20.1.12

சித்தீக் மதனியின் சின்னத் தனங்கள்


ல்ஜன்னத்தில் எழுதப்பட்ட ஒரு செய்தி குறித்து இலங்கை ஜம்இய்யத்து அன்ஸாரிஸ் ஸுன்னத்தில் முஹம்மதிய்யாவிலிருந்து வந்த ஒரு கடிதத்தையும் அது பற்றிய நமது விளக்கத்தையும் கீழே தந்துள்ளோம்.

அஸ்ஸலாமு அலைக்கும். தஃவாப் பணியில் ஈடுபடுகின்ற தாங்கள் உடல், உள, ஆன்ம நலம் பெற்று வாழப் பிரார்த்தனைகள். தங்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகின்ற அல்ஜன்னத் இதழ் தமிழ்பேசும் முஸ்லிம்களில் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் வாழவேண்டுமென்ற ஆர்வமுள்ளவர்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இருந்தும் சில விடயங்களில் உங்களது எழுத்தோட்டங்கள் சத்தியத்தை நேசிக்கின்றவர்களது மனதைப் புண்படுத்தும்படி அமைந்து விடுகின்றது. இவை கட்டாயம் தவிர்ந்து கொள்ளப்படல் வேண்டும் என்பதை சகோதர வாஞ்சையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
'1996
ஜுன், ஜுலை அல்ஜன்னத் இதழில் கேள்வி பதில் பிரிவில் 36ம் பக்கத்தில் முஹம்மது அலி சீனி, புகைரா, மு.ளு.யு. கேட்ட கேள்விக்கு அளித்திருக்கிற பதிலைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறோம்.'
குறிப்பிட்ட விடயம் ஆதாரமற்ற கட்டுக்கதை எனக் குறிப்பி;ட்டுள்ளீர்கள். அத்தோடு மதீனா  இஸ்லாமியப் பல்கலைக்கழகம், சவூதியிலுள்ள பல்கலைக்கழகங்கள் என்பவற்றைத் தரக்குறைவாக விமர்சித்துள்ளீர்கள். இது அந்தக் கேள்விக்குரிய பதிலில் வர வேண்டியதுமில்லை. அத்துடன் மவ்லவி முஹம்மத் தவ்பீக் உரையாற்றிய விடயம் - கேள்வி கேட்டவர் எழுதிய விதத்தில் அல்லாத கொஞ்சம் வித்தியாசமாக ஸஹீஹுல் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. விடயத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
எந்த விடயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் நிதானமாகச் சிந்தித்து எழுதுவது அல்ஜன்னத்தின் வளர்ச்சிக்கும் இஸ்லமிய தஃவாவின் வெற்றிக்கும் பேருதவியாக அமையும் என்பதைக் கூறிக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
அபூபக்கர் சித்தீக் மதனீ,
அமீர்.
இதுதான் அந்த மடல். இந்த மடலுடன் ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றதாகக் கடிதத்தில் கூறப்படும் ஹதீஸின் ஜெராக்ஸ் (Phழவழ ஊழில) ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
தாங்கள் இரண்டு விடயங்களை உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்! நல்ல எண்ணத்தில் தாங்கள் சுட்டடிக்காட்டிய விடயங்களுக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதலாவது விடயம் : மதீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களைத் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது.
