆன்மீக வழிகாட்டி ஒருவரின் கீழ் ஷரீஅத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சக்திவாய்ந்த ஓர் இயக்கத்தினைத் தோற்றுவித்தார்.
ஷெய்க் அஹ்மத் அவர்கள் நன்கு பயிற்சி வழங்கிய பல இஸ்லாமிய ஊழியர்களை உருவாக்கினார். இவர் இந்தியாவில் மட்டுமன்றி மத்தியாசியாவரை மக்களின் நம்பிக்கைகளையும் ஒழுக்கத்தையும் சீர்திருத்துவதில் பெரும் பங்காற்றினார். மன்னர் அக்பரின் தீனே இலாஹியை தர்க்க ரீதியாக விமர்சனம் செய்து, தூய இஸ்லாமிய ஷரீஆவுக்கு அது எவ்வாறெல்லாம் மாறுபடுகிறது, முரண்படுகிறது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தி, அப்புதிய மதத்தை வழக்கொழியச் செய்தமையில் ஷெய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தியின் பங்களிப்பு மகத்தானதும் மனங்கொள்ளத்தக்கதுமாகும்.

3.2.11

பெண்கள் பள்ளியில் தொழுகைகளை நிறைவேற்றலாமா?



பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு, பெண் பிள்ளைகள் உயிருடன் குளிதோண்டிப் புதைக்கப்பட்ட காலத்தில் அல்லாஹ்வின் தூதராகஅனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய உரிமைகளை மிகத் தெளிவாக விளக்கினார்கள். அவற்றை முஸ்லிம்கள் காலம் காலமாகப் பேணி வந்தார்கள். அவற்றில் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதும் அடங்கும்.பிற்பட்ட காலங்களில் இஸ்லாத்தில் இணைந்தவர்களாலும், மாற்று மத கலாச்சாரத்தின் தாக்கம் பெற்ற முஸ்லிம்களாலும் இவ்வாறான உரிமைகள் பறிக்கப்பட்டன என்பதே உண்மை.

பெண்ணை மணமுடிக்கின்ற போது சீதனம், சீர்வரிசை என்ற பெயரில் பெண்ணின் பொறுப்பாளியிடம் பலவந்தமாகப் பறித்தல், உயர்கல்வியை தொடர்வதை, இஸ்லாமிய அடிப்படையில் தொழில் புரிவதை மறுத்தல், பெண,; ஒப்பமிடத் தெரிந்தால் போதும் என்ற வரட்டுத் தத்துவம் பேசுதல், கட்டாயம் முகத்தை மூட வேண்டும் என்ற போக்கு, மார்க்கத்தின் பெயரால் நிகழும் இத்தாக்கால கொடுமைகள், மாமியார் மருகளை அடிமையாக வைத்தல், மாமனாரையும், மாமியாரையும் தலைகுனிந்து மரியாதை செய்யும்படி பணித்தல் போன்ற கொடுமைகளுடன் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதை ஹராமாக்கும் தீர்ப்பையும் இணைத்துக் கூற முடியும்.
ஒரு காலத்தில் பெண்களுக்கு உரிமைகள் மதங்களில் மறுக்கப்பட்டதன் விளைவுதான் இன்று பெண்கள் நிர்வாணிகளாக, போகப்பொருளாக திட்டமிட்டே மாற்றப்படுகின்றனர், மாத்திரமின்றி அது அவர்களின் உரிமை என்றும் சங்கநாதம் முழங்குவதையும், பெண்ணுரிமைக் கோஷமாகவும் எழுதப்படுகின்றது. இந்த நிலைக்கு மத குருமார்கள் வழி வகுத்தது போல பள்ளிக்குச் செல்வதை தடுக்கும் மெளலவிகளின் நடவடிக்கையும் அமைகின்றது என்பது கசப்பான உண்மை.
