26.4.11

பலவேஷம் பந்திபோட்டதில் மந்தியாய்க் குந்தியெழுந்த கவிஞர்(?) இக்பால் அலிக்கான மறுப்பு இது.


கவிஞர்(?) இக்பால் அலி என்பவர் எழுதிய பொய்யான தகவல்களுக்காக இலங்கை சிலாபம் பகுதியைச் சேர்ந்த சகோதரர் ரஸ்மி அவர்கள் தெளிவான ஒரு பதிலை நமக்கு எழுதி அனுப்பியிருந்தார் அவர் எழுதிய அந்த பதிலை எவ்வித மாறுதலும் இன்றி வெளியிடுகிறோம்.



இக்பால் அலியின் வாதம்:–

இஸ்லாமியச் சூழலில் பல்வகையான விவாதங்களும்உரையாடல்களும் அவசியமாகும். இந்த விவாதத்தில் ஈடுபடுபவர்கள் நேர்த்தியான குணப் பண்புகளோடு குறித்த விடயம் தொடர்பான வாதங்களை முன் வைத்தலே சிறந்ததும்ஆரோக்கியமானதுமாகும். தரமான விடயதானங்களை உள்ளடக்கிய செறிவான தகவல்களுடன் சிந்திக்கத் துணை செய்யக் கூடிய ஆழமான கூறுகளை நிதானத்துடன் ஒப்புவிப்பதன் மூலமாகத்தான் சிறந்த ஆய்வாளனாக முடியும். ஆனால்,பீஜே என்பவர் சமீபத்தில் இஸ்மாயில் ஸலபி விடயம் தொடர்பாக அவர் வெளிக் கொணர்ந்த கருத்துக்களை நோக்குகின்ற பொழுது அவரைப் பற்றி மறு பரீசீலனைக்குட்படுத்த வேண்டியுள்ளது.

நமது பதில்:-

அவசியப்பட்ட தமிழ் இஸ்லாமியச் சூழல் விவாதங்களையும்,உரையாடல்களையும் பீஜேயொடு அடியொட்டி வார்த்தெடுக்கப்பட்ட அனுபவங்களாய் இன்றளவும் எம் உளப்பதிவேடுகளில் பிரதியெடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பீஜே யினால் நிகழ்த்தப்பட்ட விவாதங்களாகட்டும்வினா விடைகளாகட்டும்,அத்தனையும்ஆரோக்கிய
அட்டையுடனும்அம்சமான குண நலத்துடனும்செறிந்த சிந்தனைத் தகவல் பெட்டகமாக உலகமெங்கும் வலம் வருவது நாசிச சிந்தனைகளுக்கு பட்டவர்த்தனமான குருட்டு. சிந்தனைத் தொய்வுகள் ஆய்வுகள் என்று விளங்கும் போலிக் கவிஞர்களுக்கு இது தகரடப்பா தட்டும் தாளமாகத்தான் இருக்கும்.
பதட்டம் முற்றி பாழாங்கிணற்றில் விழுந்த பாழாய்ப்போன பக்கவாத சிந்தனைகள் ஆழஞ்சென்று தேடினாலும் காலஞ்சென்ற கதையாய்த்தான் முடியும். சமீபத்துக்கு முந்தைய காலங்களில் இஸ்மாயில் ஸலபியின் அதீத(?) குணப்பண்புகளையும்நோயுற்ற விடயதானங்களையும்,சொறிபிடித்த தகவல்களையும்;, சிரிக்கத் தோனும் நுனிப்புல் மேயும் கூறுகளையும்அவசரப்பட்டுப் பார்த்ததால்தான் கவிஞர் இங்கு அவசியப்பட்டு வெளிக்கொணர்ந்துள்ளார். ஓட்டைக் கலசத்தில் வார்க்கப்பட்ட பரிசீலிக்கவே முடியாத் தரிசுக்கவிதைகளைத் தாங்கிய புள்ளிக் கவிஞர் துள்ளிக் குதிப்பதன் காரணம் பின்னர் வரும்.

இக்பால் அலியின் வாதம்:-

அவர் என்னுடைய புள்ளிகளில் சில புள்ளிகள்’ எனும் கவிதை நூல் பற்றி எழுதிய குறிப்புக்கள் அனைத்தும் முற்றிலும் பொய் மூட்டை கலந்த தகவல்களாகும். இந்நூல் நான் பணி புரியும் நிறுவனத்தினர் வெளியிட்டதாகவும்இஸ்மாயில் (ஸலபி) இந்நூலை மேற்பார்வை செய்துள்ளதாகவும்நானொரு கம்யூனிஸ வாதி எனவும் பாரியதொரு அபாண்டத்தைச் சுமத்தினார். இவை யாவும் இஸ்மாயிலை மட்டந்தட்ட வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியும்நான் பணி புரியும் நிறுவனத்தின் மீது கொண்டுள்ள கோப-தாபத்தினால் ஏற்பட்ட கருத்துச் சோடிப்பே தவிர உண்மையல்ல.
இந்நிறுவனத்தில் நான் நீண்ட காலமாய்ப் பணி புரிகின்றேன். இந்நிறுவனத்திலிருந்து சம்பளத்தைத் தவிர வேறு எந்த விதமான பயனை இது வரை பெற்றதில்லை. இவ்வாறானதொரு நிலையில் என் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கோபுத்தகத்தை வெளியிடுவதற்கோ எந்த விதமான உதவியும் எனக்கு வழங்கப்படவில்லை என்பது உறுதி.

