(பாபர் மஸ்ஜித் இடிப்பு காட்சி – ஜனவரி 27 விளம்பர வீடியோ)
சொத்துரிமைக்கும், மத உரிமைக்கும் விரோதமாக அமைந்த தீர்ப்பு உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றமும் நியாயப் படுத்தப்பட்டு விட்டது. ஆரம்பம் முதலே அங்கே கோவில்தான் இருந்தது என்ற தவறான தீர்ப்பின் மூலம் பாபர் பள்ளிவாசலை யாரும் இடிக்கவில்லை என்ற தவறான நிலையை ஏற்படுத்தி விட்டது.
நீதிமன்றங்கள் மீது நாம் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை கேள்விக்குறியாகி விட்டது. எனவே இனி நீதிமன்றங்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம்தான் எதிர் காலத்தில் முஸ்லிம்களின் உரிமையைக் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டு விட்டனர். நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு உட்பட்டவை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.
இந்திய வரலாற்றில் பல கருப்புப் பக்கங்களை உருவாக்கிய காவிக் கும்பலுக்கு எதிராகவும் நீதி வழங்குவதில் தவறிய நீதிபதிகளைத் துணிவுடன் கண்டிக்கவும், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தானாக மறு விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தியும், எந்தப் பள்ளிவாசல் பிரச்சினையையும் நீதி மன்றத்துக்குக் கொண்டு செல்ல பயப்படும் நிலைமை இனியும் நீதிமன்றங்களால் ஏற்படக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்தவும், இருக்கின்ற பள்ளிவாசல்கள் இதுபோன்று நீதித்துறையால் பறிக்கப்படாமல் இருக்கவும் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27ம் தேதி சென்னை மற்றும் மதுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் போராட்டக் களத்திற்கு நாம் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு நமது கண்டனக் கணைகளை பதிவு செய்யப் புரப்படத் தயாராகுவோம்.
சகோதரர்களே !
ஜமாத் பிரமுகர்களே !
இளைஞர்களே !
கல்விமான்களே !
அறிஞர்களே !
நமது பிறப்பு சம்பவமாக இருக்களாம் ஆனால் இறப்போ சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சரித்திரம் படைக்க சங்கமிப்போம் போராட்டக் களத்தில்.
Thanks to: www.rasminmisc.tk