பெண்களும், தேவைக்காக வெளிச் செல்தலும்:
பெண்கள் தமது தேவவைகளை நிறைவேற்றிக் கொள்ள மஹ்ரமான ஆண்களுடன் வெளியில் செல்வதைக் கட்டாயப்படுத்தும் கலாச்சாரத்தை இஸ்லாம் உருவாக்கி இருப்பது போல மஹ்ரம் துணையின்றி செல்வதையும் சில சந்தர்ப்பங்களில் அனுமதித்தும் இருக்கின்றது.
ஆரம்ப காலப் பெண்கள் தமது மல சலத்தேவைக்காக இரவு வேளைகளில் திறந்த வெளிக்கு வெளியேறிச் செல்பவர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதரிடம் உமர் (ரழி) அவர்கள் உங்கள் மனைவியருக்கு ஹிஜாபைக் கொண்டு வாருங்கள் எனக் கூறுபவர்களாக இருந்தார்கள். ஆனால் நபி (ரழி) அவர்கள் அதைச் செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவரான ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரழி) அவர்கள் ஒரு இரவு வெளியேறிச் சென்றதை அவதானித்த உமர் (ரழி) அவர்கள், அவர்கள் கொழுத்த பெண்ணாக இருந்ததால் சவ்தாவே! உங்களை நாம் அறிந்து கொண்டோம், ஹிஜாப் சட்டம் சீக்கரம் வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இவ்வாறு கூறுவார்கள். அதற்கமைவாக ஹிஜாபின் வசனத்தை அல்லாஹ் இறக்கிவைத்தான் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி ஹதீஸ் எண்: 143. பாடம்: பெண்கள் மலசலத் தேவைக்காக வெளியில் செல்லுதல்), (முஸ்லிம் ஹதீஸ் எண்: 4030)
மற்றொரு அறிவிப்பில், ஹிஜாப் இறங்கிய பின்னர் ஸவ்தா (ரழி) அவர்கள் ஒரு தேவையின் நிமிர்த்தம் வெளியேறிச் செல்வதைக் கண்ட உமர் (ரழி) அவர்கள் ஸவ்தாவே உம்மை எமக்குத் தெரியாமல் இல்லை. நீங்கள் எப்படி வெளியேறலாம் என்று சிந்தியுங்கள் என்று சொன்னதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதரிடம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் எனது தேவைக்காக வெளியேறிச் சென்ற நேரத்தில் உமர் எனக்கு இவ்வாறு, இவ்வாறெல்லாம் சொன்னார் எனக் கூறினாரே எனக் கூறும் ஸவ்தா (ரழி) அவர்கள், உடன் அல்லாஹ்வின் தூதருக்கு வஹி அறிவிக்கப்பட்டது, (அதனால் ஏற்பட்ட) வியர்வையைத் துடைத்துக் கொண்டே
 ففَقَالَ إِنَّهُ قَدْ أُذِنَ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَاجَتِكُنَّ (البخاري )
‘நீங்கள் உங்கள் தேவைகளுக்காக வெளியேறிச் செல்வது நிச்சயம் அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்கள்’ என்ற ஸவ்தா (ரழி) அவர்கள் கூறும் செய்தி புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.
மேற்படி ஹதீஸுக்கு இமாம்கள் தரும் விளக்கம்.
قَالَ اِبْن بَطَّال : فِقْه هَذَا الْحَدِيث أَنَّهُ يَجُوز لِلنِّسَاءِ التَّصَرُّف فِيمَا لَهُنَّ الْحَاجَة إِلَيْهِ مِنْ مَصَالِحهنَّ  ، ………. وَفِيهِ جَوَاز كَلَام الرِّجَال مَعَ النِّسَاء فِي الطُّرُق لِلضَّرُورَةِ ، ………   وَفِيهِ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْتَظِر الْوَحْي فِي الْأُمُور الشَّرْعِيَّة ؛ لِأَنَّهُ لَمْ يَأْمُرهُنَّ بِالْحِجَابِ مَعَ وُضُوح الْحَاجَة إِلَيْهِ حَتَّى نَزَلَتْ الْآيَة ، وَكَذَا فِي إِذْنه لَهُنَّ بِالْخُرُوجِ . وَاَللَّه أَعْلَم (فتح الباري لابن حجر – (1 / 238)

பெண்கள் தமது நலனுடன் தொடர்புடைய தமது தேவைகளை தாமே நிறைவு செய்து கொள்வதை அனுமதித்தல், அவசியத்தேவைகளின் போது பாதைகளில் பெண்களுடன் பேசுதல், பெண்கள் மறைந்தும், மறைத்தும் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தும் அவ்வாறு தன்னிச்சையான கட்டளைப்பிறப்பிக்காது மார்க்க விவகாரங்களில் நபி (ஸல்) அவர்கள் வஹியை எதிர்பார்ப்பவர்களாக இருந்தமை போன்ற விளக்கங்கள் இதில் பெறப்படுகின்றன என்ற கருத்தை இமாம் இப்னு பத்தால் (ரஹ்) அவர்கள் மூலம் இப்னு ஹஜர் (ரஹ்) வெளியிட்டுள்ளதைப் பார்க்கின்றோம். (பார்க்க: பத்ஹுல்பாரி).
