3.3.11

முறையற்ற விவாத ஒப்பந்தங்களும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த முனையும் அசத்திய வாதிகளும்


இஸ்லாம் மார்க்கம் என்றால் ஆலிம்கள் சொல்வதை கேட்டு  செயல் படுவது தான் என்றும் அவர்களுக்கு பிழையே ஏற்படாது, அவர்களிடம் நாம் கேள்வி கேட்டு தெரிய எதுவுமில்லை என்று மடமையில் நம் சமுதாயம் இருந்த காலம் போய் இஸ்லாத்தின் அடிப்படையையே தப்பும் தவறுமாக விளங்கி வைத்திருப்பவர்கள் கூட நாம் குர்ஆனை படிக்க வேண்டும் ஹதீஸை விளங்க வேண்டுமென்று சொல்கிறார்கள் என்றால் அது ஏகத்துவ பிரச்சாரத்துக்கு அல்லாஹ் வழங்கிய வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். 

மடமையே குடி கொண்டிருந்த காலம்  போய் நாமும் சிந்திப்போம் என்று வெளிச்சத்துக்கு வந்திருக்கும் மக்கள் மூலம் தான் பெரும் பாலும் விவாதங்கள் அரங்கேறுகின்றன.

விவாதங்களின் நோக்கம்
ஒவ்வொரு கொள்கையை  சார்ந்தவேர்களிலும், தான் சொல்வது தான் சரியென்று சொல்லிக் கொண்டு அவருக்கென்று ஒரு கூட்டத்தை வைத்து தான் அறிவாளி என்று கூறித் திரியும் சிலர் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்படிப் பட்டவர்கள் பெரும்பாலும் விவாதங்களை சந்திக்க விரும்ப மாட்டார்கள். "நாம் யாருடன் வேண்டுமானாலும் விவாதம்செய்ய தயார்" என்று பொது மேடைகளில் வாய் கிழிய கூக்குரலிடுவார்கள். சம்பந்தப் பட்டவர்கள் முன்னிலையில் எதையுமே பேச மாட்டார்கள்.

அது போல்,  தான் இருக்கின்ற கொள்கை பிழையானதாக இருந்தாலும் மக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக எவ்வித சவால்களையும் ஏற்றுக் கொள்ளும் சில மௌலவிகளும் இருக்கின்றனர்.
(விவாதங்களின் பொது பொது அவர்களின் சுய ரூபம் வெளிப்பட்டு விடும்)

அதே நேரம் தாம் கொண்ட கொள்கை உண்மையானது. அதை எங்கும் எப்போதும் எப்படியும் நிரூபிக்கத் தயார் என்று சொல்லுகின்ற சத்திய வாதிகளும் இருக்கின்றனர்.

உண்மையிலே ஒருவன் தான் கொண்ட கொள்கை உண்மை என்றால் அதை எப்பொழுதுமே மக்கள் மன்றத்தில் நிரூபிக்கத் தயாராக இருக்க வேண்டும். அது தான் பகுத்தறிவை பயன்படுத்தி சிந்தித்து செயல் படும் மக்களிடையே எடுத்துக்காட்டாக இருக்கும். 
இஸ்லாமும் அதனைத் தான் வலியுறுத்துகிறது. "விவேகத்துடனும் அழகிய முறையிலும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக. அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக. இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன். நேர்வழி பெற்றோரையும் அறிந்தவன்" (அல் குர்ஆன்- 16: 125)

இஸ்லாதை தெளிவாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தால் விவாத சவால்களை நாம் ஏற்றாக வேண்டும் என்று இந்த இறை வசனம் நமக்கு சொல்கிறது. விவாதங்கள் கூடாது, பயனற்றது என்று தங்கள் பலவீனத்தை வெளிக்காட்டித் திரிபவர்களுக்கும் இதுவே போதுமானதாகும்.
எனவே சத்தியப் பிரச்சாரத்தை மேற்கொள்வதில் விவாதங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விவாதங்கள் பொது மக்களுக்காகவே.
இரு வேறுபட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் பேசப் படுகின்ற பொழுது பொது மக்கள் சரியான கருத்தையும் யாரிடம் உண்மையிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்வதற்குத் தான் விவாத களத்தை ஏற்பாடு செய்கிறோம். பொது மக்களுக்கு இதெல்லாம் தேவையில்லை உலமாக்களுக்குள் பேசிக்கொள்வோம் என்றால் அப்படிப் பட்ட விவாதங்களில் எவ்வித புண்ணியமும் இல்லை.
உலக வரலாற்றிலே விவாதம் செய்தவர்கள் சத்தியத்தை, களத்தில் ஏற்றுக் கொண்டார்கள் என்ற செய்தி மிகவும் அரிதாகவே உள்ளது. (இல்லைஎன்று தான் சொல்ல வேண்டும்) எனவே விவாதம் என்று வந்தாலே அது பொது மக்களுக்குறியது தான். என்பதை விவாதம் செய்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

