அபூ கப்பாப்
எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி என்பவர் பலவேசத்தில் முஜ்தஹிதுகள் பற்றி ஒரு
கட்டுரை என்று உளறிக் கொட்டியிருந்தார். பண்பற்ற பலவேசத்தினரும்
பகுத்தறிவின்றி அதைப் பதிவேற்றியிருந்தனர். அனைத்து சாக்கடைகளின்
களஞ்சியமாகப் பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம்டொட்கொம்
எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனியின் இந்த உளரலையும் முக்கியத்துவம் கொடுத்து
வெளியிட்டுள்ளது.
மூளையற்ற மூர்க்கத்தனம்தான் மார்க்கம்
என்று நினைக்கும் உளரல் உளநோயாளிகளுக்கு மறுப்பளிக்க முன்னர் இஜ்திஹாத்
பற்றி வாய்திறக்கவாவது இவர்களுக்கு நாதியிருக்கிறதா? என்பதை முதலில்
பார்த்துவிட்டு இவர் என்ன உளரியுள்ளார் என்பதை நோக்குவோம்.
“அவ்விரண்டிலும் காணப்படாத அம்சங்களுக்கான
தீரர்வை அவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட
பெரும்பாண்மை அறிஞர்களின் அங்கீககாரத்தைப் பெற்ற இஜ்மாவின் அடிப்படையிலும்,
கியாஸ் என்ற அணுமான விளக்கத்தின் அடிப்படையிலும் தமது கவனத்தைத்
திருப்பினர். அவ்விரண்டையும் துணை மூலாதாரங்கள் என்று பிற்காலத்தில்
அழைத்தனர்.”என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.