(கொள்கை சகோதரர்கள் சிலரின் ஆலோசனையின் பிரகாரம் இக்கட்டுரையிலிருந்து சில வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன)
அன்பின் இணையதள வாசகர்களே!
நமது தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் "பொலன்னறுவை தப்லீக் ஜமாத்திற்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் எச்சரிக்கை. சத்தியத்தை தடுத்தால், அசத்தியத்தை சமாதியாக்குவோம் " என்ற தலைப்பில் கட்டுரையொன்று வெளியிட்டிருந்தோம். அதில் பொலன்னறுவை மாவட்டம் கதுருவல, முஸ்லிம் கொலனி தவ்ஹீத் சகோதரர் ஒருவரின் வீட்டில் அலாவுதீன் என்ற ஒருவர் நடந்து கொண்ட கேவலமான நிலையை சுட்டிக் காட்டி அதை கண்டித்தோம்.
இத்தகவல் பல இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்தது. சில நாட்களில் குறிப்பிட்ட அப்பகுதி மக்களுக்கு www.sltjkaduruwela.tk என்ற தளத்தின் மூலம் அந்தக்கட்டுரையை படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ் யாரை நாடி அந்தக் அக்கட்டுரை எழுதப் பட்டதோ அந்த அலாவுதீனுக்கே அதனை படிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
தான் புகழப்பட்டிருக்கும்(?) அக்கட்டுரையை படித்ததும் இதை அப்பகுதி தவ்ஹீத்வாதிகள் தான் எழுதியிருப்பார்கள் என்ற என்னத்தில் கட்டுயை பிரதி செய்து எடுத்துக் கொண்டு அவர்களை பலிவாங்கும் எண்ணத்தில் ஊர் முழுவதும் வாசித்துக் காட்டிக் கொண்டு திரிந்திருக்கிறார்.
தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொண்ட அலாவுதீன்
அக்கட்டுரையில் தன்னை மிகவும் கேவலமாக எழுதியுள்ளதாகவும் அலாவுதீன் என்று எழுதியதாகவும் மக்கள் மத்தியில் கூறி தவ்ஹீத் வாதிகளுக்கு எதிராக கூட்டம் சேர்க்க முயற்சித்துள்ளார்.
தனது பேரை தானே பாரக்கும் போது கேவலமாகத் தெரிந்துள்ளது அந்த அலாவுதீனுக்கு....
பேருக்கு பக்கத்தில் மௌலவி என்று கூட போடமல் என்னை கேவலப் படுத்தியிருக்கிறார்கள் என்று மக்களிடம் புலம்பியிருக்கிறார்.
மறண வீட்டில் மனிதன் போல் நடந்திருந்தால் கட்டுரையையே எழுதியிருக்க மாட்டார்களே!
இதை யோசிக்க மறந்திருக்கிறார் அந்த மௌவ்......
அலாவுதீன் கோபப்பட்டது எதற்காக?
தனது பெயர் பயன் படுத்தப பட்டதற்கு யாருக்கும் கோபம் ஏற்படாது. தான் செய்தகேவலங்கெட்ட செயலை உலக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டார்களே! என்ற ஏக்கம் தான் கோபத்தை ஏற்படுத்தி தவ்ஹீத் சகோதரர்களை தாக்க வண்டும. எள்ற எண்ணத்தை ஏற்படுதததியுள்ளது.
தான், சத்தியத்தை தெளிவாக சொன்ன சகோதரரை பேசவிடாமல் தடுத்த குற்றத்தை மறைப்பதற்குத் தான் இந்த நாடகத்தை நடித்திருக்கிறார்.
