1.2.11

பொலன்னறுவை தப்லீக் ஜமாத்திற்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் எச்சரிக்கை. சத்தியத்தை தடுத்தால், அசத்தியத்தை சமாதியாக்குவோம்.



சத்தியத்தைத் தடுத்தால், அசத்தியத்தை சமாதியாக்குவோம்.
பொலன்னறுவை மாவட்டம் கதுருவள  பகுதியில் ‘முஸ்லிம் கொலனி’ என்றழைக்கப் படும்  முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் வாழும் ஒரு கிராமம் இருக்கிறது. அங்கே பல்லின மக்கள் வாழ்வதோடு படித்த முஸ்லிம் சகோதரர்களும் நிறையவே இருக்கின்றனர். இந்த பகுதியில் எவ்வலவு தான் படித்தவர்கள் வாழ்ந்தாலும் இஸ்லாம் மார்க்கத்தை சரியாக படித்து விளங்கிய ஒரு மௌலவியை கூட பார்க்க முடியாதது தான் கவலைக்குறிய விஷயம்.
மார்க்க விளக்கம் பூச்சியமாக இருக்கும் இந்த ஊர் மக்களிடையே சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தெளிவாக எடுத்து வைக்க வேண்டும் என்ற நோக்கோடு சில சகோதரர்கள் சமீப காலமாக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தோடு தொடர்புகளை ஏற்படுத்தி அதன் கிளை ஒன்றை உருவாக்கி மார்க்க விளக்க நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் மூலம் தூய இஸ்லாத்தை தெளிவாக மக்களுக்கு எடுத்துவைப்பதர்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் மாற்றுக் கொள்கையுடைய ஆலிம்கள் வளர்ச்சியைத் தாங்க முடியாமல் பலவிதமான முறைகளில் நம் பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கின்றனர். ‘அல்லாஹ்வுக்கே  எல்லாப் புக்களும்’ இன்று வரை அவர்கள் செய்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
மரண வீடும்,மார்க்கத்தில் இல்லாத தப்லீக் பிரச்சாரமும்.
அப்பகுதியில் இன்று (01.02.2011) காலை தௌஹீத் சகோதரர் ஒருவரின் தந்தை மரணித்து விட்டார். குறிப்பிட்ட சகோதரரின் அழைப்பை ஏற்று மய்யித்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக நமது சகோதரர்கள் அவரின் வீட்டுக்கு சென்றார்கள்.
காலையிலிருந்து அங்கிருந்த நமது சகோதரர்கள் பகல் உணவுக்காக வீட்டுக்கு வந்த போது குறிப்பிட்ட பள்ளி நிர்வாகம் தங்கள் ஆதிக்கத்தை தௌஹீத் சகோதரரின் வீட்டாரிடையே காட்டியுள்ளார்கள். எங்கள் நிர்வாகத்துக்கு கீழ் இருக்கும் நீங்கள் நாங்கள் சொல்லுகின்ற படி தான் நடக்கவேண்டும் என்று மிரட்டி மார்க்கத்திற்கு முரனாக மய்யித்துக்கான காரியங்களை நடத்த முற்பட்டிருக்கிறார்கள்.
நமது சகோதரர்கள் அவ்விடத்தில் இருக்கும் போதே ரகசியமாக தப்லிக் மர்கஸ் இமாம் அலாவுதீன் தலைமையில்  மய்யித்தை குளிப்பாட்டி, கபனிட்டு, சந்தூக்கிலும் ஏற்றி விட்டனர். மழை காரணமாக நம் சகோதரர்கள் சற்று ஒதுங்கி ஒரு கூடாரத்தில் இருக்கும் போது. மய்யித்தை வீட்டு முன் வைத்து கூட்டு துஆ ஓத முனைந்த போது மய்யித்தின் சொந்தக்காரர் ஒருவர் அதைத் தடுத்து அந்த இடத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் சப்வான் தவ்ஹீதீ அவா்களை உரையாற்ற அழைத்தார்.சகோதரர் சப்வான் அவா்கள் பேச ஆரம்பிக்கும் முன்பே தப்லீக் இமாம் அலாவுதீன் பிரச்சினை செய்ய முனைந்தும் அது அவருக்கு கைகூடவில்லை.
சந்தர்ப்பத்தை கருத்தில் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தெளிவு படுத்தியவராக சகோதரர் சப்வான் தனது உரையை ஆரம்பித்தார். குர்ஆன் மற்றும் ஹதீஸில் உள்ளபடி  தான் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும், அதனை மீறி செய்யப் படும் காரியங்கள் படுபாவமான நரகத்துக்கு இட்டு செல்லும் வழிகேடுகள் என்று தெளிவு படுத்தி மிகச் சிறப்பான முறையில் தனது பயானை செய்து கொண்டிருந்தார்.
அந்நேரத்தில் சட்டைக் கைகளை மடித்தவன்னம் சகோதரர் சப்வானை முரைத்துப் பார்த்துக் கொண்டு முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு சகோதரர் சப்வான் சொல்வதற்கெல்லாம் வித்தியாசமாக தலையை அசைத்துக் கொண்டு அவருக்கு  நேரெதிராக நின்றார் மௌலவி(?) அலாவுதீன்.