شرح النووي على مسلم – (7 / 306)
….. فيه جَوَاز خُرُوج الْمَرْأَة مِنْ بَيْت زَوْجهَا لِقَضَاءِ حَاجَة الْإِنْسَان إِلَى الْمَوْضِع الْمُعْتَاد لِذَلِكَ بِغَيْرِ اِسْتِئْذَان الزَّوْج ، لِأَنَّهُ مِمَّا أَذِنَ فِيهِ الشَّرْع .
ஒரு பெண் தனது கணவனின் அனுமதியின்றி வழமையான இடத்திற்கு தேவையை நிறைவு செய்ய வெளியேறிச் செல்வது அனுமதி என்பதைக்காட்டுகின்றது. ஏனெனில் இது மார்க்கம் அனுமதித்த ஒன்றில் உள்ளதாகும் என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (பார்க்க: ஷரஹ் முஸ்லிம்) இந்த கருத்தைத்தான் நாமும் முன்வைக்கின்றோம்.
பள்ளிவாசலுக்கு வருவதை அனுமதிக்கும் நபிமொழிகள்

பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதை அனுமதிக்கின்ற ஆதாரபூர்வமான பல நபிமொழிகள் இருக்கின்றன. அவற்றில் சிலதை மாத்திரம் இங்கு தருகின்றோம்;.
1) உமர் (ரழி) அவர்களின் மனைவி ஒருவர் இஷா, மற்றும் சுபஹ் தொழுகைக்காக பள்ளியில் நடை பெறும் (ஜமாஅத்) கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்பவராக இருந்தார்கள். உமர் (ரழி) அவர்கள் இதை வெறுத்து, ரோஷப்படுகின்ற போதும் நீங்கள் ஏன் இவ்வாறு செல்கின்றீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது, அவர்கள் என்னைத் தடுக்க தடையாய் இருப்பது என்ன தெரியுமா? எனக் கேட்டபின் ‘அல்லாஹ்வின் அடிமைகளை (பெண்களை) அல்லாஹ்வின் பள்ளிகளை விட்டும் தடுக்காதீர்கள் என்ற இறைத்தூதரின் வார்த்தைதான் அவரைத் தடுக்கின்றது எனக் கூறினார்கள். (புகாரி).
2) உங்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி கோரினால் அங்கு செல்லவிடாது அவர்களைத் தடுக்காதீர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அவரது மகன் பிலால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயம் நாம் அவர்களைத் தடுப்போம் எனக் கூறினார், அதற்கு அவரைத் தாறுமாறாகத் திட்டிவிட்டு, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூலம் செய்தியை அறிவிக்கின்றேன், நீ சத்தியம் செய்து தடுப்பேன் என்கின்றாயா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம். 667).
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளியில் தொழுததற்கான சான்றுகள்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் அவர்களின் பள்ளியில் ஜமாத் தொழுகையில் கலந்திருக்கின்றார்கள் என்பதை பின்வரும் நபிமொழிகள் மூலம் உறுதி செய்யலாம்.