மிகப் பெரிய இமாம்கள், பெரியார்கள், தவறான கருத்தைக் கூறியதாகத் தெரிய வரும்போது, தாட்சண்யமின்றி கடந்த பத்து வருடங்களில் விமர்சித்துள்ளோம். அத்தகைய விமர்சனங்களை ஏகத்துவவாதிகள் அனைவரும் மறுப்பின்றி அங்கீகரித்துக் கொண்டோம். மதீனாப் பல்கலைக்கழகம் குறித்து சில தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது மட்டும், அதற்காக வேதனைப்படுவதை நாம் சரி என ஏற்க முடியாது.
மதீனாவில் உள்ள பல்கலைக்கழகம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல. நமக்கு நெருக்கமானவர்கள் என்பதற்காகத் தவறுகளைச் சுட்டிக்காட்டாமலும் இருக்க முடியாது.
இது, இன்று நேற்று எடுக்கப்பட்ட முடிவன்று. ஆரம்பம் முதலே அல்ஜன்னத்தின் நிலைப்பாடு இதுதான். 'தவறுகள் எவரிடமிருந்து வந்தாலும் அந்தத் தவறுகளை மட்டும் தாட்சண்யமின்றி விமர்சிப்போம். தவறிய மனிதார்களைத் தரக்குறைவாக விமர்சிக்கமாட்டோம்' எனபதை சபதம் ஏற்போம் என்ற தலைப்பில் அடிக்கடி வெளியிட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள்.
தராவிஹ் 20 ரக்ஆத்கள் என்று மதீனாவிலிருந்து பத்வா வந்தது உண்மை. மத்ஹபுகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக பத்வா கொடுத்ததும் உண்மை. நீங்களும் நாமும் பிரசாரம் செய்து வரும் கொள்கைக்கு இவை எதிரானவை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
நீங்களும் அங்கே த.வாப் பணியில் ஈடுபட்டுள்ள மதனிகளும் அங்கே படித்த காலத்தில் மத்ஹபுகள் கூடாது என்றே உங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. எட்டு ரக்ஆத்கள் என்பதை அங்கிருந்துதான் தெளிவாகக் கற்று வந்தீர்கள். அந்த நிலை இன்று மாறிவிட்டது. வந்த வழியே திரும்பிச் செல்கிறது என்ற உண்மையைத்தான் நாம் எழுதினோம்.
இது போன்ற விமர்சனம் தரக்குறைவானது என்றால், மத்ஹபு வாதிகள், தர்காதிகள், தரீக்காவாதிகள் ஆகியோரின் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவது எவ்வகையில் நியாயம்? நமக்கு வேண்டப்பட்டவர்களின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் வேண்டப்படாதவர்களின் தவறுகளை மட்டும் விமர்சிப்பதில் நமக்கு உடன்பாடில்லை.
அந்தக் கேள்விக்குரிய பதிலில் அது வரவேண்டியதில்லை எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். கேள்வி கேட்டவர் ஓர் ஆலிம் இப்படிக் கூறுகிறார் என்று குறிப்பிட்டால், மதீனாப் பல்கலைக்கழகத்தைப் பற்றி நாம் குறிப்பிட்டிருக்க மாட்டோம். மதீனாவில் படித்த ஆலிம் என்று கேள்வி கேட்டவர் குறிப்பிட்டுள்ளார். மதீனாவில் படித்தவர் கூறுவதால் அது சரியாகத்தான் இருக்க முடியும் என்ற கருத்தை இது தருகிறது. ஆதை அகற்றுவது அந்த இடத்தில் அவசியமாகின்றது. அதனால்தான் மதீனா பல்கலைக்கழகத்தைப் பற்றி நாம் குறிப்பட வேண்டியதாயிற்று.
