18.1.11

 கொள்கையில் தடம்புரண்ட இலங்கை ஏகத்துவ வாதிகள் -01

சப்வான் தவ்ஹீதி 

அன்பின் .இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, கிட்டத்தட்ட 50  ஆண்டுகளுக்கு முன்னாள் இலங்கையில் ஏகத்துவப் பிரச்சாரம் ஆரம்பிக்கப் பட்டது. அன்றைய காலகட்டங்களில் நம் கொள்கை வாதிகள் கொள்கை உறுதியிலும் வீரியமாகவும் பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்தவர்களாக பிரச்சாரத்தை தொடர்ந்தனர். இலங்கையின் பல பிரதேசங்களிலும் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பிரச்சம் மேற்கொள்ளபட்டு அல்லாஹ்வின் அருளால் அதில் பாரிய வெற்றியும் கிடைத்தது.

இப்படியே பிரச்சாரம் தொடர அல்லாஹ்வுக்காக மார்க்கத்தை பிரச்சாரம் செய்த நம் ஆலிம்கள் தம் சொந்த வாழ்க்கை குறித்து சிந்திக்கலானார்கள். கொள்கையை பிரச்சாரமும் செய்ய வேண்டும், சொந்த வாழ்க்கையையும் பார்க்க வேண்டும் என்று சிந்தித்தார்கள். பிறகு சிலரின் ஆலோசனைகளின் படி அல்லது வேண்டுகோளின் படி வெளிநாடுகளின் உதவியை நாடினார்கள்.கொள்கைக்காக என்ன உதவியை வேண்டுமானாலும் செய்வோம் என்ற அரபியர்களின் பணத்தை தஹ்வாவிற்கு பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதனாலே பிரச்சாரகர்களின் சம்பளங்களையும் எடுத்துக் கொண்டார்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால் வெளிநாட்டுப் பணத்துக்கு அடிமையகிவிட்டர்கள்.

 ஆரம்பத்தில் கொள்கையில் இருந்த உறுதியும் பிரச்சாரத்தில் காட்டிய வீரியமும் குபடிப்படியாக குறையத் தொடங்கியது. கொள்கையை அரேபியர் பணத்தில் அடகு வைத்தர்கர்கள். குர்'ஆனும் சஹீஹான ஹதீஸும் தான் இஸ்லாத்தின் மூலாதாரம் என்ற நிலைப் பாட்டை மாற்றி மூன்றாவது ஒரு நிலைப்பாடாக சலபு (சஹாபாக்கள்,தாபியீன்கள்,தப'உத் தாபிஈன்களை பின்பற்றுதல்) என்பதையும் பெரும்பான்மையான ஆலிம்கள் எடுத்துக் கொண்டு அதற்கு வேறுவிதமான வியாக்கியானங்களும் சொல்லத் தொடங்கி விட்டனர்.

இலங்கையில் தற்போதைக்குள்ள தௌஹீத் பேசும் இயக்கங்களில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் உட்பட ஓரிரு அமைப்புகள் தான் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் குர்'ஆனும் ஹதீஸும் மட்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டவர்களாக உள்ளனர்.
எப்படி இவர்கள் தடம்புரண்டு போனார்கள் என்பதற்கான அடுக்கடுக்கான தகவல்களையும் இத்தோடு இணைக்கவுள்ளோம்.


ஏன் இவர்களின் தகவல்களை மக்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்ற ஒரு கேள்வி நம் கொள்கை வாதிகள் மத்தியிலே எழுந்துள்ளது. ஆனால் இவர்கள் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்பாக செய்யும் மோசமொசடிகளையும் கொள்கையில் இவர்களின் இரட்டை வேசத்தையும் தெரிந்தவர்கள் அது தப்பு என்று ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சிலர் அவர்களின் பிழையான போக்குகளுக்கு பின்னாலும் அவர்களையே தங்கள் இமாம்களாக கொண்டுள்ளார்கள். சிலர் இதுபற்றி இன்னும் அறியாமலேயே இதுபோன்றவர்களை நம்பி தங்கள் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பலவேசமுடையோரை மக்களுக்கு அறிமுகப் படுத்தி உண்மையான ஏகத்துவதிகள் யார் என்பதை காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம். இறைவன் தன் திரு மரையிலே சொல்கிறான் "சத்தியம் வந்து விட்டது. அசத்தியம் அழிந்து விட்டது. திண்ணமாக அசத்தியம் அழிந்தே தீரும்." (அல் குர்ஆன் 17 :81 )
சத்தியம் பலவளியாக இருக்காது. இரண்டில் ஒன்று சத்தியம் என்றால் மற்றது அசாத்தியமே. இதை பிரித்துக் காட்டுவது கொள்கையின் தனித்துவத்தை பாதுகாக்கும் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

சூனியம் என்ற மூடநம்பிக்கையை உண்மைப் படுத்த முயலும் ஏகத்துவா (ஷிர்க்) வாதிகளின் வாதத்திற்கான பதில் 

சகோதரர் பீஜேயின் கட்டுரையை படிக்க இங்கே கிளிக் பண்ணவும்.
இது இஸ்மாயில் சலபியின் ஆய்வு?க்கான மறுப்பு என்றாலும் இலங்கையில் சூனியம் பற்றிய இஸ்லாத்தின்       
நிலை பாட்டை தப்பாகப் புரிந்து பிரச்சாரம் செய்யும் எல்லா முஷ்ரிக் களுக்கும் பொருத்தமானதாகும்.
தாங்கள் கொண்டுள்ள கொள்கை தவறு என்பதை நிரூபிக்கத் தயார்  என்று பகிரங்க விவாத அழைப்புகள் கொடுக்கப்பட்ட போது பின்தங்கி ஓடியவர்கள்.

இலங்கையில் தௌஹீத் பேசும் ஏராளமான சகோதரர்கள் கதீஸ் கலையில் போதிய ஆய்வற்றவர்களாகவும் இஸ்லாத்தில் மூன்றாம் நிலைப்பாடாக சஹாபாக்களையும் எடுத்தவர்களாக உள்ளனர். ஆனால் இவர்களில் யாருமே தாம் கொண்ட கொள்கையை நிரூபிக்கக் கூட தகுதியற்றவர்களாகத தான் இருக்கிறார்கள்.
இவர்த்களை பல சந்தர்பங்களில் இவர்களுக்கு விவாத அழைப்புகள் கொடுக்கப் பட்டும் பலவிதமான சாட்டுப் போக்குகள் கூறி சந்தர்ப்பங்களை தட்டிக் களித்தனர்.
இன்ஷா அல்லாஹ் ஓட்டம் பிடித்தவர்களின் ஆடியோ ரெக்கோட் ஐ மிக விரைவில் இக்கட்டுரையில் இணைக்கவுள்ளோம்.
அத்தோடு அரபியர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் போலி தௌஹீத் வாதிகளின் நிதி மோசடிகளைப் பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

ஆய்வு என்ற பெயரில் அரபியர்களை மிஞ்சாமலும் மக்களின் மனம் நோகமலும் சொன்ன கருத்தை மாற்றக் கூடாது என்ற நிலையில் ஏகத்துவத்தை பிரச்சாரம் செய்யும் தௌஹீத்(?) பெயர் தாங்கிகளே!
ஒருகணம் இஸ்லாத்தை சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்குத் தான் ஹதீஸ் களை தெரியும் என்று மார்தட்டிக் கொள்ளாமல் குர்'ஆன் மற்றும் சஹீஹான ஹதீசுக்குக் கீழால் நின்று உங்கள் மறு ஆய்வை ஆரம்பியுங்கள்.

செய்திகள்