நமது பதில்:-

கற்பனை உலக சஞ்சாரம் கவிஞர்களுக்கு ஒன்றும் ஆச்சரியமில்லையென்றாலும், “அனைத்தும் முற்றிலும்” என்ற கவிஞரின் பதப்பிரயோகம் அவர் தன்னையும் கவிஞர் என நினைத்து சஞ்சார நாடகமாடுகிறார் என்றே கருதவேண்டியுள்ளது. பீஜே எடுத்தியம்பிய சொல்லாடல்களைக் கருத்துப் பிசகாமல் மீண்டும் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன். சர்வ அதிகாரம் படைத்த கலீலுர் ரஹ்மான்கணினித் தட்டெழுத்தாளர் றிள்வான் ஆகியோருக்கு நீங்கள் நன்றிக் கடன் பட்டது பற்றியும்இவர்கள் செய்த பேருதவிகள் பற்றியும் சற்றுச் சரளமாகக் கூறுங்கள். எந்த உதவி செய்தாலும் அந்த உதவி செய்யலாமா என்பதும் இதைத் தடுக்காமல் இஸ்மாயில் என்ன மேலே பார்த்துக்கொண்டு (மேற்பார்வை என்றுகூட சொல்லலாம்) இருந்தாரா என்பதும்தான் பீஜே யின் அகர வினா.
பீஜேக்கு காழ்ப்புணர்ச்சியாம் ஸலபி இஸ்மாயீல் மீது. உங்கள் தலைகள் காலுடன் புணர்ந்து மையிட்ட மடமைகள் வெளிச்சத்துக்கு வரும்போது,மட்டந்தட்டப்பட்ட மனமறியும் காழ்ப்புணர்ச்சி யாருக்கென்று. காசு கைது செய்த காசுதாஸான ஜமாத்துஸ் ஸ_ன்னா மார்;க்ஸியா காசளக்கும் ஸலபியை காழ்ப்புணர்வு கொண்டு விமர்சிக்கிறார் என்று கூற உங்களுக்கு வெட்கம் வரா!. காசுக்கு மாரடிக்கும் இயல்பூக்கம் தங்கள் நிறமூர்த்த அலகுகளில் ஊறிப்போனதால்தான் வெட்கமே வரா.
உங்கள் நீண்டகாலப் பணியில் வேதனம் தவிர ஏதெனும் பயன் எடுத்ததுண்டாஎனக் கேட்பதுஎடுக்கவும் வாய்ப்புள்ளது தவிர்த்துத்தான் உள்ளேன் என்று கூறுவது போல உள்ளது. சம்பளம் தவிர கிம்பளம் கொடுத்தா ஆசிரியர் விடுதிவீட்டில் அரை ஆயுளை (சும்மா) கழித்தீர்கள்?

இக்பால் அலியின் வாதம்:-

பிரபலமான எழுத்தாளர் டொக்டர். தி. ஞானசேகரனின் ஞானம்பதிப்பகத்தின் ஏழாவது நூலாக இது வெளிக் கொணரப்பட்டுள்ளது. இந்நூலுக்குரித்தான ஐ.எஸ்.பி.என் இலக்கம் 955-8354-03-1 இதுவாகும். நான் பணி புரியும் நிறுவனத்தினரின் வெளியீடு எனப் பெயர் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானதாகும். அக்கவிதைகள் யாவும் எந்தெந்தக் காலப் பகுதிகளில் வெளியாகியுள்ளன என்றும்,எந்தெந்த சஞ்சிகைகளில் மற்றும் தேசியப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்பதையும் தெட்டத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அந்நூலில் தகவல்கள் உள்ளன. இலங்கையின் தேசிய பத்திரிகைகளான தினகரன்’, ‘வீரகேசரிஎன்பவற்றிலேயே என்னுடைய கூடுதலான கவிதைஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதே வேளை சர்வதேச ரீதியிலாகப் புகழ் பெற்றஞானம்’ கலை இலக்கிய சஞ்சிகை மற்றும் இன்னோரன்ன கலை இலக்கிய சஞ்சிகைகளிலும் பிரசுரமான கவிதைகளே அந்நூலில் உள்ளன. கவிதைக்குப் பொய் அழகு சேர்ப்பது போல அவரும் கேள்விப்படாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றை அதில் எழுதியுள்ளார்.

நமது பதில்:-

ஞானம் பதிப்பகமும்ஐ.எஸ்.பி.என் இலக்கமும் கலீலுர் ரஹ்மானும்,றிள்வானும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் அல்லர் என்று நிறுவ தகுந்த ஆதாரங்கள்(?);. விட்டால் வாங்கிய வாசகர் பட்டியலையும் ஆதாரமாகத் தர மறுக்கமாட்டீர்கள்.
உங்கள் கவிதை(?) வெளியாகிய சஞ்சிகைகளுக்கும்தினகரனுக்கும்,வீரகேசரிக்கும் இல்லாத பாராட்டு மாலை பாவம் அந்த அ(ட)ப்பாவி கலீலுர் ரஹ்மானுக்கும்றிள்வானுக்கும். கவிதையுடன் சேர்த்து கவிஞர் இக்பால் அலிக்கும் பொய்தான் அழகு. 
கவிதையைச் சுமப்பதை விட சீழைச் சுமப்பது மேலானது என்ற பொய்யா நபிமொழி உங்களுக்குப் பொய்தான்.

இக்பால் அலியின் வாதம்:-

அடுத்துஇஸ்மாயில் ஸலபி என் நூலுக்கு மேற்பார்வை செய்ததாக சுட்டிக் காட்டியுள்ளார். இஸ்மாயில் ஸலபியின் துறை வேறு;என்னுடைய துறை வேறு. இலக்கியத்தில் ஊடுபாயும் உள்ளார்ந்த விடயங்களை இன்னுமொருவர் என் நூலை மேற்பார்வை செய்ய வேண்டிய தேவையில்லை. இது ஒரு ஆய்வு நூலல்ல. ஆராய்ச்சி நூலுக்குத்தான் மேற்பார்வையாளர்செயலமர்வுகருத்துப் பரிமாறல் என்பவை தேவை. இஸ்மாயில் ஸலபியின் விடயம் தொடர்பான எண்ணக் கருவிலிருந்து கருத்துப் பரிமாறலை அவர் தொடாமல் சம்பந்தமில்லாத விடயங்களுக்கு அப்பால் விலகிப் போய்ச் சென்று ஏதோ ஏதோ எல்லாம் எழுதுவது சிறந்த ஆய்வாளனுக்கு உவப்பானதல்ல.