விவாத ஒழுங்குகள்.
சத்தியத்தை மக்களுக்கு சொல்வதற்குத் தான் விவாதங்கள் என்றாலும் வெறுமனே ஒரு பயான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது போல் விவாதங்களை ஏற்பாடு செய்யக் கூடாது. அவரவர் மார்க்கத்தை, கொள்கைகளை பேச சுதந்திரம் வழங்கியிருக்கும் ஜனநாயகத்துக்கு விவாதம் என்ற பெயரில் தொல்லை கொடுக்கக் கூடாது.
ஒருவரின் சொல், செயல்கள் பிழையானது, அசாத்தியமானது  என்பதை அவரவர் முன்னிலையில் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பது தான் விவாதம். இரத்த நாளங்களிலெல்லாம் செய்த்தான் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் தனக்குப் பின்னால் பேசப்படுவதையே விரும்ப மாட்டார்கள். கேள்விப் படுவதற்கு  எல்லாம் ஆவேசம் கொள்ளும் மனிதர்கள் தன் முன்னிலையில் தன் தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் போது ஆத்திரமடையத் தான் செய்வார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதையெல்லாம் கட்டுப் படுத்திக் கொள்பவன் தான் உண்மை இறை விசுவாசியாக இருக்க முடியும்.
என்றாலும் மனிதர்களுக்கு தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ள காரணத்தால் விவாதங்கள் என்று வரும்போது இரு சாராருக்கும் பாதிப்பு ஏற்படாத மாதிரியும் மக்களுக்கு சத்தியம் சரியாக போய் சேர வேண்டும் என்பதற்காகவும் இரு சாராருமே சேர்ந்து சில முன்னேற்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் முன்கூட்டியே செய்து கொள்ள வேண்டும். விவாதம் என்ற பெயரில் சண்டை பிடிக்கக் கூடாது. 

உதாரணமாக; எந்த தலைப்பில் விவாதம் செய்வது, யார் யார் விவாதிப்பது, எந்த இடத்தில் எப்போது விவாதிப்பது, விவாதம் செய்யும் தலைப்புகளில் இரு சாராருடைய நிலைப் பாடுகள் என்னென்ன, ஒருவர் எவ்வலவு நேரம் பேசுவார், நேரத்தை கண்காணிப்பவர்கள் யார், மேடை ஒழுங்குகள் என்னென்ன, செலவுகளுக்கு பொருப்புதாரிகள் யார், வீடியோ பண்ணுவது யார், தமது வாதங்களை எதன் அடிப்படையில் நிரூபிக்க வேண்டும் என்பன போன்ற ஏராளமான தகவல்களை இரு சாராரும் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்து அல்லாஹ்வை முன்னிருதி சாட்சிகளையும் ஏற்படுத்தி ஒப்பந்தம் போட்டால் தான் விவாதம் ஒன்றை சீராக நடத்தி முடிக்க முடியும்.

விவாதம் ஒன்று இப்படி இல்லாவிட்டால் அவரவர் நினைத்த படி நினைத்ததையெல்லாம் பேசி, சத்தியத்தை அறிய வந்த மக்களின் நேரத்தை வீணடித்து மக்கள் மத்தியின் பாரிய குழப்பத்தையும் சச்சரவுகளையும் ஏற்பத்தி விடும். அல்லாஹ்வின் மார்க்கத்தை தெளிவு படுத்துவதற்காகத் தான் விவாதங்கள் நடைபெற வேண்டும்.