1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழும் ஆண்கள் தங்களது வேஷ்டிகள் சிறியவையாக இருந்தாதால் அவற்றை (கீழாடைகளை) தங்கள் பிடரியில் கட்டிக்கொண்டு தொழுபவர்களாக இருந்தார்கள்.
     …..   فَقِيلَ لِلنِّسَاءِ لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا(صحيح البخاري )
‘ஆண்கள் சம நிலைக்கு வரும்வரை நீங்கள் உங்கள் தலைகளை உயர்த்தாதீர்கள் என அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களால் (அறிவுரை) கூறப்பட்டது (புகாரி, முஸ்லிம், நஸயி). இது பெண்கள் ஆண்களுடன் பள்ளியில் கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்டதை நிரூபிக்கும் செய்தியாகும்.
2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுபஹ் தொழுகையை நேரகாலத்துடன் தொழுவார்கள். அதில் கலந்து கொள்ளும் முஃமினான பெண்கள் தங்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு திரும்பும் வேளை இருட்டின் கடுமையால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது போகும் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 825, முஸ்லிம் 1026, அபூதாவூத், நஸயி).
3) நான் தொழுகையில் நின்று அதில் நீடிக்க நினைத்துக் கொண்டிருப்பேன், அப்போது சிறுபிள்ளையின் அழுகுரலை செவிமடுப்பேன். அதன் தாய் அதன் மீது படும் கஷ்டத்தை அஞ்சி அதை நான் சுருக்கமாக்கிக் கொள்வேன். என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்).
4) ஆண்களில் தொழுகை வரிசையில் சிறந்தது முதலாவதும், பெண்களின் வரிசையில் சிறந்தது அதில் இறுதியானதுமாகும் என நபி (ஸர’) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத்).
5) உம்மு சுலைம் (ரழி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நானும், ஒரு அநாதையும் அவர்களுக்குப் பின்னால் நின்றோம். உம்மு சலைம் அவர்கள் எமக்குப் பின்னால் நின்றார்கள். என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி).
6) நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்து ஸலாம் சொன்னால் பெண்கள் எழுந்து செல்வார்கள். அதில் சற்று தாமதிப்பார்கள். (புகாரி). இது ஆண், பெண் கலப்பில்லாதிருக்கவே இவ்வாறு செய்திருக்கிறார்கள் என இது பற்றி விளக்குகின்ற அறிவிப்பாளர் (அல்லாஹ் மிக அறிந்தவன்) எனக் கூறியே கூறுகின்றார்;.
பெருநாள் தொழுகை
முஸ்லிம் பெண்கள் ஆண்கள் பங்கு கொள்ளும் இவ்வாறான நிகழ்வில் கலந்து கொள்ள மார்க்கம் பின்வருமாறு அங்கீகாரம் தந்துள்ளது. பெருநாள் தினத்தில் குமரிப்பெண்கள், மாதவிடாய் பெண்கள் உட்பட அனைவரும் பெருநாள் தொழுகை நடைபெறும் திடலக்கு புறப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு பெண் ‘அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருத்திக்கு தலையில் அணிய முந்தாணை இல்லாவிட்டால் (போகாமல் இருக்கலாமா)? என நபி (ஸல்) அவர்களிடம் வினவினார். அவளது தோழி அவளது (மேலதிக) முந்தாணையை தனது சகதோரிக்கு அணிவிக்கட்டும், நன்மையிலும், முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்குகொள்ளட்டும். என நபியவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸைப் பதிவு செய்யும் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இதை உறுதி செய்யும் வண்ணம்;
 ;;  بَاب خُرُوجِ النِّسَاءِ وَالْحُيَّضِ إِلَى الْمُصَلَّى (البخاري)
‘சாதாரண நிலையில் உள்ள பெண்களும், மாதவிடாய்ப் பெண்களும் திடலுக்கு வெளியாகிச் செல்லுதல் ‘ என தலைப்பிட்டுள்ளதையும், முஸ்லிமின் கிரந்தத்திற்கு விளக்கம் தரும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்,
بَاب ذِكْرِ إِبَاحَةِ خُرُوجِ النِّسَاءِ فِي الْعِيدَيْنِ إِلَى الْمُصَلَّى وَشُهُودِ الْخُطْبَةِ مُفَارِقَاتٌ لِلرِّجَالِ (صحيح مسلم   (4 / 404)
பெண்கள் ஆண்களைப் பிரிந்தவர்களாக இரு பெருநாளில் திடலுக்;குச் செல்வதும், குத்பாவிற்குச் சமூகம் தருவதும் ஆகுனுமானது என்பதை விளக்கும் பாடம்’ என தலைப்பிட்டுள்ளதையும் பார்க்கின்றோம்.