நமது பதில்:-

மேலே பார்த்துத் த(து)ப்பும் இல்மாயீல் ஸலபிநன்றி சொல்லி நீங்கள் கலீலுர் ரஹ்மானைக் காட்டிக் கொடுத்த போதும்கவிதை வெளியிட்ட போதும் மேலே பார்த்துக்கொண்டுதானே இருந்தார் என்பதுதான் பீஜே யின் கேள்வி. மேற்பார்வையிலேயே இன்னும் இருக்கும் இஸ்மாயீல் ஸலபியின் கண்கள் எப்போது தரையிறங்கும்இஸ்மாயீல் துரைக்கும்,இக்பாலலி துரைக்கும் குரைக்கும் துறை தவிர என்ன பெரிய துறை இருக்கிறதுஎன் இணைவைப்புக் கவிதைக்கு இணையாய் எந்தக் கவிதை இருக்கப்போகிறது என்ற நினைப்புத்தான் உங்கள் பிழைப்பைக் கெடுத்தது. அதனால்தான் மேற்பார்வையற்று மொழுகிய முஸ்லிம் முலாம் கவிக்குள் இணைத்துரு எட்டிப்பார்த்தது. ஆய்வில் தோயாத படைப்புகள் மார்க்கம் தொடர்பான எண்ணக்கருவில் அனைத்துக் கழிசடைகளையும் தாங்கிவருதல் அனுமதிக்கத்தக்கது என்ற உங்கள் வாதம் நகைப்புக்குரியது.


இக்பால் அலியின் வாதம்:-

அவர் இது வரை கடந்த கால இஸ்லாமியப் பிரச்சாரப் பயணத்தில் முன்வைத்த ஆய்வு ரீதியான ஒப்புவிப்புக்கள் அவரிடம் நேர்மைத் தன்மையைக் கொண்டிருக்கின்றதாஎன்கின்ற சந்தேகம் தற்பொழுது எழுகின்றது. ஏனென்றால்நான் பணி புரியும் நிறுவனம் தொடர்பாகப் பல குற்றச் சாட்டுக்களை விலாசித் தள்ளியிருக்கின்றார். இது கூட நம்பகத் தன்மை அற்றவையே! இந்நிறுவனத்தில் 14 வருடங்களுக்கு மேலாகச் சேவை புரிகின்றேன். அவரின் கூற்று தூர நின்று பொய்யான அதிக கற்பனையோடு மிதப்பதாகப் புலப்படுகின்றது.

நமது பதில்:-

புலப்படும் பொய்கள் அம்பலப்படும் நிலைக்கு வரும்போதுதான் பொய்,மெய்யாகப் பொய்யென்று நிரூபணமாகும். பீஜேயின் ஆய்வுகள் உங்களால் சுட்டிக்காட்டி தட்டிக்கேட்கப் பட்டாலோஏலவே சுட்டிக்காட்டப்பட்ட பொய்கள் உங்களால் தூசு தட்டிக்காட்டப்பட்டாலோ தவிர மொட்டைச் சந்தேகங்களில் நேர்மை ஏதுமில்லை.

இக்பால் அலியின் வாதம்:-

அடுத்துநானொரு கம்யூனிஸ்டாக சித்தரிக்கப்பட்டிருந்தேன். உண்மையிலே நான் ஒரு கம்யூனிஸ்ட்டல்ல. உள்ளத்தின் வார்ப்புத்தான் கவிதை. இலட்சியார்த்த எதிர்பார்ப்புடனான நோக்கில் புனையப்பட்ட கவிதையல்ல அது. பொலிவு மிக்க சொற் பதத்தின் கூட்டமான கவிதை நயத்துக்குரிய பண்பாட்டுத் தளத்துக்குரிய குறியீடாக அது உள்ளது. கவிதைக்கு உள்ளுறைஇருண்மைஉருவகம்இன்ன பிற வகையான இலக்கிய அம்சங்கள் உள்ளன. இவற்றின் நுட்பங்களை எல்லாம் விளங்காக் கூட்டம் ஒற்றைப் படப் புரிதலை வைத்துக் கொண்டு சரியான தளத்தில் சரியான கோணங்களை வைத்துப் பார்க்கின்ற அறிதிறன் அற்ற மந்தைகளால் சூட்டப்பட்டத்தை அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

நமது பதில்:-

மந்தைக்கு அறிதிறன் அற்றது விந்தையல்ல. சிந்தைக்குத் தெளிவிலா நிந்தனை உங்கள் கவிதை. உங்களை நீங்கள் கம்யூனிஸ்ட்டல்ல என்று சொல்லிக் கொள்வதால் எழுதிய கவிதை சிதையுமா என்ன? “உள்ளத்தின் வார்ப்புத்தான் கவிதை” என்று கவிதைக்கு விதியமைத்த நீங்கள்இலட்சியார்த்த எதிர்பார்ப்புடனான நோக்கில் புனையப்பட்ட கவிதையல்ல அது” என்று முரண்பட்டிருப்பது நீங்களும் கவிஞர் என்பதாலா?நோக்கமென்பது உங்கள் உள்ளத்தின் வார்ப்பாபீரிட்டுப் பாயும் மடமை வெள்ளத்தின் வார்ப்பாபொலிவுமிக்கச் சொற்பதங்களும்தெளிவுமிக்க வார்த்தைப் பிரயோகங்களும்கவி நயத்துடன் கைகோர்த்து இணைவைப்பைக் குறியீடாகக் காட்டும் போது உள்ளுறைஇருண்மை,உருவகம்இன்னும் பல இலக்கிய அம்ச நுட்பங்கள் அதை மாற்றித்தான் காட்டுமா என்ன?

