26.4.12

ஒரு கிறுக்கனின் கிறுக்கல்

அபூ கப்பாப்

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி என்பவர் பலவேசத்தில் முஜ்தஹிதுகள் பற்றி ஒரு கட்டுரை என்று உளறிக் கொட்டியிருந்தார். பண்பற்ற பலவேசத்தினரும் பகுத்தறிவின்றி அதைப் பதிவேற்றியிருந்தனர். அனைத்து சாக்கடைகளின் களஞ்சியமாகப் பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம்டொட்கொம் எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனியின் இந்த உளரலையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது.
மூளையற்ற மூர்க்கத்தனம்தான் மார்க்கம் என்று நினைக்கும் உளரல் உளநோயாளிகளுக்கு மறுப்பளிக்க முன்னர் இஜ்திஹாத் பற்றி வாய்திறக்கவாவது இவர்களுக்கு நாதியிருக்கிறதா? என்பதை முதலில் பார்த்துவிட்டு இவர் என்ன உளரியுள்ளார் என்பதை நோக்குவோம்.
“அவ்விரண்டிலும் காணப்படாத அம்சங்களுக்கான தீரர்வை அவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட பெரும்பாண்மை அறிஞர்களின் அங்கீககாரத்தைப் பெற்ற இஜ்மாவின் அடிப்படையிலும், கியாஸ் என்ற அணுமான விளக்கத்தின் அடிப்படையிலும் தமது கவனத்தைத் திருப்பினர். அவ்விரண்டையும் துணை மூலாதாரங்கள் என்று பிற்காலத்தில் அழைத்தனர்.”என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அசத்திய மூலாதாரங்களின் அடி அசைந்து போனது

தவ்ஹீத் கொள்கையை எதிர்ப்போரிடம் தஃவாவை முன்வைக்கும் மிகச் சிறந்த ஊடகமான விவாதக்களம், தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை வரலாற்று மாணவர்கள் நன்கு அறிவர். அந்தவகையில், இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற கருப்பொருளில் 2012 ஏப்ரல் சனி 21 ஞயிறு 22 ஆகிய இரண்டு தினங்களில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் நடந்த இந்த விவாதமும் இலங்கை தஃவா வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.

தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து SLTJயின் மாபெரும் கண்டன ஆர்ப்பாரட்டம்


தம்புள்ள அல் ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து நாடு தழுவிய ஓர் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.


கோரிக்கைகள்

  • தம்புள்ள அல் ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

  • எக்காரணம் கொண்டும் பள்ளிவாசல் இடம் மாற்றம் செய்யப்படக் கூடாது.

காலம்:

27.04.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் (2.00 மணி முதல் 4.00மணி வரை)

இடம்:

மாலிகாவத்தையில் அமைந்துள்ள SLTJ தலைமையகத்திற்கு முன்னிருந்து கொழும்பு கோட்டை வரை பேரணி தொடரும்.

அல்லாஹ்வின் ஆலயத்தை மீட்க (ஆண்கள் பெண்கள் உட்பட)அனைத்து முஸ்லிம்களையும் அணிதிரளுமாறு அழைக்கிறது

குறிப்பு:

இப்போராட்டம் அத்து மீறி செயல்பட்ட கடும்போக்கு சிங்களவர்களுக்கு எதிராகவே நடத்தப்படுகிறது. அனைத்து சிங்களவர்களுக்கும் எதிராக அல்ல. மற்றும் இப்போராட்டம் மிகவும் அமைதியான முறையயில் நடத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)

தொடர்புக்கு: 0112677974, 0774781471, 0774781473,

19.4.12

ஹெம்மாதகமை விவாதம் நேரடி ஒளிபரப்பு

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் என்ன?

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் திருக்குர்ஆனும் நபிவழியும் மட்டுமா? அல்லது இத்துடன் இஜ்மா கியாசும் சேர்த்து நான்கு மூலாதாரங்களா?
இந்தத் தலைப்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் தப்லீக் சார்பு உலமாக்களுக்கும் மத்தியில் நேரடி விவாதம் நடக்க உள்ளது. இன்ஷா அல்லாஹ்
நாள் : 21-4-2012, 22-4-2012 சனி ஞாயிறு இரண்டு நாட்கள்
நேரம் : காலை 9 முதல் இரவு 9 மணிவரை
இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விவாதம் onlinepj.com, sltjweb.com ஆகிய இணையத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்

இலங்கை முஸ்லிம்கள் கொல்லப்பட அவர்களின் துரோகம் காரணமா ?

இலங்கை முஸ்லிம்கள்,  கூடவே இருந்து தமிழர்களுக்கு துரோகம் செய்ததினால்தான் பிரபாகரன் அவர்களைக் கொன்றான். இலங்கை முஸ்லிம்கள் தமிழ் ஈழம் அமையக் கூடாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார்கள்.

