18.1.11

கொள்கையில் தடம்புரண்ட இலங்கை ஏகத்துவ வாதிகள் -௦௨
சப்வான்  தவ்ஹீதி
அன்பின் இஸ்லாமிய நேயர்களே, சென்ற தொடரில் இலங்கையில் ஏகத்துவம் பேசியவர்கள் எப்படி தடம்புரண்டார்கள் என்பதை சுருக்கமாகப் பார்த்தோம். இந்த தொடரில் அந்த தௌஹீத் போர்வை போர்த்திய தௌஹீத் அல்லாதவர்களில் சிலர் விவாதத்தில் பின்தங்கி ஓடிய ஓடியோ ரெக்கோர்ட் ஐ இணைக்கவுள்ளோம்.

குர்ஆனும் ஆதபூர்வமான  ஹதீஸும் மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் என்ற கொள்கையில் தமிழ் நாடு தௌஹீத்  ஜமாஅத்தும் உலகளாவிய ரீதியில் இருக்கும் அதன் கிளைகளும் உறுதியாக உள்ளனர். ஆனால் கொள்கையில் பேரம் பேசும் போலி   தௌஹீத் வாதிகளோ பல சந்தர்பங்களில் இதில் மாறுபட்டு நிற்கின்றனர். குர்'ஆனும் ஹதீஸும் தான் இஸ்லாத்தின் மூலாதாரம் என்பார்கள் தேவை படும் போது சஹாபாக்களின் சொந்தக் கருத்துகளும் மார்க்கம் தான் என்பார்கள். குர்'ஆனும் ஹதீஸும் தான் இஸ்லாத்தின் மூலாதாரம் என்பார்கள், தம் வாதங்களை நிரூபிக்க சலபுகளின் கருத்துக்களையும் எடுத்துக் கொள்வார்கள். இவற்றுக்கெல்லாம் நிறைய ஆதாரங்களை இன்ஷா'அல்லாஹ் அடுத்த தொடர்களில் எடுத்துக் காட்டவுள்ளோம்.
      ஆரம்ப காலங்களில் இலங்கயில் ஏகத்துவத்துக்கு முரணாக செயல்பட்டவர்களை எல்லாம் பகிரங்க மேடை பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் விவாத அழைப்புகளை தொடுத்தவர்கள் இப்போது தங்களையே முஷ்ரிக் என்று திட்டவட்டமாக சுட்டிக் காட்டியும் விவாதம் என்ற பேச்சுக்கே இடம் வைக்காமல் பின்தங்குவது தான் நம்மை அதிர்ச்சியில்லூட்டும் காரியமாகும். அசத்தியத்தின்  தூனாக நிற்பவர்களே இன்றைக்கு விவாதம் தான் கொள்கையை நிரூபிக்க சிறந்த களம் என்று துணிச்சலாக முன்வரும் இக்கால கட்டத்தில் ஏன் தானோ! இந்த மாமேதைகளுக்கு(?) விவாதம் என்றாலே அலர்ஜியாக உள்ளது. எதாவது பொருந்தாத ஒரு காரணத்தை சொல்லி நழுவுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் இவர்கள் விவாதற்கு பிந்தங்குவதன்  மூலம் இவர்களின் கருத்துக்களை நிரூபிக்க இவர்கள் தயாரில்லை என்பதையும்  தாம் கொண்ட கொள்கையில் தாமே உறுதியில்லை என்பதையும் மக்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
       நமது ஜமா'அத் TNTJ இலங்கை கிளை என்ற பெயரில் செயல்படும் போது ஜமா'அத்

சார்பாக இலங்கையை சேர்ந்த மாற்றுக் கருத்துடைய நம் நாட்டில் பிரபல்யமான சில ஆலிம்(?)களுக்கு நேரடியாகவும் கடிதம் மூலமும்  தொலைபேசியிலும்  நம்மோடு முரண்பட்டுள்ள கருத்துக்களில் விவாதித்து அல்லது கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவோம் என்று விவாத அழைப்புகளை கொடுத்தோம். இது வரைக்கும் எவருமே விவாதத்துக்கு முன்வரவில்லை.
 து பற்றிய மேலதிக தகவல்களுக்கும் விவாதத்தில் பின்தங்கியவர்களின் நேரடி வார்த்தைகளை கேற்கவும் இங்கே கிளிக் பண்ணவும்.
இஸ்லாத்தை  தெளிவாக அறிந்து அதனை சரியாக பின்பற்றி, பிரச்சாரம் செய்து மறுமையில் வெற்றி பெற முயற்சிப்போமாக.

செய்திகள்