இக்பால் அலியின் வாதம்:-

உண்மையிலேயே 1988 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கவிதைதான் அது. அப்புத்தகத்தில் 1998 ஆம் ஆண்டு என்று அச்சுப் பிழையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு எழுத்தாளனின் முற்பட்ட காலம்,நடுத்தரக் காலம்பிற்பட்ட காலம் என்று பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். நான் வாழ்ந்த சுற்றுச் சூழல்நெருங்கிப் பழகின நண்பர்களின் மூலமாக கார்ல் மாக்ஸ்’ என்பவரின் சொற் பதம் கவிதையில் பொலிவு பெற்றுள்ளது. கொள்கைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு செயற்பட்டதொன்றல்ல. எனினும்இது பற்றி என் சுற்று வட்டத்தில் உலமாக்கள் அடிக்கடி எடுத்துக் கூறியதன் பயனாக என் மனதுக்கு அச்சம் ஏற்பட்டது. மீளவும் அல்லாஹ்விடம் பிழை பொறுத்து,பிரார்த்தனை செய்து கொண்டேன்.

நமது பதில்:

இதுவன்றோ சமாளிப்பு. நல்ல பல்லிளிப்பு! மு(மூ)க்கால முனங்கல் என்பது இதுதானோ?! 2001 என்பது தௌ.மு வாதௌ.பி யாஉங்களுக்கும் அல்லாஹ் மீது அச்சமாதுச்சமாய் மதித்த அசட்டு தைரியம்தான் இன்றளவும் இறுமாப்பாய் கவிதைகளில். பிழை பொறுத்தலும் பிரார்த்தனையும் திருந்திய பின்னர்தான். பதிப்பில் திருத்திய பின்னர்தான். 88, 98 ஆய் பிழைத்ததால் நீங்களும் பிழைத்துவிட்டீர்களா?அந்தப்பிழைக்கும் கேடுகெட்ட உங்கள் பிழைப்புக்கும் என்ன சம்பந்தம்?யார் கேட்டார் அந்தப் பிழையைமன்னிக்கனும் என்னை. 88 இலேயே தினகரனில் வந்துவிட்டதால் உங்கள் இணைவைப்புக் கவிதை இன்று பணவைப்புக் கவிதை என்பதை மறந்தேவிட்டேன்.

இக்பால் அலியின் வாதம்:

இஸ்லாம் மார்க்க விடயம் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இருப்பது கட்டாயம். அதில் அபத்தப் போக்கும்அராஜகப் போக்கும் இருத்தல் கூடாது. இப்படி எழுதுபவர்களிடம் அறிவின் அழகும் இல்லை;நிதானமுமில்லைஅர்த்தமுமில்லை. வெறுமனே போதைப் பிதற்றல்களுக்கு உள்ளானவர்களாக கணிப்பீடு செய்யப்படுவார்கள்.

நமது பதில்:

யாரால்யாருக்குஎச்சந்தர்ப்பத்தில்சந்தர்ப்பம்தான் கூறி விடுங்களேன்! செயப்பாட்டு விணையில் உங்கள் வசனம் முற்றுப்பெற்றதால்வந்த பொல்லாச் சந்தர்ப்பவாதக் கேள்வியது. உங்கள் கட்டாய வேண்டுகோள் ஏவலாக மாறி எதிர்மறையில் முற்றுப்பெற்று கணிப்பீடில் தொக்குநிற்கிறது. ஏவல்களே விலக்கல்களானால் இங்கு பரிந்துரைகள் எதற்காககவிக்கோவின் வரிகள் அல்ல இவை. கவிசைக்கோ இக்பாலின் சார வரிகள்.

இக்பால் அலியின் வாதம்:

தன் அறிவின் ஆற்றலாலும்பேச்சுத் திறனாலும் தவ்ஹித் வட்டாரத்துக்கு மத்தியிலும் மற்றும் மாற்று சமூகத்தினர் மத்தியிலும் தன் நாமத்தின் அடையாளத்தைப் பதித்திய ஒரு நல்ல மார்க்க அறிஞர் என்ற வகையில் கடைசிக் கால கட்டத்தில் ஆழ-அகலமாக பரந்த மனப் பான்மையுடன் ஒரு குறித்த விடயம் தொடர்பாக மாத்திரம் நின்று கொண்டு விவாதத்தில் ஈடுபடுவது சதா சிறப்பானது.
அதே வேளைமற்றவரைக் குறை கூறிக் கேடு கெட்ட மனிதக் குணமுடையவராக இருப்பதை விடுத்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி மேலும் உங்களது இஸ்லாமியப் பணியை முன்னெடுத்துச் செல்லுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அன்புடன்,
கவிஞர் இக்பால் அலி.


நமது பதில்:

தவ்ஹீத் வட்டாரம் புரிந்திராத புதிரை புரியவைத்த மகா கவி இக்பால் அலியே. நாம அடையாளத்தைத் தேடித்தான் இந்த ஸலபிக் கூட்ட சண்ணியாச முனிகள் தமது கடைசிக் காலத்தில் பீஜேயை வசைபாடுகின்றது. ஆழ-அகலமான பரந்த மனப் பான்மை ஒரு குறித்த விடயத்திலல்லாது விரித்த இடத்திலெல்லாம் பீஜேயிடம் தொன்றுதொட்டுத் தொடருவதுசதா ஊளையிடும் பனங்காட்டு நரிகளுக்கு எங்கே தெரியும்விரக்தியின் விளிம்பில் நின்று குரைக்கும் குறைபாடுகள்தான் மன்னிப்புக் கேட்டுத் திருந்த வேண்டும். 

குறிப்பு 1.– “இக்பால் அலியின் வாதம்” என்ற எனது பதம் ஒற்றைப் படப் புரிதலை வைத்துக் கொண்டு புரியும் சொல்லாடல் அல்ல என்பதைப் பதியவைக்க விரும்புகிறேன். வாதம் என்ற சொல்லுக்கு வாத நோய் என்ற இன்னொரு அர்த்தமும் உண்டு என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு 2 – குர்ஆன் கூறுவதைப் போன்று வீணர்கள் பின்பற்றும் கவிஞனல்ல நான். கவிஞர்களுக்குக் கவிதையாய்ப் பதிலடி கொடுத்த ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தின் வழிமுறையில் வந்த பதிலடியிது.

25.4.11

பிரான்ஸ் ஹிஜாபை தடை செய்யவில்லை.