அனியாயத்திற்கு துணை நின்ற பொலன்னறுவை தப்லிக் மர்கஸ் நிர்வாகிகள்
அலாவுதீனின் அடாவடித்தனத்திற்கு துனை நின்ற பள்ளி நிர்வாகம் இதன் விளைவாக தவ்ஹீத் சகோதரர்களை கலந்துரையாடலுக்கு அழைத்து கடிதம் அணுப்பியிருக்கிறார்கள். கலந்துரையாடலுக்கான நேரம் நெருங்கும் போது குறிப்பட்ட பள்ளி வாசலுக்கு முன்னான் ரௌடியின் குண்டர் கூட்டம் கூடி கலந்துரையாடலுக்கு வரும் தவ்ஹீத் வாதிகளை தாக்க திட்டம் தீட்டி விட்டனர்.தகவல் அறிந்த நம் சகோதரர்கள் பள்ளிவாசலுக்கு போகாமல் நிர்வாகி ஒருவரை டெலிஃபோனில் தொடர்பு கொண்டு தகவலைக் கூற இது அலாவுதீனின் சதி என்று கூறி நிர்வாகத்துக்கு இது தெரியாதென்று மழுப்பியிருக்கிறார்.
காலையிலிருந்தே அலாவுதீன் ஆள் சேர்த்ததும், விரலாட்டிகளுக்கு அடிக்கப் போகிறோம் என்று ஊரில் கதைகள் பரவியதும் நிர்வாகத்திற்கு எட்டாத செய்தி தானா? (தகுதியில்லாத) பள்ளித் தலைவர் ஃபாஹிருக்கு இது தெரியாதா?
நிர்வாகத்தில் ஓரிருவருக்கு தெரியாமல் இருக்கலாம். எல்லோருக்கும் தெரியாதென்பது மகா பெரும் பொய்யாகும்.
நம் சகோதரர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள் என்று தெரிந்ததும் அவர்கள் கூடி நின்ற வீட்டை நோக்கி குண்டர்கள் திருப்பி விடப்பட்டனர். அங்கே கூடி நின்று கூக்குரலிட்டவர்கள் போலிஸை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
வந்த போலிஸ் அதிகாரிகளிடம் நம் சகோதரர்கள் ஆரம்பத்திலிருந்து நடந்த தகவலகளை முழுமையாக தெரிவித்தனர். அப்படியே பிரச்சினை ஓய்நதது.
எல்லை மீரிய அதிகார துஷ்பிரயோகம்
பிரச்சினையெல்லாம் ஓய்ந்த பின்னால் மறுபடியும் தமது மஹல்லாவை சேர்ந்த மூன்று தவ்ஹீத் வாதிகளை ரகசிய விசாரணைக்கு அழைத்திருக்கிறது அந்த ப.ப.சபை. விசாரணையின் போது இணைய தளத்தில் மொக்கன் அலாவுதீனின் பெயரை பயன் படுத்தியது தவறு என்றும் அதை வாபஸ் வாங்கி மன்னிப்புக் கேட்டு அதே இணைய தயத்தில் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று மிரட்டி கையொப்பமெடுத்துள்ளது அந்த பள்ளி நிர்வாக சபை.
குர்ஆன் ஹதீஸ் படி செயல்படவும் தடை.
அதனோடு சேர்த்து இனிமேல் உங்கள் வீடுகளில் நடைபெறும் நல்ல,கெட்ட காரியங்களுக்கு எங்கள் இமாமே(?) தலைமை தங்குவார் என்றும் கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்ட நமது சகோதரர் எங்கள் வீட்டில் நடக்கும் காரியங்களை குர்ஆன் ஹதீஸ் பிரகாரம் எங்கள் மௌலவியை வைத்து நாங்கள் செய்ய முடியாதா? என்று கேற்க குர்ஆன் ஹதீசெல்லாம் இங்கே பேசாதே என்று அவரை தாக்குவது போல் முகத்தில் பாய்ந்திருக்கிறார் ப. தலைவர்.
மார்க்கத்தை முறையாக சொல்லவிடாத அலாவுதீன் மற்றும் மார்கஸ் பள்ளி நிர்வாகிகளே!
நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தையும் இலங்கையின் ஜனநாயகத்தையும் அவமதித்து நடந்திருக்கிறீர்கள். இப்போதாவது உங்கள் தீர்ப்பு மாறவில்லையானால் மிக விரைவில் சட்டரீதியான நடவடிக்கை உங்கள் மீது மேற்கொள்ளப் படும்.
சத்தியத்தை தடுக்க நினைத்தால் யாருக்கும் இதே கெதி தான்....
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்'ஆன்: 61 :08 )