ஸ்ரீலங்கன் ஹோம் கார்ட் (srilankan home guard)  என்ற ஒன்றில் சேர்ந்தார்கள் (தமிழர்களுக்கு எதிராக...)
அதனால் தான் பிராபகரன் அவர்களைக் கொன்றான்; முஸ்லிம் விரோதப் போக்கு என்பதற்காக அல்லஎன்று எனது மாற்று மத நண்பர் கூறுகிறார். விளக்கம் தேவை. 
பி.ஏ.ஜாஹிர் அஹமது 
பதில்
மேற்கண்டவாறு சொல்லப்படும் செய்தி முஸ்லிம்களையும் நடுநிலையாளர்களையும் ஏமாற்றுவதற்காக புலி பயங்ரவாத அமைப்பினர் அவிழ்த்து விடும் பொய் மூட்டைகளில் ஒன்றாகும். 
இவர்கள் கூறுவது போல் தனி ஈழம் தேவை இல்லை என்று முஸ்லிம்கள் சொன்னதால் ஒரு சமுதாயத்தைக் கொன்று குவிக்கலாம் என்றால் அதே நியாயம் மற்றவர்களுக்கும் இருக்க வேண்டுமல்லவா?

இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை பீஜே பிரித்தாரா?

எம்.எம்.முர்ஷித்
 www.onlinepj.com வில் வெளியிடப்பட்ட இக்கட்டுரையை இங்கு மீள் இடுகையிடுகின்றோம்.
‘இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஒன்றாக இருந்தது. அதை பீஜே வந்து பிரித்து விட்டார் என்று இஸ்மாயீல் ஸலஃபி எழுதி இருந்தார். இலங்கை தவ்ஹீத் இயக்கங்கள் பற்றிய முழு விபரம் என்னிடம் இல்லாததால் நான் அதற்கு பதில் எழுதவில்லை. நான் இலங்கை செல்வதற்கு முன் அவர்கள் எத்தனை பிரிவுகளாக இருந்தனர் என்பதை இலங்கை முர்ஷித் அவர்கள் எழுதி அனுப்பியுள்ளார். அதை நன்றியுடன் இங்கே வெளியிடுகிறோம்.’
கொழும்புத் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கிய அமைப்பு 2005ல் பீஜேவுடைய இலங்கை வருகையோடு, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த உண்மைகைள் தெரியாத சிலர், அல்லது தெரிந்து கொண்டே பீஜே மீது சேறு பூச நினைப்பவர்கள், வரலாற்றை இருட்டடிப்புச் செய்து எழுதியும் பேசியும் வருகின்றனர். எனவே, இலங்கையில் தவ்ஹீத் சகோதரர்களுக்கு மத்தியில் பிரிவினைக்கு யார் காரணம் என்பதை வரலாற்று நிகழ்வுகளோடு இக்கட்டுரையில் தெளிவுபடுத்துகின்றோம்.

தப்லீக் ஜமாஅத்துடன் ஒரு விவாதம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஹெம்மாதகமை இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்க(தப்லீக் ஜமாஅத்)த்திற்கும் இடையிலான 
பகிரங்க விவாதம்.
விவாத நாள்:  
ஏப்ரல் 21,22 (சனி, ஞாயிறு)
விவாத தலைப்பு:
“இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் எவை?”

பொலணறுவையில் புதிய அவ்லியா ஹான் ஷாஹிபு வலியுல்லாஹ் நாயகம்

மரணித்தவர்களை வணங்கும் போலி முஸ்லிம்கள்
"பொலணறுவை, வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவசேனபுர, கட்டுவம்பில எனும் பகுதியில் இருந்து சுமார் 06km தூரத்தில் வனாந்தர பகுதியில் பல தசாப்தங்களுக்கு முன் அடங்கப்பட்ட ஹான் ஷாஹிபு வலியுல்லாஹ் நாயகம் என்ற புதிய அவ்லியாவின் கப்று உள்ளது. அதில் சென்ற வெள்ளிக்கிழமை (23.03.2012)அன்று கொடியேற்ற விழா நடைபெற்றது".
கப்ரை வணங்கும் ஒருவரை படத்தில் காணலாம்

இது பேஸ்புக்கிலிருந்து பெறப்பட்ட தகவல்

அன்பு வாசகர்களே!
ஆதாரமில்லாமல் மகான்கள் என்று நம்பப்படும் மையித்துகளிடம் பிரார்த்தணை செய்யக் கூடாது அவர்களுக்கு ஸஜ்தா செய்யக் கூடாது என்று ஆதாரங்களின் அடிப்படையில் நாம் கூறி வருகிறோம். அல்லாஹ்வின் அருளால் மக்கள் இன்று விழிப்படைந்து விட்டனர். மக்கள் தெளிவாக இருந்தாலும் மார்க்க அறிஞர்கள் போர்வையில் நடமாடுவோர் மூடத்தனமான வாதங்களை எடுத்து வைத்து செத்தவர்களைக் கடவுளாக்க முயற்சித்து வருகின்றனர். அது போன்ற ஒரு முயற்சியே இதுவும்.

செய்திகள்