முஸ்லீம்கள் புரிய வேண்டிய சரியான கோணம்.
கடந்த சில நாட்களாக முஸ்லீம்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்றாக ஹிஜாபும் மாறியிருக்கிறது. பிரான்ஸ் அரசாங்கம் அந்நாட்டுப் பெண்கள் அணியும் ஆடையில் சில வகையான ஆடைகளை தடை செய்ததே இதற்கான காரணமாகும்.

கடந்த ஏப்ரல் 11 திங்கட்கிழமை அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தினால் பிரான்ஸில் சில இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டது.

பெரும்பாலான முஸ்லீம்கள் பிரான்ஸ் அரசு தடை செய்த ஆடை எது அவா்கள் தடை செய்யது மார்க்க அடிப்படையில் நியாமானதா? இல்லையா என்பதை சரியாக அறியாமல் இருக்கிறார்கள். 

இன்னும் சிலரோ பெண்கள் அணியும் ஹிஜாபையே பிரான்ஸ் தடை செய்துவிட்டதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலாவதாக பிரான்ஸ் அரசு எந்த வகையிலான ஆடைகளை பெண்களுக்கு தடை செய்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் மார்க்கத்தின் தெளிவை சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

பிரான் ஹிஜாபை தடை செய்ததா?

பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் அணியும் முகத்திரை பற்றி மாத்திரம் தான் தடை உத்தரவைப் பிரப்பித்துள்ளது. அது தவிர பெண்களின் ஹிஜாபுக்கு முழு உடலையும் மறைப்பதற்கு பிரான்ஸ் தடை விதிக்கவே இல்லை. தடை விதிக்கவும் முடியாது.

எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் பெண்கள் தமது உடலை மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. ஆடைகளைக் குறைக்கவும்உடலை மறைக்கவும் ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு உரிமை உள்ளது. பிரான்ஸிலும் இந்த உரிமை உண்டு. மக்களுக்கு உரிமை வழங்கப்படாத சர்வாதிகார நாடுகளில் தான் இது சாத்தியமாகும்.

முகம் மற்றும் முன் கை தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது.

பெண்கள் முகத்திரை அணிந்து கொண்டு செல்வதையே பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளது. பெண்கள் உடலை மறைப்பதை பிரான்ஸ் தடை செய்யவில்லை.

ஹிஜாபின் வகையும், பிரான்ஸின் தடையும்.


பெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்.

பிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும்,ஷாப்பிங் சென்டர்கள்ஹோட்டல்கள்,பூங்காக்கள்மருத்துவமனைகள்,அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும். இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோபெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால்அவர்களுக்கு 30,000யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
அதே சம‌யம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள்வழிபாட்டு தல‌ங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாம் காண‌ சோதனை செய்யப்படுவார்கள் என்றும்அதிகபட்சமாக‌ நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிரமுகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் பிரான்ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக‌ (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார்.

தடை செய்யப்பட்ட முகத்திரை வடிவங்கள். 

பெண்கள் அணியும் ஹிஜாபில் நான்கு வகையான முறைகள் உலகலவில் பின்பற்றப்படுகின்றன அவை ஹிஜாப், நிகாப், சடோர், புர்கா என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஹிஜாப் : முகத்தை மறைக்காமல் காதுதலைமுடி மற்றும் கழுதை மறைப்பதே  இந்த வகையை சேரும்.இந்த முறை தான் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வழக்கத்தில் உள்ளது.

நிகாப் : உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் மெல்லிய துணியை பயன்படுத்துவதையே நிகாப் என்கின்றனர்.இது அரபு நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியாவில் நடை முறையில் உள்ளது.

சாடோர் : இந்த வகை ஈரான் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.படத்தை பார்த்து இதன் வடிவமைப்பை தெரிந்துக்கொள்ளுங்கள்.

புர்கா : இந்த முழு அளவிலான ஆடை ஆப்கானிஸ்தான் பகுதியிலும் இந்தியாவில் சில பகுதியிலும் அதிகமாக நடைமுறையில் உள்ளது.உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் வலைகளை கொண்டிருக்கும் வகையே புர்கா எனப் படுகிறது


.மேற்கண்ட முறைகளில்நிகாப் மற்றும் புர்கா வகையையே ஃபிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது.முகத்தை மறைத்து தங்களுடைய அடையாளத்தை மறைப்பதினாலேயே இந்த வகை முகத்திரைக்கு பிரான்ஸ் அரசு தடைவிதித்துள்ளது.
தங்கள் முகம் மற்றவர்களுக்கு தெரியாத விதத்தில் முகத்தில் திரையிட்டு மறைப்பதையே பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளதே தவிர முழுமையாக ஹிஜாப் அணிவதையே தடை செய்யவில்லை.

பெண்கள் முகத்திரை அணிவது கட்டாயக் கடமையா?

சில முஸ்லீம்கள் பிரான்ஸ் அரசு பெண்கள் முகத்திரையை போட்டுக்கொள்வதைத் தடை செய்துள்ளதினால் பிரான்சுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதுடன், பிரான்ஸ் அரசு இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதாகவும் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் இஸ்லாம் பெண்கள் தங்கள் உடலை மறைக்க வேண்டும் என்றுதான் கட்டளையிடுகிறதே தவிர எந்த இடத்திலும் பெண்கள் முகத்திரை அணிந்து முகத்தை மறைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.

எந்தப் பெண்ணாவது தனது சுயவிருப்பத்தின் பேரில் முகத்திரை அணிந்தால் அதை இஸ்லாம் தடுக்கவும் இல்லை. ஆனால் முகத்திரையை பெண்கள் அணிவது கட்டாயக் கடமை என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது.