மதீனாப் பல்கலைக்கழகத்தில் படித்து, குர்ஆன் - ஹதீஸை நிலை நாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு, தியாகம் செய்பவர்களைக் குறித்து அந்த விமர்சனம் செய்யப்படவில்லை. அங்கே இன்று தரம் குறைந்து விட்டது என்றுதான் விமர்சனம் செய்யப்பட்டது. அதற்காக யாரும் புண்படவேண்டியததுமில்லை, புண்படவும் கூடாது.
இரண்டாவதாக நீங்கள் சுட்டிக்காட்டுவது பதிலில் கூறப்பட்ட விடயம் குறித்ததாகும்.
ஜின்கள் இருப்பதிலோ, அவை பல்வேறு வடிவங்களில் வீடுகளில் வரும் என்பதிலோ நமக்கு இரண்டாவது கருத்தில்லை. அதை நாம் என்றுமே மறுத்ததில்லை. ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்கள் இதுபற்றிக் கூறுவதால் யாரும் மறுக்க முடியாது.
ஜின் ஒன்று, ஒரு பெண்ணை விபச்சாரத்திற்கு வற்புறுத்தியதாகவும், அதனிடமிருந்து தப்பித்து அந்தப் பெண் நிர்வாணமாக ஓடி வந்ததாகவும், அந்த மவ்லவி பேசியதாகக் கேள்வியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், எந்த இடத்தில் அந்த ஜின்னை நபித்தோழர் கொன்றாரோ, அதே இடத்தில் மரணம் வரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அந்த மவ்லவி பேசியதாகக் கேள்வியில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றித்தான் கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.
நீங்கள் அனுப்பிய ஜெராக்ஸில் (Phழவழ ஊழில)  இந்த விபரம் அறவே இல்லை.
பாம்பு வடிவில் ஜின் வீட்டில் வந்ததும், பயந்து கொண்டு, அந்தப் பெண் வெளியே வந்ததாகவும், கணவர் உள்ளே சென்று பாம்பைக் கொல்வதற்காக ஈட்டியால் குத்தினார். அது அவரைத் தாக்கியது, இருவரும் இறந்து விட்டனர் என்றுதான் அந்த ஹதீஸ் கூறுகிறது.
'
அந்த மவ்லவி உரையாற்றிய விதத்திலல்லாது கொஞ்சம் வித்தியாசமாக ஹதீஸில் உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது கொஞ்சம் வித்தியாசமாகும் என்று யாரும் கருதமாட்டார்கள்.
ஜின் ஒன்று பாம்பு வடிவில் வந்தது என்பதற்கும், மனித வடிவில் வந்து பெண்ணை நிர்வானப்படுத்திப் பலவந்தம் செய்தது என்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் உள்ளது.
பாம்பை அவர் கொன்று, அவர் உயிருடன் இருந்ததாகக் கூறுவதும், அவர் இறந்துவிட்டார் என்று கூறுவதும் வித்தியாசம் அல்ல நேர் முரணானது.
'
எந்த இடத்தில் பாம்பைக் கொன்றாயோ, அதே இடத்தில் உனக்கு மரணம் வரும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறுவது கொஞ்சம் வித்தியாசம் அல்ல. நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய்யாகும்.
இந்த விடயங்களைக் குறித்துத்தான் இட்டுக்கட்டப்பட்ட கற்பனை என நாம் விமர்சனம் செய்தோம். ஹதீஸில் உள்ளதைத்தான் பேசவேண்டுமே தவிர, அதில் இல்லாததை - கை, கால் வைத்துப் பேசக் கூடாது. அவ்வாறு பேசுவோர் யாராக இருந்தாலும் நாம் விமர்சனம் செய்துதான் ஆகவேண்டும்.இதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம். (அல்ஜன்னத் - ஆகஸ்ட் 1996)

