28.9.11

அநுராதபுரத்தில் இடிக்கப்பட்ட தர்கா. பின்னணி என்ன?

தர்ஹாக்கள் குறித்து இஸ்லாத்தின் நிலை 
 
“உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்
றிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்.
யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்  
(நூல்: புகாரி)

கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும், அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்’   
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),                                                            நூல்: திர்மிதி.

அநுராதபுரத்தில் நடந்தது என்ன?

சமீபத்தில், அநுராதபுரத்தில் முஸ்லிம்(?)களின் கட்டுப்பாட்டில் இருந்த தர்காவொன்று புத்த பிக்குகள் உள்ளிட்ட கும்பலால் திட்டமிட்டு இடிக்கப்பட்டது.
தர்கா இடிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலர், “இப்படியான செயலுக்கு யாரும் ஒப்புதல் அளித்திருக்கவில்லை” என்றும், “சட்டத்தை யாரும் அவரவர் கைகளில் எடுத்துகொள்ளக்கூடாது” என்றும் “சமூகங்கள் இடையிலான நல்லுறவை யாரும் கெடுக்கக்கூடாது” என்றும் தெரிவித்தார். 
ஆனால் “பௌத்தர்கள் புனிதமாக கருதும் ஒரு இடத்தில் அது உள்ளது” என அதனை இடிப்பதற்காக சென்றிருந்த குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த பௌத்த பிக்கு கூறினார். இந்த தர்காவை இடித்துவிட வேண்டும் என மத விவகார அமைச்சகத்தில் தாங்கள் முறையிட்டிருந்ததாகவும், ஆனால் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே அதனை தாங்களாக இடித்துவிட்டதாகவும் அந்த பிக்கு தெரிவித்தார்.

தர்காவை இடித்த இந்தச் சம்பவம் போலிசாரின் முன்னிலையிலேயே நடந்தது. இந்தத் தர்கா, பௌத்தர்கள் புனிதமான இடமாகக் கருதும் சிங்கள மன்னன் துட்டகெமுனுவின் அஸ்தி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே அமைந்திருப்பதால் அது இடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பேசிய அனுராதபுரம் மொஹிதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் அப்துல் ரசாக், இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்ததாகவும், பிக்குமார் அடங்கலாக சுமார் 60 பேர் கொண்ட குழு ஒன்று இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறினார். அதேவேளை அந்த தர்கா தாக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க வந்த முஸ்லிம்களை பொலிஸார் தடுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தர்காக்களை நாம் உடைக்களாமா?

உடைக்கப் பட்டது தர்காவானாலும்
கை வைத்தது முஸ்லிம்களின் உறிமை மீதல்லவா!
நாளை எங்கள் பள்ளிகளை நோக்கி இக்கும்பல் --
வரமாட்டார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம்?
பாதுகாப்பு அமைச்சரா?
போலீஸ் துறையா?
ஜனாதிபதி அவர்களா?

இலங்கை வாழ் முஸ்லிம்களே! 
சிறுபான்மை முஸ்லிம்கள் எதை செய்தாலும், வாய் திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இவர்கள் தர்காவை இடிக்கிறார்கள். நாளை பள்ளியையும் இடிக்க வருவார்கள். இதனால் தான் குறல் கொடுக்கிறோம். எங்களுக்கு தர்கா தேவையில்லை. முஸ்லிகளின் உறிமைகள் தான் அவசியம். தர்காவை கும்பிடுவது தவறு என்பதால் அது (உறியவர்களால்) உடைக்கப் பட்டிருந்தால் அவர்களை முதலில் வாழ்த்துவது நாங்கள் தான். புனித பூமியில் அந்த தர்கா இருந்தது தான் அது உடைக்கப் படுவதற்குக் காரணமாம். சட்டத்த கையிலெடுக்கும் அதிகாரம் நம் யாருக்கும் இல்லை.
இதை இப்படியே விட்டால் நாளை இலங்கை முஸ்லிம்களே கேள்விக்குறியாகி விடுவார்கள் அல்லவா....!

முஸ்லிம்களை மட்டம் தட்டும் இவ்விழி செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

2 comments:

  1. shaikumaarkal,soofikal, islathai valarthu muslimkalai otrumai paduthiyadu mun varalaaru,neenkal muslimkalai pirithu anniyarkaluku kaatigudupathu tharpodaiya varalaaru,unmaithaney;ithuthaan ungal dooya paniyaa?

    ReplyDelete
  2. ungaluku yepodu allah vidam irundu wahi varum dargahvai idipadarku

    ReplyDelete

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்