இஸ்லாம் கட்டாயப்படுத்தாத ஒரு ஆடை முறையைத்தான் பிரான்ஸ் அரசும் தடை செய்துள்ளது. தனது தடைக்கான காரணமாக பாதுகாப்புப் பிரச்சினையைத்தான் பிரான்ஸ் முன்வைக்கிறது. முகத்தை மறைப்பதன் மூலம் குறிப்பிட்ட நபர் பெண்ணா அல்லது ஆணா என்று சரியாக அடையாளம் காண முடியாமல் இருப்பதினாலேயே இந்தச் சட்டத்தை பிரான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ற பல நாடுகளிலும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைப்பதை சாட்டாக வைத்துக் கொண்டு பலரும் பல தவறான காரியங்களுக்கும் இந்த முகத்திரையைப் பயண்படுத்துகிறார்கள்.
இஸ்லாம் கட்டாயப்படுத்தாத மக்ககளாக கட்டாயமாக்கிக் கொண்ட இந்தப் பழக்கத்தினால் முஸ்லிம் சமுதாயத்துக்கு அதிகமதிகம் கேடுகள் ஏற்படுவதை பெரு நகரங்களில் வசிப்பவர்கள் அனுபவப்பூர்வமாக உணரலாம்.

பொதுவாக தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற காரணத்துக்காகவே மனிதன் ஒழுக்கமாக வாழ்கிறான். (இறையச்சத்துடன் உள்ளவர்கள் விதிவிலக்கு)

தான் யார் என்று தெரியாவிட்டால் எந்தத் தவறு செய்வதற்கும் அது துணிவை அளித்து விடுகிறது. இது தான் எதார்த்தமான உண்மை. சொந்த ஊரில் நல்லவனாக இருப்பவன் தன்னை யாரும் அறிந்து கொள்ள முடியாத ஊரில் தவறுகள் செய்வதற்கும் அல்லது தவறுகள் செய்வதற்காக வெளியூர் செல்வதற்கும் இதுவே காரணம்.

இந்திய அளவில் சென்னைமும்மைகல்கத்தா போன்ற நகரங்களில்கல்லூரி மாணவிகளில் பலர் முகத்தை மறைத்துக் கொண்டு செய்யும் அநியாயம் கொஞ்சமல்ல.

முஸ்லிமல்லாத பெண்களும் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும் போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். சென்னைகிழக்குக் கடற்கரை போன்ற இடங்களைப் போய் பாத்தால் இப்படி சுற்றும்பலரைக் காணலாம் ஆனால் இப்படி அலையும் இளவட்டங்களில் சரிபாதிப் பேருக்கும் மேல் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.

அது போல் வேசித் தொழில் செய்யும் முஸ்லிமல்லாத பெண்களும் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக முகத்திரை அணிந்து ஆண்களுக்கு வலை வீசுவதை நாம் காணலாம்.

பல சந்தர்பங்களில் விபச்சாரக் குற்றச் சாட்டுக்களில் சிக்கிய சினிமா நடிகைகள் கூட முகத்திரை அணிந்து கொண்டு நீதி மன்றங்களுக்கு வந்த வரலாறுகள் அதிகம்.

சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட முகத்திரை அணிந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதை நாம் காண முடிகிறது.

பிரான்ஸில் வாழும் அணைத்து முஸ்லீம்களும் அரசுக்கு எதிராகப் போராடுகிறார்களா?

பெண்கள் முகத்தை மறைக்கும் நிகாப் மற்றும் புர்கா வகை ஆடைக்கு எதிராக பிரான்ஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தை பிரான்ஸில் வாழும் அனைத்து முஸ்லீம்களும் எதிர்க்கவில்லை.

முகத்தை பெண்கள் கண்டிப்பாக மறைக்க வேண்டும் என்ற தவறான கொள்கை உடைய சிலர் மாத்திரம் தான் இதனை எதிர்க்கிறார்கள் என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும்.

சுருக்கமாக நாம் தெரிய வேண்டியது.

பெண்கள் முகத்தை மறைப்பதென்பது அவர்களுடைய சுயவிருப்பதில் உள்ளதுதானே ஒழிய, மார்க்கம் பெண்கள் முகத்தை மறைத்துத்தான் ஆக வேண்டும் என்று எங்கும் கட்டளை பிறப்பிக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் முகத்தைத் திறந்து கொள்வதற்கு மிகத் தெளிவான அனுமதியை இஸ்லாம் வழங்கியிருக்கும் போது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்குப் பிரச்சினையாக இருக்கிறது என்பதற்காக பெண்கள் முகத்திரை அணிவதை ஒரு நாடு தடை செய்தால் அதை எதிர்ப்பதற்கோ அல்லது குறிப்பிட்ட சட்டம் இஸ்லாத்தையே கொச்சைப்படுத்துகிறது என்று சொல்வதற்கே எந்த முகாந்திரமும் இல்லை.

THANKS TO : www.rasminmisc.tk

15.4.11


இலங்கை மத்ரஸாக்களின் இன்றைய நிலை(?)
RASMIN M.I.Sc

(ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பு மாத இதழில் வெளிவந்த கட்டுரை.)

இஸ்லாமிய மார்க்கத்தை மக்களிடம் எத்தி வைக்க வேண்டும் என்பதற்காக பண்னெடுங் காலமாக நம் மத்தியில் பல அரபிக் கல்லூரிகள் தோற்றம் பெற்று பல்லாயிரக் கணக்கான ஆலிம்களை உருவாக்கியிருக்கிறது, உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கல்லூரிகளின் நிலைமைகள், கொள்கைகளை மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

ஏன் என்றால் இன்று நமக்கு மத்தியில் மார்க்கப் பிரச்சாரத்திற்கு பாடுபடுவதாக பிதற்றிக் கொள்ளும் பல கல்லூரிகள் ஆலிம்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகத் தான் இருக்கின்றன என்பதே உண்மை.

வருடத்திற்கு இத்தனை பேரை உருவாக்கினோம், இந்த வருடம் இத்தனை பேர் பட்டம் பெற்றார்கள், இந்தனை பேர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவானார்கள் என்ற வரி விளப்பரத்திற்காக போராடும் பல கல்லூரிகள் நமக்கு மத்தியில் இருப்பதைப் பார்க்கிறோம். 

