RASMIN M.I.Sc
இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை போன்ற சில நாடுகளில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதாக சொல்லிக் கொள்ளும் ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பினரைப் பற்றி அடிக்கடி நாம் மக்களுக்கு அடையாளம் காட்டி வருகிறோம்.
இலங்கையில் ஷீயாக்கள் தலையீடு தொடர்பான நமது தொடரில் இவர்கள் பற்றி ஆதாரத்துடன் தெளிவாக விளக்கப்படும்.(இன்ஷா அல்லாஹ்)அதற்கு முன் இந்தத் தொடரில் இவர்கள் பற்றிய சில செய்திகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முற்படுகிறோம்.
அதாவது இலங்கையில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதாக சொல்லிக் கொண்டு ஒற்றுமைக் கோஷம் போடும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பினர் பொதுமக்களுக்கு மத்தியில் தங்களை படித்தவர்களாகவும்,அறிவு ஜீவிகளாகவும் காட்டிக் கொண்டு உள்ரங்கத்தில் தங்களின் தாய்க் கழகமான ஷீயாக்களுக்காக கல்லப் பிரச்சாரம் செய்வதை நாம் தெளிவாக அறிய முடிகிறது.
தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு!
தமிழைத் தாய் மொழியாக கொண்டுள்ள சகோதரர்கள் இவர்களைப் பற்றி மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது குர்ஆனை மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்வதாகவும்,நபியவர்களின் வழிமுறைகளை எடுத்து சொல்வதாகவும் தங்களை மார்தட்டிக் கொள்ளும் இந்த நவீன ஷீயாக்கள் தங்களின் இருட்டுப் பத்திரிக்கையான அல்ஹஸனாத் என்ற அஸ்ஸையிஆத்தில் ஷீயாக்களின் கருத்துக்களை தங்கள் ஜமாத்தின் இஸ்லாமிய(?)கருத்துக்களாக பரப்புவதின் மூலம் ஷீயாக்களிடம் தங்கள் இமேஜை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார்கள்.
தமிழகத்தில் அப்துல்லாஹ் ஜமாலி என்ற ஒரு ஷீயா தனது கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டதும்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினால் அவனது கொள்கைகள் உடைத்து நொருக்கப்பட்டதும் நாம் அனைவரும் அறிந்ததே!
அந்த ஜமாலி என்ற ஷீயாவின் கொள்கையை அப்படியே அப்பட்டமாக தங்கள் கருத்தாக ஏற்றுக் கொண்டு குர்ஆனின் அனைத்துப் பகுதியும் நமக்கு விளங்காது,சில பகுதிகள் விளங்கும் இன்னும் சில பகுதிகள் விளங்காது என்று தங்கள் பத்திரிக்கையில் எழுதுகிறார்கள்.
குர்ஆன் விளங்காதா?
திருக்குர்ஆன் அனைத்து மக்களுக்கும் தெளிவாக விளங்கக் கூடிய ஒரு வேதம்.ஆனால் குர்ஆனில் சில பகுதிகள் தான் நம்மால் புரிந்துகொள்ள முடியும்,மற்ற பகுதிகள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் புரிய முடியும் என்று இந்த நவீன ஷீயா ஜமாத்தினர் தங்கள் பத்திரிக்கையின் டிசம்பர் மாத இதழில் எழுதியுள்ளார்கள்.
அவர்கள் எழுதியது மாத்திரமின்றி குர்ஆனின் அனைத்துப் பகுதியும் விளங்கக் கூடியதுதான் என்று ஆதாரத்துடன் விளக்கும் சகோதரர் பி.ஜெ அவர்களின் குர்ஆனின் மொழியாக்கத்தினை விமர்சித்துள்ளதுடன் அவர் ஒரு குழப்பவாதி என்றும் தங்கள் இருட்டுப் பத்திரிக்கையில் எழுதியுள்ளார்கள்.
குர்ஆன்,சுன்னாவுக்கு தங்கள் இஷ்டத்திற்கு விளக்கம் என்ற பெயரில் உளரும் இந்த கூட்டம் ஈரானிய ஷீயா அரசாங்கத்தின் மகுடிகளாக இருப்பது அவர்களை நம்பியிருக்கும் அப்பாவி சகோதரர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்களாம்.ஏகத்துவவாதிகளுக்கு அது இருண்ட கண்டமல்ல என்பதை அவர்கள் மனதில் ஆழமாக பதித்துக் கொள்ள வேண்டும்.
இதுதான் அவர்கள் வெளியிட்டுள்ள ஆக்கம் இதில் கோடு போட்டுக் காண்பிக்கப் பட்டுள்ள பகுதியை உற்று கவணிக்கவும்.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியிற்கு SLTJ யின் பகிரங்க விவாத அழைப்பு.
ஜமாஅதே இஸ்லாமியின் உத்தியோக பூர்வ வெளியீடான அல்ஹஸனாத் மாத இதழின் டிசம்பர் - 2010 இதழில் “தப்ஸீர் கலை” என்ற தலைப்பில் அஷ்ஷேக் பஸ்லுர்ரஹமான் (நளீமி) அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையில் அறிஞர் பீ.ஜே அவர்களின் முதஷாபிஹாத் குறித்த விளக்கத்தை விமர்சித்துள்ளதோடு அவர் குழப்பவாதி என்றும் எழுதியுள்ளார்.
திறை மறைவில் இருந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் இவர் போன்ற நளீமிக்களுக்கும் அவர்களின் கருத்துக்களை பிரசுரிககும் அல்ஹஸனாத் போன்ற இதழ்களுக்கும் நாம் பகிரங்க விவாத அழைப்பை விடுகிறோம்.
முதஷாபிஹாதான வசனங்களை அறிவில் ஞானமுல்லவர்களால் விளங்க முடியுமா? முடியாதா? என்ற தலைப்பில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக விவாதிக்க வருமாறு ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாமிக்கு அன்புடன் வேண்டுகோள் விடுகிறோம்.
இவ்வாறு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தனது விவாத அழைப்பை இதன் மூலம் விடுக்கிறது.
இவர்கள் சொல்லும் கருத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதனை ஒரு பகிரங்க விவாத மேடையில் நிரூபிக்கத் தயாரா?