சத்தியத்தை மறைக்காமலும் அசத்தியத்தோடு கலக்காமலும் நாம் செயல் பட்டாலே நமக்கெதிரான சவால்களை முறியடிக்க முடியும்.
விவாதங்கள் என்று வருகின்ற போது தூய எண்ணமில்லாமல் நாமும் மௌலவி ஆகி விட்டோமே! என்று தம் சுய கௌரவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒரு காலமும் நாம் களத்தில் இறங்கி விடக்கூடாது. இன்று மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப மார்க்கத்தை வளைத்து சொல்லுகின்ற சில 'கொள்கையில்லா கொள்கை வாதிகள்' இப்படி செயல்படுகின்ற காரணத்தால் ஏகத்துவா வாதிகளுக்கே தலைகுனிய வேண்டிய சூழ் நிலை ஏற்படுகின்றது. சத்தியத்தை நிலை நிறுத்த அல்லாஹ்வே போதுமானவன்.

தவ்ஹீத் போர்வை போர்த்திய போலி தவ்ஹீத் வாதிகளே!
நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஏகத்துவக் கொள்கையை  ஏற்றவர்களானால் மக்களை தக்கவைப்பதற்காக நீங்கள் நடிக்கும் நாடகத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். தமக்கென்ற எவ்வித கொள்கையும்ற ஜமாததே இஸ்லாமி இயக்கத்தோடு சேர்ந்து கொண்டு மார்க்கத்தில் சமரசம் செய்ய நினைத்தால் உங்களுக்கும் பொலன்னறுவை சுங்காவில் கொள்கை(?) சகோதரர்களின் நிலைமை தான் ஏற்பட்டு விடும். 
பெரும்பான்மையினரைத் தான் மக்கள் விரும்புவார்கள் என்பதற்காக அங்கே, ஏகத்துவ  வாதிகளுக்காக கட்டப்பட்ட பள்ளிவாசலில் ஜமாத்தே இஸ்லாமியோடு இனைந்து நாடகமாடி கூட்டம் சேர்க்க நினைத்ததில் சத்தியத்தை நிலை நாட்ட முடியாமல் தத்தளிக்கின்றனர்.
சத்தியம் எப்போதுமே ஒன்றாகத் தான் இருக்கும். பலதாக இருக்காது. சத்தியத்தை தெளிவாக சொன்னால் கூட்டத்தை சேர்ப்பதும் சேர்க்காமல் இருப்பதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ள விசயம். அதில் நமக்கு எந்த வேளையும் இருக்கக் கூடாது.

சந்தர்ப்பதை பயன்படுத்தி மக்களை திசை திருப்ப முனையும் அசத்திய வாதிகளே!
குறிப்பாக, பொலன்னறுவை மாவட்டம் சுங்காவில் பகுதியை சேர்ந்த பழீல் மௌலவி கூட்டத்தினரே! 
நீங்கள் மார்க்கம் என்று செய்து வரும் கொடியேத்தம், மௌலிது, மீலாது வைபவங்கள் இன்னும் தவ்ஹீத் ஜமாஅத் எதிர்க்கக் கூடிய ஏனைய உங்கள் வழிபாடுகள் இஸ்லாத்திற்கு உட்பட்டது என்று உங்களுக்கு நிரூபிக்க முடியுமானால் மேற் சொல்லப்பட்ட முறைப்படி ஒப்பந்தம் போட்டு மக்கள் மன்றத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க நீங்கள் தயாரா?
சத்தியதை நிலைநாட்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது.

விவாத சவாலை ஏற்றுக் கொள்வீர்களானால் முறைப்படி உங்கள் கருத்துக்களை விவாதிக்க தயாராக உள்ளவர்களின் அமைப்பின் லெட்டர் ஹேடில் விவாதிக்க விரும்பும் தலைப்புகளை  பட்டியலிட்டு கடிதம் மூலம் எமது தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கவும்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம்
241  A, ஸ்ரீ சத்தர்ம மாவத்த,
மாளிகாவத்த,
கொழும்பு 10.
கடிதம் தவறும் பட்சத்தில் நீங்கள் விவாதம் செய்ய தயாரில்லை என்ற செய்தி  அம்பலப் படுத்தப் படும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
"சத்தியம் வந்தது.அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக் கூடியதாகவே உள்ளது." (அல்குர்ஆன் 17:81)

செய்திகள்