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.அல்லாஹ் மிகைத்தவன் மன்னிப்பவன்.(35:28)

அல்லாஹ் உலகில் படைத்தவர்களில் மிகவும் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான் என்று இறைவன் மேற்கண்ட வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.ஆனால் இன்றைய நிலையோ இதற்கு நேர் மாற்றமாக இருப்பதைப் பார்க்கிறோம். 

தங்களை அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் இறையச்சத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்று சந்தேகப்படவேண்டியுள்ளது. தனது இளமைக் கல்வியை சிறந்த முறையில் மார்க்கத்தின் நிழலில்  அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அரபிக் கல்லூரிகளைத் தேடி வரும் சிறார்கள் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றுக் கல்வி புகட்டப்படுகிறார்கள். 

மட்டுமன்றி ஏமாற்றுக் கல்விக்கு வேட்டு வைக்கிறோம் என்று கிளம்மி ஏகத்துவக் கல்லூரிகள் நடத்துவதற்கு தயாரான எத்தனையோ பேர் அவற்றை தமது பிழைப்புக்குறிய வழியாக மாற்றியிருப்பதைக் காண முடிகிறது.

ஏழு வருடங்கள், ஐந்து வருடங்கள் என்று பாடத்திட்டத்தை அமைத்துள்ள எத்தனையோ மத்ரஸாக்கள் தனது கல்லூரி மாணவர்களுக்கு இஸ்லாத்தின் சரியான அடிப்படையைக் சொல்லிக் கொடுப்பதில்லை.

ஷாபி என்றும் ஹனபி என்றும் மத்ஹபுகளுக்கு வக்காளத்து வாங்கும் இவர்கள் மத்ஹபு தொடர்புடைய நூல்களைத் தான் பாடத்திட்டத்தில் கூட சேர்திருப்பார்கள்.இவர்களினால் உருவாக்கப்பட்டு வரும் இந்த மாணவர்களின் எதிர்காலம் என்னவாகிறது? 

மரண வீட்டில் யாசீன் ஓதுவதும், காலத்திற்குக் காலம் மவ்லிது ஓதுவதும் தான் இவர்களின் பிழைப்பாக மாறுகிறது.

தவ்ஹீத் போர்வையில் உருவான அரபிக் கல்லூரிகளின் இன்றைய அவல நிலை (?)

மார்க்கத்தை அதன் தூய வடிவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இலங்கைத் திரு நாட்டில் பல ஏகத்துவக் கல்லூரிகள் கால் பதித்தன. அவற்றில் பல தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன என்பது தனிக்கதை.

சில கல்லூரிகள் இன்றிருந்தாலும் அவற்றின் சமூகப்பணி (?) பெரும் கவலையளிப்பதாகத் தான் இருக்கிறது.

தெளிவான மார்க்க அறிஞர்களாக மாணவர்களை உருவாக்குகிறோமோ இல்லையோ பி.ஏ பட்டதாரிகளாக மாற்றிவிட வேண்டும் என்பதே இந்தக் கல்லூரிகளின் நவீன பாடத்திட்டமாக இருக்கிறது.

பட்டதாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது தான் முழு நேரப்பணியாக மாறி மார்க்கக் கல்வி பகுதி நேரமாக இந்த கல்லூரிகளில் மாறிவிட்டதே கவலையளிக்கிறது.

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.(58:11)

அல்லாஹ்விடத்தில் உயரிய தகுதியை நாம் அடைய வேண்டுமென்றால் அவனை நம்புவதைப் போல் அவனுடைய மார்க்கத்தையும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம் நமக்கு எடுத்தியம்புகிறது.

ஆனால் இந்த மார்க்கக் கல்வியின் தேவை இன்று குழி தோண்டிப் புதைக்கப்படுவதை கண்முன் காணக்கூடியதாக இருக்கிறது.

அரபு நாட்டுப் பணத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட பல கல்லூரிகளை இன்று காணக்கிடைப்பதில்லை.ஒன்றிரண்டு ஆங்காங்கே இருந்தாலும் அவற்றிற்கும் மார்க்கப்பிரச்சாரத்திற்கும், கொள்கை உறுதிக்கும் தொடர்பில்லை.

பரகஹதெனிய அஸ்ஸலபிய்யா, மஹரகம கபூரிய்யா, காலியில் இருக்கும் இப்னு அப்பாஸ், பாலமுனை ஸஹ்வா போன்ற எத்தனையோ அரபிக் கல்லூரிகளை தவ்ஹீத் பேர் தாங்கி கல்லூரிகளாகவே எண்ணத் தோன்றுகிறது.

குர்ஆனையும்,ஹதீஸையும் மாத்திரம் போதிப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலான பாடத்திட்டங்களில் மத்ஹபு நூல்களே குடி கொண்டுள்ளன.

இன்று வரைக்கும் பிக்கு, தப்ஸீர் என்று இவர்கள் எதைப் படித்துக் கொடுத்தாலும் அந்தப் பாடத்திட்டம் மத்ஹபு சார்ந்ததாகத் தான் இருக்கிறது.

பெயருக்கு குர்ஆன், ஹதீஸ் என்று பேனர் போட்டுக் கொள்வதுதான் இவர்களின் வேலையாக இருக்கிறது.

இஸ்லாமிய அகீதாவை சரியாக மக்கள் மத்தியில் எத்தி வைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மத்தியில் உள்ள தொடர்பைப் பார்த்தாலே இந்தக் கல்லூரிகளில் ஏகத்துவத்தின் நிலையை அடையாளம் காண முடியும்.

ஆசிரியர்களைக் கண்டால் ஆறுக்கு மடியும் மாணவர்கள், வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழையும் போது எழுந்து நிற்கப் பழக்கப்பட்டிருப்பதும் இவர்களின் தவ்ஹீதின்(?) உச்ச கட்டம் எனலாம்.

நபியவர்கள் வரும் போதே நபித் தோழர்கள் அமர்ந்த வண்ணம் தான் இருந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன ஆனால் இவர்கள் வரும் போது மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று இந்தக் கல்லூரிகளின் சட்டம் சொல்கிறது.