சிறந்தது எது பள்ளியா ? வீடா?
இப்படி தெளிவான அனுமதி இருப்பதை யாரும் மறுப்பது போன்று பேசினால் அவர்கள் இந்தச் செய்தி பற்றிய தெளிவற்றவர்கள் என்றே கருத வேண்டி ஏற்படும் என்பதை சாதாரண அறிவு படைத்தவருக்கும் தெரிந்ததேளூ! இருப்பினும் சிறப்பு எதில் இருக்கின்றது என்பதை பற்றிப் பேசினால் வீடுதான் என்பதை பின்வரும் நபி மொழியின் மூலம் உறுதி செய்ய முடியும்.
عنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ (سنن أبي داود)
உங்கள் பெண்களை பள்ளிவாயில்களை விட்டும் தடை செய்யாதீர்கள். அவர்களின் வீடுகள் அவர்களுக்குச் சிறந்ததாகும். (அபூதாவூத்) பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்ய கணவன் மாருக்கு அனுமதி இல்லை என்பதை உமர் (ரழி) அவர்களின் மனைவியரில் ஒருவர் கூறிய செய்தியை முன்னர் குறிப்பிட்டிருந்தோம் அதையும் இணைத்தே படிக்கவும்.
 
பெண்கள் பள்ளிக்கு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்.
பெண்கள் பள்ளிக்கு வருகின்ற போது பின்வரும் ஒழுங்குகள் பேணப்படுவது அவசியமாகும்.
1) மணம் பூசி வருவதைத் தவிர்த்தல்.
عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا (صحيح مسلم)
(பெண்களே!) உங்களில் யாராவது பள்ளிக்கு வந்தால் அவர் வாசைன பூச வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்களின் மனைவி ஸைனப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்). அவர்களின் மற்றொரு அறிவிப்பில், ‘ உங்களில் ஒருவர் இஷாவுக்கு பள்ளிக்கு வருகின்ற போது அவ்விரவு நறுமணம் பூசி வரவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம். (முஸ்லிம்).
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ  (صحيح مسلم)
எந்தப் பெண் நறுமணத்தைப் பூசிக் கொண்டாளோ அவள் இஷாத் தொழுகைக்கு நம்முடன் சமூகம் தரவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியு;ளளார்கள். (முஸ்லிம்).
இவ்வாறான செய்திகள் மூலம் பெண்கள் நறுமணம் பூசியவர்களாக தொழுகைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.
2) இஸ்லாமிய ஆடையுடன் செல்லுதல்.
முஃமினான பெண்கள் தமது போர்வைகளால் போர்த்தியவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் கலந்து கொள்வார்கள், தொழுகை முடிந்து கலைந்து செல்வார்கள். இருளின் கடுமையால் அவர்களை யாரும் அறிந்து கொள்ளமாட்டார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;. (புகாரி).
நரகவாதிகளான இரு பிரிவினர் உள்ளர். அவர்கள் போன்றோரை நான் என்றும் கண்டதில்லை எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள் ‘ ஆடை அணிந்தும் நிர்வரிணிகளான பெண்கள், வளைத்தும், வழைந்தும் நடப்பவர்கள், அவர்களின் தலைகள் சாய்ந்து செல்லும் ஒட்டகத்தின் திழ்கள் போன்றிருக்கும், அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவோ, அதன் வாடையை நுகரவோமாட்டார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
3) பார்வைகளைத் தாழ்த்தி, அலங்காரங்களை வெளிப்படுத்தாது செல்லுதல்.