இதை வாசிக்கும் போதே நீங்கள் ஓர் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள். இவர்கள் எந்தளவு ஆய்வறிவு இல்லாமல்,மேலோட்டமாக நுணிப்புல் மேய்ந்துள்ளார்கள்? இந்த,இவர்களின் அறியாமைக்கு பீ.ஜே. தக்க விளக்க பதில் அளித்தவுடன், அவரை தரக்குறைவாக விமர்சிக்க ஆரம்பித்தனர். அல் -ஜன்னத் வாங்குவதையும் உடன் நிறுத்தினர்.



6.1.12

சாக்கடைகளெல்லாம் சட்டப் பாரம்பரியமாகுமா?

மீள்பார்வை முரப்பியன் மூத்திர பை(வை)த்தியம்

இஸ்லாத்தின் அடிப்படைகளான அல்குர்ஆனையும் ஹதீஸையும் மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும். இவை, இரண்டிற்கும் மாற்றமான எந்த இயக்கத்தையோ, குழுவையோ, தனி நபரையோ பின்பற்றக்கூடாது. ஏனெனில், தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும், எதை விட்டும் உங்களை தடுக்கின்றாரோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.(59:07) என அல்லாஹ் கூறுகின்றான்.
  நபி (த )அவர்கள் இஸ்லாத்தை மிகத் தூய்மையான வடிவில் போதித்துள்ளார்கள். உலக முஸ்லிம்கள் அனைவரும் நபி வழிமுறைப்படியே வாழவேண்டும். ஒரு முஸ்லிம் நபி வழியைப் புறக்கணித்து விட்டு, ஏதாவது ஒரு மத்ஹபைப் பின்பற்றினால், அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான். ஏனென்றால், மத்ஹபுகளில் காணப்படும் சட்டங்களில் பெரும்பாலானவை நேரடியாகவே அல்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் முரண்படுகின்றன. இந்த முரண்பாடுகளை அறியாத சிலர், ஏதாவது ஒரு மதஹபைப் பின்பற்ற வேண்டும். நேரடியாக அல்குர்ஆனையும், ஹதீஸையும் விளங்க முடியாது. மத்ஹபு இமாம்களின் விளக்கத்திலிருந்துதான் பின்பற்ற வேண்டும் என்ற தவறான பிரசாரத்தைத் துவக்கியுள்ளனா;. மத்ஹபு பக்தர்களும் கி(இ)லாபத் இயக்க கனவுலகக் கற்பனைவாதிகளும் தற்போது, மூடத்தனத்திற்கான அழைப்பை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

2.1.12

பிற மேடைகளில் பிரச்சாரம் - தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு - பகுதி02

ஆர். ரஹ்மத்துல்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்கள் பிற அமைப்பினரோடு இணைந்து பிரச்சாரம் செய்யும் போது நமது பேச்சாளர்களுக்கு ஏற்படும் அவலங்களைப் பற்றிக் கடந்த இதழில் அறிந்தோம்.
அதே போல், பல்வேறு கொள்கையுடையோர் ஒன்றிணைந்து செய்யும் பிரச்சாரத்தைக் கேட்கும் மக்களுக்கு ஏற்படும் அவலங்களைப் பார்ப்போம்.
கொள்கைக் குழப்பம்
அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் வணங்கக்கூடாது என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்ற மக்கள், தான் மட்டும் ஏற்றுக் கொண்டதோடு நிறுத்தி விடாமல் பிற மக்களுக்கும் இந்தக் கொள்கை சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சத்தியப் பிரச்சாரம் எந்தப் பகுதியில் நடந்தாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வண்ணம் அங்கு சென்று சங்கமமாகி விடுவார்கள்.

1.1.12

இவர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

JASM திருச்சபையின் திருகுதாளங்கள்

அண்மையில் மஹகொடையில் உள்ள பள்ளிவாசல் தரீக்காவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டதோடு, கப்ர் வணங்கும் கயவர்களால் இரண்டு ஏகத்துவ வாதிகள் கொடூரமாகக் கொலையும் செய்யப்பட்டனர். இவ்வளவு பெரிய கொடூரம் நடைபெற்றதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் என்ற நிதி நிறுவனம், தாம் கட்டிய பள்ளி எரிக்கப்பட்ட நிலையில் பித்அத் வாதிகளுக்குக் கட்டிக்கொடுத்த பள்ளிகளில் அல்குர்ஆன் ஓதத் தெரியாத கோவைக் கோமாளியை வைத்து மார்க்க வியாபாரம் நடத்திக்கொண்டிருந்தனர்.மஹகொட பள்ளி எரிப்பும் நயவஞ்சகத் தனமும்சத்தியத்தை துணிந்து சொல்லும்போது, விளைவுகள் ஏற்படவே செய்யும்.

செய்திகள்