மரணித்தவர்களை வணங்கும் போலி முஸ்லிம்கள்
"பொலணறுவை, வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவசேனபுர, கட்டுவம்பில எனும் பகுதியில் இருந்து சுமார் 06km தூரத்தில் வனாந்தர பகுதியில் பல தசாப்தங்களுக்கு முன் அடங்கப்பட்ட ஹான் ஷாஹிபு வலியுல்லாஹ் நாயகம் என்ற புதிய அவ்லியாவின் கப்று உள்ளது. அதில் சென்ற வெள்ளிக்கிழமை (23.03.2012)அன்று கொடியேற்ற விழா நடைபெற்றது".
![]() |
கப்ரை வணங்கும் ஒருவரை படத்தில் காணலாம் |
இது பேஸ்புக்கிலிருந்து பெறப்பட்ட தகவல்
அன்பு வாசகர்களே!
ஆதாரமில்லாமல் மகான்கள் என்று நம்பப்படும் மையித்துகளிடம் பிரார்த்தணை செய்யக் கூடாது அவர்களுக்கு ஸஜ்தா செய்யக் கூடாது என்று ஆதாரங்களின் அடிப்படையில் நாம் கூறி வருகிறோம். அல்லாஹ்வின் அருளால் மக்கள் இன்று விழிப்படைந்து விட்டனர். மக்கள் தெளிவாக இருந்தாலும் மார்க்க அறிஞர்கள் போர்வையில் நடமாடுவோர் மூடத்தனமான வாதங்களை எடுத்து வைத்து செத்தவர்களைக் கடவுளாக்க முயற்சித்து வருகின்றனர். அது போன்ற ஒரு முயற்சியே இதுவும்.
தர்கா வழிபாட்டை எச்சரிக்கும் சில இறைச் செய்திகளை உங்கள் பாரவைக்கு விடுவதில் மகழ்ச்சியடைகிறேன்.
தர்கா வழிபாட்டை எச்சரிக்கும் சில இறைச் செய்திகளை உங்கள் பாரவைக்கு விடுவதில் மகழ்ச்சியடைகிறேன்.
- (நபியே!) உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)
- துன்பத்திற்குள்ளானவனின் அழைப்பிற்கு பதிலளித்து, அவனுடைய தீங்கை நீக்குகின்ற, மேலும் உங்களை பூமியின் பிரதிநிதிகளாக்குகின்ற அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? (நிச்சயமாக இல்லை) (அல்குர்ஆன் 27:62)
- அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)
- மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிகவழிகெட்டவன் யார்? அவர்களோ, இவர்களின் அழைப்பைப் பற்றி மறந்தவர்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 46:5)
- அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக பிரார்த்தித்தவனாக மரணித்தவன் நரகம் புகுந்துவிட்டான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் -ரலி, நூல்: புகாரீ 4497)
- யூதர்களும், கிறித்தவர்களும் தங்களின் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கியதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816
முஸ்லிம் - 529, 530, 531
அபூதாவூத் - 3227
நஸயீ - 703, 2046, 2047
முஅத்தா - 414, 1583
தாரமி - 1403
அஹ்மத் - 1884, 7813, 7818, 7822, 7894, 9133, 9849, 10726, 10727, 21667, 21822, 24106, 24557, 24939, 25172, 25958, 26192, 26221, 26363
இப்னு ஹிப்பான் - 2326, 2327, 3182, 6619
நஸயீயின் குப்ரா - 782, 2173, 2174, 7089, 7090, 7091, 7092, 7093
பைஹகீ - 7010, 7011, 11520, 18530
அபூயஃலா - 5844
தப்ரானி (கபீர்) - 393-411, 4907
இன்னும் ஏராளமான நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
- சமாதிகளில் கட்டடம் கட்டுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (முஸ்லிம் 1610, திர்மிதீ 972)
- கட்டப்பட்ட சமாதிகளை இடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (முஸ்லிம் 1609, திர்மிதீ 970)
- என் அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்காதீர்கள். (அஹ்மத் 7054)
என்றெல்லாம் கடுமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்து விட்டார்கள். 'நானே இறைவன்' என்று பிர்அவ்ன் கூறினான். இதை அல்லாஹ்வும் குர்ஆனில் சுட்டிக் காட்டுவதால் நானே இறைவன்' என்று நாமும் கூறலாம் என்று வாதிட முடியாது.
அது போலத் தான் இந்தத் தீயவர்களின் செயலையும் எடுத்துக் கூறுகின்றான். எனவே, கெட்டவர்களின் இந்தச் செயலை ஆதாரமாகக் கொண்டு தர்கா கட்டலாம் என்று வாதிடுவதும் அதில் வணங்குவதும் அறிவீனமாகும்.
அது போலத் தான் இந்தத் தீயவர்களின் செயலையும் எடுத்துக் கூறுகின்றான். எனவே, கெட்டவர்களின் இந்தச் செயலை ஆதாரமாகக் கொண்டு தர்கா கட்டலாம் என்று வாதிடுவதும் அதில் வணங்குவதும் அறிவீனமாகும்.
No comments:
Post a Comment
இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்