அதனைத் தொடர்ந்து மனிதன் மரணித்த பின் செய்ய வேண்டிய கடமைகளை சொல்ல ஆரம்பித்து; குளிப்பு மற்றும் கபன் செய்யும்  முறையை வழிகேடுகளை சுட்டிக் காடியவன்னம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே 'நேரமில்லை, இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்' என்று சகோதரர் சப்வானின் பேச்சை நிறுத்தும் படி அலாவுதீன் கேற்க சகோதரர் சப்வான் அந்த வீட்டார்களை அழைத்து என்ன செய்யலாம் என்று கேட்டார் அப்போது மௌலவி நீங்க பேசுங்க என்று அந்த வீட்டார் நமது சகோதரர் சப்வான் அவா்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். மறுபடியும் சப்வான் அவா்கள் பேச ஆரம்பிக்க அலாவுதீன் ‘ஆமீன் அல்ஹம்துளில்லாஹி’  என்று மார்க்கம் சொல்லித்தராத கூட்டு துஆவை ஓதத் தொடங்கினார்.


மார்க்கத்தில் இல்லாததை செய்யாதீர்கள். அதை நிறுத்துங்கள் என்று சகோதரர் சப்வான் அவா்கள் அலாவுதீனுக்கு கூறினார். இதற்கு நான் தான் பொறுப்பு என்று அவர் தம்பட்டம் அடித்தார். அதைப் பார்த்திருந்த ஊர் மக்களில் சிலர் அவரை தூண்டிவிடும் வன்னம் ‘நீங்க ஒதுங்க மௌலவி‘ என்று கூச்சலிட கூட்டத்தைக் கண்டு வீரியம் கொண்ட அலாவுதீன் வீட்டார்களின் சொல்லையே கேற்காமல் தடுக்கத் தடுக்க இரு கைகளை ஏந்தி கூட்டு துஆவை  ஓதி முடித்தார்.
தங்கள் கொள்கைக்கு சாதமாக அறியாத மக்களை திசை திருப்பும் ஆலிம்கள்.
இச்சம்பவத்தின் போது இவர்கள் இங்கேயும் ஊரை பிரிக்க பார்க்கிறார்கள். இனிமேல் இவர்களுக்கு எதுவுமே செய்ய விடக் கூடாது என்று மய்யித்துக்கு வந்தவர்களில் சிலர்  பேச ஆரம்பித்தனா்.
மிரட்டும் அலாவுதீனும்,மிரளப் போகும் அலாவுதீனும்.
சம்பவம் நடந்து  நம் சகோதரர்கள் இடத்தை விட்டு வந்த பின் அலாவுதீன் ச்ழ்த்ஜ் மாநிக்கம்பிட்டி கிளை பொருளாளர் சகோதரர் அபு பக்ரை டெலிபோனில் தொடர்பு கொண்டு; “என்னை அவர்கள் அழைத்ததால் தான் நான் அங்கு வந்தேன். வீட்டர்களின் சொல்லுக்காகத் தான் அவரை பேச விட்டேன். இப்படி பேசிவிட்டார். நான் அப்பவே அடிக்கத்தான் நினைத்தேன். ஏதோ விட்டு விட்டேன். இனிமேல் அவரை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு குர்ஆன் மதரசா கூட நடத்த வேணாமென்று சொல்லியிருக்கிறேன். இனிமேல் குர்’ஆன் மத்ரசாவையும் நடத்த விட மாட்டோம்” என்று மிரட்டியுள்ளார்.
பித்அத்துக்களுக்கு துணை போகும் பள்ளி இமாம்களுக்கு!
மார்க்கத்திற்கு விரோதமான மார்க்கத்தில் இல்லாத காரியங்களை செய்யும் , மவ்லவிமார்க்ள் தங்கள் கருத்தை கருத்தால் வெள்ளத் தகுதியிருந்தால் மேடைக்கு வாருங்கள் அதை விட்டுவிட்டு அதர்ம வழியைக் கையில் எடுத்தீர்கள் என்றால் விளைவு பயங்கரமானதாக இருக்கும்.
இலங்கையின் சட்டப் படி ஒருவர் இறந்துவிட்டால் அவருக்குறிய காரியங்களை அவரின் வீட்டார் விரும்பியபடி செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. இதே நேரம் இதனை யாராவது தடுக்க முயன்றால் நாம் அவர்களுக்கெதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என்பதையும் மனதில் பதிந்து கொள்ளுங்கள்.
நமது சகோதரர்களுக்கு எதிராக ஏதும் சூழ்சிகள் செய்யப்பட்டு அவா்கள் பிரச்சினைகளுக்குள்ளாக்கப்பட்டால் யார் அந்தக் காரியத்தில் ஈடுபடுகிறாரோ அவருக்கு எதிராக சட்ட ரீதியிலான முடிவுகளை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் கையிலெடுக்கும் என்பதையும் நாடளாவிய ரீதியில் அவா்களுக்கு எதிரான பிரச்சாரம் முடுக்கிவிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
“நீங்கள் நன்கறிந்து கொண்டே சத்தியத்தை அசத்தியத்துடன் கலக்கவோ அதை மறைக்கவோ வேண்டாம்” (அல் குர்ஆன்- 2 : 42)
உண்மை வந்தது. பொய் அழிந்தது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது. (அல்குர்ஆன் 17:81)

செய்திகள்