ஸலபிகள் என்ற பெயரால் மூலைச் சலவை செய்யப்படும் இந்த அப்பாவி மாணவர்கள் இவர்களைப் போலவே குர்ஆன்,ஹதீஸ{டன் மூன்றாவதாக ஸலபிகளையும் ஆதாரங்களாக எடுக்கும் ஆத்மீகக் கொள்கையிலேயே வளர்க்கப்படுகிறார்கள்.

கொள்கையில்லை, கோட்பாடு இல்லை, கொண்ட கொள்கையில் தெளிவில்லை மக்கள் மத்தியில் சத்தியக் கொள்கையை உடைத்துச் சொல்ல தைரியமில்லை ஆனால் இவர்கள் கொள்கை பேசுவதில் வள்ளவர்களாம்.

இந்த தவ்ஹீத் பெயர் தாங்கி கல்லூரிகளின் அதிபர், ஆசான்கள் தங்கள் மத்ரஸா வளாகத்திற்குள் பள்ளியைக் கட்டி வைத்துக் கொண்டு பித்அத் வாதியின் பள்ளிக்கு ஜும்மாவிற்கு தாங்களும் சென்று தங்கள் மாணவர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். தங்கள் மத்ரஸாவில் இருக்கும் பள்ளியில் ஒரு ஜும்ஆ நடத்துவதற்கு இவர்களுக்கு திராணியில்லாமல் போய்விட்டது தான் கவலை.

என்று நீங்குமோ இந்த அவல நிலை.

நாம் அறிந்தவரை காலி இப்னு அப்பாஸ் போன்ற மத்ரஸாக்களில் இன்னும் மத்ரஸா வளாகத்தில் ஜும்மா தொழுகை கிடையாது. மார்க்கத்திற்கு முரனான, பித்அத் நடக்கும் பள்ளியில் தான் இது வரைக்கும் அவர்கள் ஜும்மா தொழுகிறார்கள் என்பதே உண்மை.

தவ்ஹீத் வாதிகளாக தம்மை காட்டிக்கொள்ள முயலும் இந்த மத்ரஸாவின் ஆசிரியர் குழாமும், நிர்வாகமும் உண்மையில் ஜமாத்தே இஸ்லாமியை ஆதரிக்கும் போலி தவ்ஹீத் வாதிகள் என்பதே உண்மை.

தங்கள் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களுக்கு விஷேட அதிதிகளாக ஜமாத்தே இஸ்லாமியின் அமீரை அழைத்து விருந்து வைப்பதும், தங்கள் இணையதளங்களில் அவர்களின் ஆசிச் செய்திகளை வெளியிடுவதும், அவர்களின் கல்லூரிகளில் இவர்களும் சென்று பகுதி நேர பாடம் நடத்துவதும் தற்போது வழமையாகிவிட்ட கதைதான்.

தங்கள் பிழைப்புக்காக ஒரு காலத்தில் கத்தம், பாத்திஹா ஓதிய மவ்லவிமார்களைப் பார்த்தோம்.

தங்கள் பிழைப்பிற்காக கொண்ட கொள்கையையே அடகு வைப்பவர்களை தற்காலத்தில் பார்க்கிறோம். இவர்களின் இந்த செயல்பாட்டால் மீண்டும் மத்ஹபு கொள்கைக்கு வக்காலத்து வாங்கும் மவ்லவிமார்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்களே தவிர குர்ஆன் சுன்னாவை பேசுபவர்கள் களத்தில் இருப்பது அரிதாகவே உள்ளது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் தொடரும்…… 

11.4.11


இவர் தான் இஸ்லாமிய அறிஞராம் (?) 
ஜமாத்தே இஸ்லாமி சகோதரர்களே சிந்தியுங்கள்.
RASMIN M.I.Sc

அன்பின் சகோதரர்களே ! இஸ்லாமிய உலகின் தலை சிறந்த அறிஞர் என்று ஜமாத்தே இஸ்லாமியைச் சேர்ந்த பிரச்சாரகர்கள் அடிக்கடி மார் தட்டிக் கொள்ளும் ஒருவர் தான் யுசுப் அல் கா்ளாவி என்பவர்.

மார்க்கத்திற்கு விரோதமான பல கருத்துக்களை கூறி மக்களை வழி கெடுத்துவரும் குறிப்பிட்ட பிரச்சாரகரை அறிஞர் அல்லாமா என்றெல்லாம் மக்கள் மத்தியில் கதையளக்கும் ஜ.இஸ்லாமியினர் தங்கள் சிந்தனையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கüன் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள். 

இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக்கொண்டாரோ அவரிடம் "உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்'' என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை.

பெண்களிடம், "நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்'' என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை. (புகாரி - 4891)



மேற்கண்ட நபி மொழி நமக்குச் சொல்வது என்ன? நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் பெண்களிடம் பைஅத் (உறுதிப் பிரமானம்) எடுக்கும் போது கூட நபியின் கை அண்ணியப் பெண்ணின் கையில் கூடப் பட்டதில்லை.

ஆனால் இந்த அறிஞரோ(?) சர்வ சாதாரணமாக இன்னொரு பெண்ணின் கையைப் பிடித்து கைகுழுக்குகிறார்.

இதை நாம் சுட்டிக் காட்டும் போது இவரின் பக்தர்களுக்கு கோபம் தலைக்கு மேல் வருகிறது.

இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் அமீர்(?) என்று அழைக்கப்படுபவர் அந்த அமைப்பின் அதிகாரப்புர்வ இதழின் ஏப்ரல் மாத வெளியீட்டில் யுசுப் அல்கா்ளாவி ஒரு சிறந்த அறிஞர் அவரை மதிக்காமல் பேசுகிறார்கள் என்று தனது உளக் குமுரளை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதான் அறிஞரின் சிறப்போ, இதைச் செய்யத்தான் தாங்களும் அவருக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறீர்களோ?

உங்கள் முகத்திரை தொடர்ந்தும் கிழிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

செய்திகள்