26.4.12

அசத்திய மூலாதாரங்களின் அடி அசைந்து போனது

தவ்ஹீத் கொள்கையை எதிர்ப்போரிடம் தஃவாவை முன்வைக்கும் மிகச் சிறந்த ஊடகமான விவாதக்களம், தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை வரலாற்று மாணவர்கள் நன்கு அறிவர். அந்தவகையில், இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற கருப்பொருளில் 2012 ஏப்ரல் சனி 21 ஞயிறு 22 ஆகிய இரண்டு தினங்களில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் நடந்த இந்த விவாதமும் இலங்கை தஃவா வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.
www.onlinepj.comல் இரண்டு நாள் விவாதமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இணையதளம் மூலம் தமிழ்க்கூறும் நல்லுலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த விவாதத்தைப் பார்த்தனர். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 30க்கும் மேற்பட்ட கிளைகளில் இருந்து 200 பேரும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கம் சார்பாக 200 பேரும் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.
இரண்டாம் நாள் இறுதி அமர்வு கேள்வி பதில் அரங்கமாக இருந்தது. இரண்டு பக்கமும் 8 கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதித் தருணம் வரை விவாதம் விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்து முடிவடைந்தது.
விவாதிக்க வந்திருந்த மார்க்க அறிஞர்களுக்கும் விவாதத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவிற்கும், அரங்கை அமைதியாக வைத்துக் கொண்ட வாலண்டியசுக்கும், அமைதியாக இருபக்க வாதப் பிரதிவாதங்களையும் செவிமடுத்த பார்வையாளர்களுக்கும்,  அல் அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடத்தை விவாதத்திற்காக அனுமதி வழங்கிய பாடசாலை அதிபர் அவர்களுக்கும், இலங்கையில் நடந்த விவாத்ததை சென்னையிலிருந்து ரேடி ஒளிபரப்புச் செய்த வெப் மாஸ்டர் அப்பாஸ் அவாகளுக்கும் விவாதத்திற்கான பல்வகை உதவி புரிந்த தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் மற்றும் எல்லா வகையிலும் இந்த விவாதத்திற்காக உதவிய அனைவருக்கும்   ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
அசத்திய மூலாதாரங்களின் அடி அசைந்து போனது
தவ்ஹீத் ஜமாஅத்தின் இளம் உலமாக்களின் சத்திய வாதங்களுக்கு முன்னால் அசத்திய மூலாதாரங்கள் (இஜ்மா, கியாஸ்) தவிடுபொடியானது. அல்ஹம்துலில்லாஹ்.
விவாதம் பற்றிய விரிவான தகவல்களை இன்ஷா அல்லாஹ் எமது இணையதளத்தில் விரைவில் எதிர்பாருங்கள்.

No comments:

Post a Comment

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்