30.7.11

SLTJ காலி (நாவின்ன) கிளையால் நடத்தப்பட்ட பயான் நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம்.

சென்ற 22.07.11 அன்று அல்லாஹ்வின் பேருதவியால் பல சிரமங்களுக்கு மத்தியிலும் ஏற்பாடு செய்யப்பட்ட மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதில் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் “ரமழானின் மகிமையும் மங்கிப்போகும் மாநபி வழியும்”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஏகத்துவதின் சாயல் கூட சென்றடையாத அப்புதிய பகுதியில் பல சகோதர சகேதரிகள் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.






ஷைக் மதார் பள்ளில்வாசலில் நடைபெற்ற இலவச விளம்பரம்.
29.07.11 அன்று குறிப்பிட்ட பள்ளிவாசலில் ஜும்ஆ உரையாற்றிய மவ்லவி(?) தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பயான் நிகழ்ச்சியின் விரிவுரையை வழங்கியிருக்கிறார். அத்தோடு மார்க்கம் அறியாதவர்கள், இலக்கணம் தெரியாதவர்கள், அரபி படிக்காதவர்கள், நரகவாதிகள் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி உலரிக் கொட்டியிருக்கிறார்.
முதலில், மிகவும் எளிய முறையில் விளம்பரம் செய்து குறுகிய வட்டத்தில் நடாத்தப்பட்ட பயான் நிகழ்ச்சியை ஊர் மக்களுக்கு அறியத்தந்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்து, இப்படி உங்கள் பள்ளிகளில் மட்டும் குரைக்காமல் வெளியில் வந்து சம்பந்தப்பட்டவர்களேடு பேசிநீர்களேயானால் மிகவும் மதிக்கத் தக்கதாக இருக்கும்.

திரானியிருந்தால் நேரில் வந்து விவாதிக்கத் தயாராகுங்கள்.
அரபு தெரியாதவர்கள் யார்?
இலக்கணம் தெரியாதவர்கள் யார்?
மார்க்கம் தெரியாதவர்கள் யார்?
நரகத்திற்கு இட்டுச்செல்லும் படுபாவகரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் யார்?
போன்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க நாவின்ன ஸின்தா ஷைக் மதார் பள்ளியின் தலைவர்(?) உற்பட அங்கு உரையாற்ற வரும் மவ்லவிமார்கள் தயாரா? 


அன்பார்ந்த 'காலி' வாழ் முஸ்லிம்களே!
இவர்கள் விவாதிக்க தயாரில்லையென்றால்   அரபு தெரியாதவர்கள், இலக்கணம் தெரியாதவர்கள், மார்க்கம் தெரியாதவர்கள், நரகத்திற்கு இட்டுச்செல்லும் படுபாவகரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் யார் நீங்களே தெரிந்து கொள்ளங்கள்.

செய்திகள்