பெண்கள் பள்ளிக்கு மாத்திரமல்ல, வெளியில் செல்லுகின்ற போதும் கூட பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளில் இதுவும் ஒன்றாகும்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைக் காத்துக் கொள்ளுமாறும், (முகம், கை போன்ற) தானாக வெளிப்படும் உறுப்புக்கள் நீங்கலாக ஏனைய எல்லாப்பகுதிகளையும் மறைக்கும்படியும், தங்களது முந்தாணைகளால் (முழுமையாக) போர்த்திக் கொள்ளும்படியும், தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் முஃமினான பெண்களுக்கு நபியே நீர் கூறுவீராக! (அந்நூர்: வச: 31).
இந்த வசனத்தைக் கவனத்தில் கொண்டு பெண்கள் தாம் வெளியில் செல்லுகின்ற போதுள்ள ஒழுங்குகளைப் பேண வேண்டும்.
4) வீதி ஓரங்களால் செல்லுவதும், திரும்புவதும்.
வீதியில் பெண்கள் ஆண்களுடன் கலக்கின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும். பள்ளிக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் இந்த ஒழுங்கை கட்டாயம் பேணியாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறி போது ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து நிற்பதைக் கண்டார்கள். பெண்களைப் பார்த்து கொஞ்சம் தாமதியுங்கள், பாதையில் முட்டிக் கொண்டு செல்வது உங்களுக்குரியதல்ல, நீங்கள் பாதை ஓரத்தைப் பிடித்துச் செல்லுங்கள் எனக் கூறினார்கள். அதனால் பெண் செல்லுகின்ற போது தனது ஆடை சுவரில் உரசியபடி செல்பவளாக இருந்தாள். (அபூதாவூத்)

பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுப்பதாக நம்பப்படும் செய்தியும், அதற்கான மறுப்பும்

பெண்கள் பள்ளிக்கு வருவதையும், அவர்கள் அனுமதி கோரும் பட்சத்தில் அனுமதி வழங்கப்படல் வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பல நபி மொழிகளைக் கண்டு கொள்ளாத மெளலவிகள் பலர் ஆயிஷா (ரழி) அவர்களின் கருத்துடன் அமைந்த பின்வரும் கூற்றை நபி மொழிகளை விட முன்னிலைப்படுத்தி அனைத்து ஹதீஸ்களையும் செயலிழக்கச் செய்யும் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையை அவதானிக்கின்றோம். இது சான்றுகளை அணுகத் தெரியாதவர்களின் செயல்முறையாகும்.
عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ لَوْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ قَالَ فَقُلْتُ لِعَمْرَةَ أَنِسَاءُ بَنِي إِسْرَائِيلَ مُنِعْنَ الْمَسْجِدَ قَالَتْ نَعَمْ  (صحيح مسلم )
பெண்கள் உருவாக்கிக் கொண்ட(புதிய)வைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவதானித்திருந்தால் பனூ இஸ்ரவேலரின் பெண்கள் தடுக்கப்பட்டது போல நமது பெண்களையும் பள்ளிக்கு வராது நிச்சயம் தடுத்திருப்பார்கள்; என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிடுவதை அவர்களின் கருத்தாகக் கொள்ளாமல் நபி மொழியாகக் கொண்டு பள்ளிக்குச் செல்வதை அனுமதிக்கும் பல நபி மொழிகள் இதன் மூலம் உதாசீனம் செய்யப்படும் நிலையைப் பரவலாக அவதானிக்கின்றோம்.
இது அன்னை அவர்களின் கூற்று என்பதே உண்மை. பள்ளிக்குச் செல்வது அல்லாஹ்வின் தூதர் தனது மரணத்துக் முன்னால் அனுமதித்த ஒன்றாகும். அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து சென்றார்கள். அவ்வாறு அவர்களை தடை செய்வதாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் உயிருடன் இருக்கின்ற போதே தடை செய்திருப்பார்கள்.
அல்லாஹ் அனைவருக்கும் மார்க்கத்தில் விளக்கத்தை தருவானாக!

செய்திகள்